வியாழன், 29 ஆகஸ்ட், 2013

Even if successful, troubles will follow

பீழை தரும்

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.


கடிந்த : இக்காலத்தில் இதைக் "கடிந்தவை" என்றே எழுதுவர். கடிந்தவைகள் என்று இரட்டைப் பன்மையாக எழுதுவது விலக்கத்தக்கது.

கடிந்து : விலக்கி.

ஒரார் : ஒருவார் என்பது இப்படிச் சுருங்கி நின்றது. (தாமும்) விலக்கமாட்டார். ஒருவுதல் - விலக்குதல். தம் நடத்தையிலிருந்து அகற்றுதல் என்பதாம்.

ஒருவு என்ற வினைச்சொல்லினின்று "வு" கெட்டது. அதாவது "வு" களையப்படவே, ஒரு என்றாகி, பின் ஆர் என்பது வந்து ஒட்ட, ஒரு+ஆர் = ஒரார் எனப்புணர்ந்த எதிர்மறை வடிவம்.

முடிந்தாலும் : நடைபெற்றாலும். நடந்தேறினாலும்.

பீழை - பீடை. துன்பம். டகரமும் ழகரமும் ஒன்றுக்கொன்று நிற்கவல்ல எழுத்துக்கள்.



சான்றோர் "செய்யாதே" என்று வரையறுத்து விலக்கியவற்றை நாமும் செய்யமாட்டோம் என்று கண்டிப்புடன் விலக்கிவிட வேண்டும், அப்படிப் பின்பற்றி ஒழுகாமல், அவற்றைச் செய்பவர்க்கு, அவர் காரியம் வெற்றியாய் முடிந்துவிட்டாலும், பின் ஒரு நாள்,  (புதைத்துவைத்த பூதம் கிளம்பியது போல ) துன்பங்கள் ஏற்பட்டு  சொல்லவியலாத கட்ட நட்டங்களைத் தந்துவிடும். 

வினைத் திட்பம்

வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய வெல்லாம் பிற.


ஒரு காரியத்தை முடிப்பதற்குரிய உறுதி என்பது மன உறுதியே ஆகும், மற்றவற்றைக் காரியம் முடிப்பதற்குரிய உறுதி என்று சொல்ல வியலாது.

Commending another poet

யாது வரைந்துள்ளார் யாதவக் கண்ணனைத்
தீதகலப் போற்றும்சின் னக்கண்ணன், பாதகமோ
யாதுமில்லை! பார்ப்போம்! யமுனா நதிதன்னின்
,தீரமில்லை ஆகையால் தூரமில்லை என்றுவர
செந்தா மரைபோலும் அந்தாதி கண்மலர்ந்து
வந்தேனை வாவென்று கூவி வரவேற்க
உள்ள மகிழ்வினை உள்ள படியுரைத்தேன்
தெள்ளு தமிழ்ப்பாட்டி னால்




இது இன்னொரு கவிஞரைப் பாராட்டி எழுதியது,  அவர் அந்தாதிப் பாடல் புனைந்திருந்தார்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

A DIALOGUE WITH ANOTHER WRITER

His query:
ஒயிலான ஆட்டம் ஒயிலாட்டம் என எழுதுவது தவறா..

reproduced  >
நீங்கள் சொல்வது: மயில்கள் தெரியாத்தனமாக ஆடிவிட்டன. மண்ணோ சிறிதும் நனையவில்லை. ஒயிலாட்டம் ஆடுகிறவர்கள், மழை வருகிறதோ இல்லையோ அவர்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஒரு புறம் மயில் மழை இவைகளுக்கும் மற்றொருபுறம் ஒயிலாட்டக்கார்களுக்கும் தொடர்பொன்றுமில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி வெள்ளம் கரைபுரண்டது, மழையே இல்லாதவேளையில்! உங்களுக்குக் கற்பனையில்தான் கரைபுரள்கிறது என்றாலும், நீங்கள் சொன்ன இயற்கைக் காட்சிகள், நடனங்களோடு என்ன பொருத்தம் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

மழை வராவிட்டலும் ஆடிய மயில்கள்போல, கரை புரளாவிட்டலும் நீங்கள் சொற்பிழை செய்திருந்தால் அது பொருத்தம் என்று சொல்லலாம். அதாவது நான் சொல்வது உவமை, மற்றும் காட்சிப் பொருத்தங்களை!

மேகங்கள் கலைந்துவிட்டதனால் ஏமாந்துவிட்ட மயில்போல, கற்பனை உருப்பெறாததனால் சொற்பிழையில் ஏமாந்துவிட்டேன் என்றால் இன்னும் பொருத்தம்.

பரத கண்டத்தில் (இந்தியாவில்) ஆடும் நடனம் எல்லாம் பரத நாட்டியம் என்று சொல்லலாம் என்றாலும், அது ஒரு தனிவகை நடனம் ஆகிவிட்டது. ஆகவே குச்சுபுடி, மணிபுரி என்றெல்லாம் வேறுபடுத்திச் சொல்கிறார்கள். அதுபோல்தான் ஒயிலாட்டம் என்பது.

Not that it is wrong, it may (not must) fail to carry the meaning you intended. Suppose you become very famous later and 500 years from, someone is trying to read and understand you. He might wrongly deduce that you are referring to the dance called oyilattam. You won't be there to explain it to him. Having conversed with you now, I know that you did not mean that dance. It then becomes the duty of every writer to be understood by others correctly. But you can keep the description there if you insist. After all, it is your poem. It is your inalienable right to do so.


பாபநாசம் சிவன் ஒரு பாடலை எழுதும்போது,"முகமது சந்திர பிம்பமோ" என்று எழுதி, தியாகராஜ பாகவதரிடம் கொடுத்தாராம். "முகமது" என்றுவருவதால் பாடமுடியாது என்று மறுத்ததால், பின் வதனமே சந்திர பிம்பமோ " என்று மாற்றிவிட்டாராம். தவறு என்பதற்காக அல்ல, தவறான பொருள்கொள்ளும்படி பிறரை இட்டுச் சென்றுவிடும் என்பதற்காகத்தான்! முகம் அது என்று பிரித்தால் சரியாகவே உள்ளது......

If you separate the words as oyil aattam - oyilaana aattam, it looks ok. Yours is a similar situation.

You like the usage,you can hold on to it.

Sudhama, where is he?

This is about Sudhama (Seenivasan) who used  to write and chat with me in the web pages, He went for an eye ops but after that, we have no news about him. Hope he is well.

எங்குசென் றாரோ சுதாமர் கவியரங்கில்
பங்குபெற வந்திலர் பார்!

Death, what it teaches

மரித்தல்

மரித்தல் எனவொன்றே இல்லையென்றால் இன்பம்

விரித்த புவிவாழ்வில் தெய்வத்தினைக் கூர்ந்து


குறித்த எண்ணங்கள் மாந்தனுக்கே இல்லாகி


வெறித்த தன்மையே விரிதலைக் கோலமே


This was written some years back.

சொல்ல விழைந்தது


புதிதாகக் கவிபுனைந்த ஒருவருக்கு நான் சொல்ல விழைந்தது. ஒரு கவிதை வடிவில். 

ஒரு கவியாகத் தான்வரவேண்டும் --- சில
வரிபாடிப்  புகழ்பெறவெண்டும்  ---- என்று
குறியாகக்  களம்கண்டநல்லார்  -----நேரம்
சரியாகப் பயன்கொள்ளவேண்டும்.

தொடராகப் பலபாடல் பாடி ----- கவிக்
கடலாக உருவாதல் கூடும்--- எழுதல்
இடராகும் எனுமெண்ணம் கொண்டு --- விட்டு
விலகாத முனைப்பாற்றலுண்டேல்  


அருங்கவிகள்   பல்லோரின் வாழ்க்கை---தம்மில்
பெரும்பகுதி   தெளிவாகக் காட்டும்---- உண்மை
அருங்கனியும் இதுவன்றி  யாது? -- உணர்ந்தே
அடைவீரே வருங்கால ஏற்றம்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

the name : vandayar how it derived.

This is reproduced for the pleasure of our readers from a forum postings.




[The term “vaandayaar” is not a caste name. It means “Lord of Swords” and comes from the root “vaaL” which means “sword” in Tamil. It is a title conferred by the kings of those days on those who fought well and won in wars.



Study:

: vaaL + thu = vaaNdu. ( = in possession of sword).

Compare: aaL > aaNdu > aaNdavan, aaL > aaNdi etc. maaL > maaNdavan.
(regardless of noun or verb, L +thu = Ndu )
VaaNdu + ai = vaaNdai. ( ai = Lord, leader ). The word iyer also
came from the same root “ai”.

aar = (to denote respect ). Plural ending.

(vaaL + thu)+ ai +aar. = vaandaiyaar.

Some may derive it from another word “vaaNdu” meaning a small child.
The titles pillai, kutty are derived in that manner.
[/tscii:1c48ed31df]


Thanks Ms. Sivamala :!: for your post. Usually I try to avoid answering personal questions.

I am quite busy now due to new project works which is hammerising me not to make frequent posts.

I express here the historical background of 'Vaandayar'. Tamil Epic 'Kalingathuthupparani' was written on 'Vaandayar kone'- the ancestor of all vandayars , a 12 the century war head of chola empire who won kalinga. He was karunakara Thondaiman.

Your root word analysis completely fits. Thanks once again.

f.s.gandhi
bis_mala
27th July 2006, 02:07 PM
You r welcome ! Thanks for your piece from Kalingaththup ParaNi.
Regards.


18th July 2006, 11:44 AM from forumhub thread Mahabharatham.   http://www.mayyam.com/talk/archive/index.php/t-3502.html?s=2e92cb8672aabf66e95587e8bba1bba7

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இறைவா நீ உலகைக் காப்பாற்று.....

மழை வந்து விட்டால்
அதில் மடியும் எறும்புகள் எத்தனை?
பிழைத்துப் பின்தோன்றும் எறும்புகள்
எங்கு ஒளிந்திருந்தனவோ?

இவற்றின் இனம் அழிந்துவிடாமல்
................................

தோற்றம்  பலப்பல!
அழிவும் பலப்பல!

தான் தோற்றுவித்தவை பல அழிதலில்
இயற்கை அன்னைக்கோ ஏது கவலை?

என்றும் போல்,
பகலவன் தோன்றுவான், மறைவான்!

மனிதனும் அப்படித் தானோ?

கெண்டிங் மலையில் பேருந்து கவிழ்ந்து
இறந்தோர் பலர்.

எனக்குக் கவலை
இயற்கைத்தாய்க்கு கவலை ஏது?

இறைவா நீ உலகைக் காப்பாற்று.....

அந்தஸ்து

anthasthu

அந்தஸ்து என்பது அயன்மொழிச் சொல். (Skrt) இது இறுதியில் ஒருவன் எப்படி தகுதிநிலை பெறுகின்றான் என்பதைக் காட்டுவதாகக் கூறுவர். எனவே ஒருவன் கடைசியில் எத்தகுதி அடைகிறான் என்பதைப் பொறுத்தே அவனது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது என்பது கருத்து,

இதில், அந்தம் = இறுதி. ஸ்தா என்பது நிற்றல் பொருளது. ஸ்தாபன என்பதில் இந்த ஸ்தா உள்ளது.

இந்த அடிச்சொற்கள் மேலை நாட்டுச் சொற்களிலும் உள்ளன. ஆங்கிலத்தில் கூட, தொடர்புடைய சொற்கள் உள்ளன. அந்த - end. ஸ்த - stand

இதற்குத் தமிழ் மூலங்கள் உள்ளனவா?

தழுக்குதல்  என்பது ஒரு  பழந்தமிழ்ச் சொல். இது  ஒருவன் வாழ்வில் வளம்பெற்று   உயர்வதையும்  குறிக்கும்.  இதன்  அடிச்சோல் "தழு " என்பது.

[B][I]tazukku-tal   - to flourish, prosper[/I][/B]

அம்  என்பது   அழகு    குறிப்பது .

அம் + தழு  + து  =  அந்தழுத்து  >  அந்தஸ்து .

இப்படியாக இச்சொல்லுக்கு தமிழ்  மூலமும் .காணலாம்.

Here you need to note the ழு>  ஸ் change.  Compare:

அழுத்திவாரு - அழுத்திவாரம் - அஸ்திவாரம்   Again:  ழு>  ஸ் change.

fun with naladiar

நாலடியார் அல்லது நாலடிநானூறு என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்.


மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது

கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

இந்தப் பாடல் என்ன சொல்கிற தென்பது.................


மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது


யாமிளையம் - நான் இன்னும் இளைய வயதினன் தானே!


மற்றறிவாம் நல்வினை - (இப்போதே எனக்கு ஏன் இந்த நல்வினை (தீவினை) பற்றிய ஆராய்ச்சி! நேரம் வரும்போது அதுபற்றிக் கவனிப்பேன்! தெரிந்துகொள்வேன்.


என்னாது - என்றெல்லாம் சொல்லிக்கொண்டிராமல்.....


இதுதான் முதல்வரியின் பொருள். மற்ற வரிகள் புரிந்திருக்கும்....


மேற்கண்ட நாலடிப் பாட்டில் அடுத்த வரிக்கு என்ன  பொருள்  என்று நினைக்கிறீர்கள்?


கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க


அதாவது கை துண்டானபோதே உடனே அறஞ்செய்க என்றா சொல்கிறார்கள்?


என்னதான் பொருள் ?


கைத்து  :  கைப்பொருள் (பணம், அல்லது செல்வம்)

உண்டாம் போதே:  உண்டாகும், அதாவது உள்ள போதே;
கரவாது :  இல்லை என்று சொல்லாமல்,
அறஞ்செய்க:  தருமம் (பிறருக்குத் தருதல்) செய்க;
(ஈதல், தருதல், கொடுத்தல் ‍ நுண்பொருள் வேறுபாடு உண்டு. இங்கு அதைக் கவனிக்கவில்லை).


இது இரண்டாம் வரியின் பொருளாகும்.

 ஒரு சாவு வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

"இவன் (செத்துப்போனவனர்) சின்னப்பயல். நான் பார்த்து இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தேன்! உடம்பை ஒழுங்காப் பார்த்துக்கொள்ளவில்லை" என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். சொன்ன பெரியவருக்கு 80, போய்விட்டவருக்கு 61 தானாம்.  இப்படி உலகத்தில் பல நிகழ்வுகள். பழுத்த பழமானவர் இருக்க, இளங்காயானவர் இறந்துவிடுகிறார். ஆகவே நாம் நல்லதைச் செய்யக் காத்திருக்கக் கூடாது. அறச் செயல்களை நினைத்த போதே செய்துவி வேண்டும்.

ஒரு மரத்திலே இளங்காய்கள், தின்னப் பக்குவமானவை, மற்றும் முத்திப்போனவை என்று பல வகை தொங்கிக்கொண்டிருக்கின்றன. கடுமையான காற்று விரைந்து வீசுகின்றது. அதிலே இளங்காய் விழுந்துவிடுகின்றது. முத்திப் போனது இன்னும் தொங்கிகொண்டுள்ளது. அது போல மனித வாழ்வும்.......

என்கிறது இப்பாடல். 



அடுத்த இரண்டு வரிகளுக்கும்:

முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

தீவளியால் ‍‍:  விரைந்து வீசும் காற்றின்காரணமாக; முற்றியிருந்த :  முத்திப்போன;   கனியொழிய :  பழத்தை விட்டுவிட்டு;  நற்காய் : உதிராமல் மரத்திலேயே இருக்கவேண்டிய நல்ல காய்;  உதிர்தலும் உண்டு :  கீழே விழுதலும் உண்டு, 


தீ :  விரைந்து வீசுகிற.  தீவிரம் (தீயின் விரைவு) என்ற  சொல்லமைப்புக் காண்க.  தீவளி : அனல்காற்று என்பது அவ்வளவாகப் பொருந்தவில்லை. இங்கு விரைவுப்பொருளே பொருந்துவது.

o-o-o-o-o

lupdated 24.8.13)