தெரிதல் என்பது தனித்தமிழ்ச் சொல்.. இதற்கும் தெள்> தெர்> தெரிதல் என்ற சொல்லுக்கும் பிறப்பியல் தொடர்பு உள்ளது. தெள்> தெர் என்றும் மாறும். இந்த ளகர ரகர மாற்றீடுகளில் கவனிக்கவேண்டிய முக்கியமான பழைய சொற்களில் ஒன்றுதான் மடி - மரி என்ற மாற்றீடு ஆகும், டி என்பது ரி என்று மாறிற்று. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்பதுதான் மொழி நூல் விதியாகும். இதுவும் நம் பண்டை உரையாசியரால் பலமுறை விளக்கப்பட்டதே ஆகும். இதை நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கட்டுரையாக வெளியிடுங்கள். அல்லது நூலாக்கிப் புகழ்பெறுங்கள்.
மாள் > மடி > மரி என்பனவும் தொடர்புடைய சொற்களே. இதன் அடிச்சொல் மள் என்பதாகும். இது குறைதல் குறிக்கும் சொல். மடிதலினால் ( மடியாமல் ) இருக்கும் தொகை குறைவு படுகிறது.. மடிதல் என்பது நிகழ்வாகவும் குறைதல் என்பது மடிதலின் விளைவாகவும் கொள்ளத்தக்கவை. பண்டை மனிதன் வேட்டையின் போது பத்து முயல்களில் நான்கைப் பிடித்துவிட்டால், மீதமிருபது குறைவுதான். பண்டை மனிதன் இவ்வாறே தொடர்பினை அறிந்துகொண்டான். இதன்மூலம் மள்> மாள் என்பதன் தொடர்பினை அறிந்துகொள்ளுங்கள்.
மள் > மளிகை: பெரும்பாலும் உயிரற்ற அல்லது காய்தலுற்ற பொருட்களை விற்றுத் தொழில் செய்வதுதான் மளிகைக் கடை. மளிகாரம் என்பது காய்ந்த ஒரு மருந்துப்பொருள். ( பொராக்ஸ் borax ). நீரிருந்து காய்ந்த இடங்களில் கிடைப்பதும் ( நீர்குறைதற் பயனால் கிட்டுவது) மற்றும் பூச்சிக்கொல்லக் கூடியதுமாகும். வெண்காரம் என்பதும் இதுவே. பூச்சிகள் குறைவுக்கு உதவுவது.
குறைவதும் கூடுவதும் ஒரு நிலைக்களனில் தோன்றும் கருத்துகள் ஆகும். பத்து முயல்களில் இரண்டு இறந்துவிட்டால் அல்லது அவற்றை உண்டுவிட்டால், இறந்தவையை நோக்க இருப்பவை எட்டு, ஆகவே கூடுதல் ஆகும். பெரும்பாலும் உடற்பலம் அல்லது வலிமை என்பது இவ்வாறுதான் வலியவர்களைச் சுட்டும் கருத்தாகிற்று. மள்ளர் என்பவர்கள் உடல்வலிமைக் குரிய வேலைகளில் ஈடுபட்டவர்கள். பள்ளம் தோண்டுவதும் வலிமையற்றோரால் இயலாதது ஆகும். ஆகவே மள்ளர் என்பது உடல்வலியோர் என்றானது இவ்வாறுதான்.
இவை ளகர ரகர மாற்றீட்டை விளக்க எழுதப்பட்டன.
தெள் > தெளி> தெரி. இதிலிருந்து தெரிதல் வினை வந்தது . தெரி > தெரிசு> தெரிசு அன் அம் > தெரிசனம் ஆகும். அன் > அண் தொடர்புள்ளவை. இவற்றை முன்வந்த இடுகைகளில் விளக்கியுள்ளோம். எடுத்துக்காட்டு: அன் > அன்பு, (அணுக்கம்). அண்> அணுக்கம். அன்= அண். ( இதன் தொடர்பில்).
தெரி என்பது தரி என்று வந்தது திரிபு. தெரிசனம் > தரிசனம். இது தரிசனம் என்றுமாகும். தர்ஷன் என்பது இதனின்று வந்த திரிபு. தெய்வக்காட்சியைக் குறிப்பது இச்சொல்.
தெரிசனம் என்பது தர்சனை என்றும் வரும்.
இனி வேறொரு விளக்கத்தில் தொடர்புற்ற பிற விளக்குவோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
If you enter compose mode please do not make changes.
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.