வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பேச்சாயியும் சரசுவதியும்

சரசு்வதி என்னும் தெய்வம் நாவை ஆள்பவள்; கல்வி தருபவள். அவளை வணங்கி கல்வி மேன்மை அடையலாம் என்பதே இந்து மதம் நமக்குக் கற்பிப்பது.

சரசுவதி தொன்றுதொட்டுத் தமிழர்களால் வணங்கப்பட்டு வருபவள். காலமாறுதலால், சில பெயர்கள் "நாகரிகம் " குறைந்தவையாய்க் கருதப்பட்டு ஒதுக்கப்படலாம். எனினும் இத்தகைய இனிமை குன்றியவையாய்க் கருதப்படும் பெயர்களையும் நாகரிகப் பெயர்களையும் ஒப்பாய்வு செய்தால், அவற்றின் தொடர்பு நாகரிகப் பெயர்களுடன் நன்கு இயைந்திருத்தலைக் காணலாம்.

பேச்சாயி என்பது நாகரிகமும் இனிமையும் குன்றிய பெயர் என்று சிலர் சொல்வர், இப்போது யாரும் தம் பெண் குழந்தைகளுக்கு இப்பெயர் இட்டதாகத் தெரியவில்லை.

பேச்சு நாவினின்று வருவது. அதற்கு ஆயி (தாய்), யார்? சரசுவதி!.

பேச்சாயி என்ற சிற்றூர் வழக்குப் பெயர், சங்க இலக்கியத்தில் இல்லாமல் இருக்கலாம்.(இருக்கிறதா என்று நான் தேடிப் பார்க்கவில்லை). பேச்சு ஆயி தமிழ் தான். சங்க இலக்கியங்கள் என்று எந்த இலக்கியமும் இல்லாத மொழிகளில், ஒரு சொல் ஒரு மொழிக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை எந்த முறையில் தீர்மானிப்பது? அம்முறை கொண்டுதான் இதையும் தீர்மானிக்க வேண்டும்.

இது வேறு மொழியில் இல்லாத பெயராதலால், தமிழ்தான்! மேலும்் தமிழர் தொன்றுதொட்டுச் சரஸ்வதியை வணங்கிவந்தனர் என்பது தெளிவு. பெயரை மாற்றிவிட்டால், ஆள் வேறு என்று கூற முடியாதல்லவா?

(உசாவிய நூல்: ஸ்றீ பரமாச்சாரியாரின் இந்துமத விளக்கங்கள்,(2006) Edited by Dr K K Ramalingam நர்மதா பதிப்பகம்)

Note: At the time of publishing, the text editor is affected by improper display of Tamil Fonts. Please ignore typos.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

தமன்னா Tamanna - how derived?

தமன்னா என்ற சொல்லின் பொருள் யாது?

சங்கதத்தில் : மிகவும் விரும்பப்படுவது என்று பொருள். வேறு பொருள்களும் உள்ளன. இருள், துன்பம் என்றும் பொருளுண்டு.

"நா" என்பது எதிர்மறைப் பொருளும் தரும். ஆனால், நா: இளவரசி, அரசி என்றும் பொருள் தரும்.

1{tamas} (`" the ascending node -mas}) darkness L. ; the point of the foot L. ; (%{A}) f. night
2 tama 2 an affix forming the superl. degree of adjectives and rarely of substantives most desired
3 tAma m. {doSa} L. ; anxiety , distress W.

இப்பொருள்களில் சில இப்பெயருடன் தொடர்புள்ளனவாய் ஏற்றுக்கொள்ள இயலாதவை.


தமிழில்:

தம்+அன்னை > தமன்னை > தமன்னா

ஒ. நோ: தம்+அப்பன் >தமப்பன் ( > தகப்பன். இன்றைய வடிவம்)

"தம் அன்னை" மிக விரும்பப்படுபவள்

் ஆதலின், "தமன்னா" தமிழ் மூலமுடைய சொல் என்று தெரிகிறது. மேலும் இளவரசி, அரசி, பெண்பால் அன்றோ? அன்னைபோல.

( அரசி, இளவரசி முதலியோர், அவர்களுக்குச் சேவை புரிகிறவர்களுக்கு "அன்னை"தான்.
இதுகொண்டு மலைவு கொள்ளவேண்டியதில்லை)

சாதிப்பட்டமாக வழங்கும் "பாத்தியா"வும் வாத்தியார் என்பதன் திரிபே.

ஒ.நோ: பண்டிட் < பண்டிதர். காஷ்மீரில் சாதிப்பெயர்.