சனி, 28 பிப்ரவரி, 2015

யுவானும் லின்னும் காதலர் (தொடர்ச்சி)

என்ன வேலையோ தெரியவில்லையே என்று மனம் குழம்பியவாரே லின்
தனது இருப்பிடம் சென்றாள். இரவு பதினொன்று வரை தொலைபேசியில் அழைத்துப் பார்த்தாள்  -  பதிலேதும் இல்லை .

அடுத்த நாள் , அதற்கடுத்த நாள் -  சந்திக்க முடியவில்லை. வேலை அதிகம் என்று தொலைபேசி அழைப்புகளை வைத்துவிட்டான்,  எதுவும் பேசாமல்.

இரண்டு வாரங்கள் சென்றன.  பல்கலையின்  நடைபாதையில் யுவான்  வந்துகொண்டிருந்தான்.  எதிரே சென்ற மாணவி மாலா அவனோடு பணிவன்பைப் பரிமாறிக்கொண்டாள்.  நான் தான்.

"லின் எங்கே ,  வரவில்லையா ?"  என்று நான்  கேட்க ,
" இல்லை, ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் " என்றான்.
"என்ன! ஐயோ பாவம் ! மனம் எப்படிக் கடினமான இடர்ப் பட்டிருக்கும் !
லின் நல்ல பெண் ஆயிற்றே.. என்ன நடந்தது என்று  நான் தெரிந்துகொள்வதில்  உனக்கு  மறுப்பு  எதுவும் இல்லையென்றால்,  சொல்லலாமே " என்றேன் .
" இன்று நாம்  சீனச் சைவ உணவகத்தில்  மாலை ஆறுக்குச் சந்திப்போம்.
நானும் உன் னுடன் உட்கார்ந்து சாப்பிட்டு  இரண்டு மூன்று மதங்கள் ஆகிவிட்டன.  தவறாமல் வா"  என்றான். விரைவாகப்  போகவேண்டிய வேலை ஏதோ  இருந்ததுபோலும்.
"சரி " என்று சொல்லிவிட்டு கையசைத்துவிட்டு நடந்துவிட்டேன்.

மாலை ஐந்து மணிக்கு  தொலைபேசி  மணி என்னை அழைத்தது. இன்னொரு மாணவி தனது வண்டியில் என்னை என் இருப்பிடத்திலிருந்து எடுத்துகொண்டு உணவகத்திற்குக் கொண்டு வருவாள் என்று யுவான் சொன்னான்.  ஏதோ பெரிய விடயம்போலும் என்று எண்ணிக்கொண்டு,  ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு  அரை மணி நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தோம்.

சில நிமிடங்களில் யுவான் அங்கு வந்தான்.   சீனச் சைவ உணவு  உண்டோம்.
அவன் எதையும்  தொடங்காமல் இருக்கவே,  நான் லின்னையும் கொண்டு வந்திருக்கலாமே  என்றேன்.

"முற்றுப் புள்ளி என்று சொன்னேனே!  எப்போது வந்தாலும்  அங்கே சரியில்லை, இங்கே சரியில்லை,  அதில் அழுக்கு, இதில் அழுக்கு, இதைத் தேய்க்க வேண்டும், அதைக் கழுவ வேண்டும்  என்று  முணுமுணுத்துக் கொண்டே  இருப்பாள். அவற்றைக் கழுவிக்கொண்டும் தேய்த்துக்கொண்டு மிருப்பாள்.  கைகளைப் பல முறை கழுவுவாள். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தால் இடர் ஒன்றுமில்லை. கூடுதலாக இருக்கிறது . இந்த வயதிலேயே இப்படி என்றால் கிழமாகிவிட்டால்,  எனக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் தலைவலி  ஆகிவிடும். இதனால் சண்டை வம்புகள் வரக்கூடும்.  இது ஒரு விதமான மன நோயின் அறிகுறி. அதனால், என் அறைக்கு இனி வராதே என்று சொல்லிவிட்டேன் . சந்திப்புகளையும் வெட்டிவிட்டு  இப்போது கொஞ்சம் அமைதியாய் இருக்கிறேன்.  " என்றான்.

என்னோடு வந்த பெண்ணும் சீன நங்கைதான்.  இவன் சொன்னதெல்லாம் அவளுக்கு முன்கூட்டியே தெரியுமோ என்னவோ!  அவள் என்னைக் கவனித்தாள்.  ஒன்றும் பேசவில்லை .  எனக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.  அப்போது என் முன்னிருந்த சூப் என்னும் காய்கறிகள் வெந்த நீரை மெதுவாக உறிஞ்சிக்கொண்டே  யுவனை உற்று நோக்கினேன்.

(தொடரும் )    



யுவானும் லின்னும், காதலர்



யுவான் நல்ல வாட்ட சாட்டமான சீன இளைஞன். யூக்கியூவில் மருத்துவத்துறையில் பயின்றுகொண்டிருந்தான். அதே பலகலைக் கழகத்தில் சட்டத்துறை மாணவி லின். இருவரும் படித்துமுடித்தபின் வேலையிலமர்ந்து திருமணம் செய்துகொள்ள  வேண்டிய வயதை அடையக் கொஞ்சகாலமே காத்திருக்க வேண்டியவர்கள்.

யுவானின் தந்தை மகன் தங்கிப் படிப்பதற்காக ஒரு வீட்டையே வாங்கிக் கொடுத்திருந்தான். இரண்டுமாடி வீடு. பல அறைகள். ஓர் அறையிலேதான் யுவான் குடியிருப்பு. மற்றவை எல்லாம் ஆளில்லாமல் கிடந்தபடியால்,  மாணவ மாணவிகள் சிலரிடம் அறைகளை வாடகைக்கு விட்டிருந்தான்.  

வீடு திரும்பும்போது லின் யுவானுடன் கூடவே வந்து,  சமையலறை முதலியவற்றைச் கூட்டிப் பெருக்கிக்  குப்பைகளைக்
களைந்துவிட்டு கொஞ்சம் தே நீர் அருந்துவாள். அப்புறம் சில வேளைகளில்  வாடகை வண்டியில் தன் இருப்பிடம் போய்விடுவாள். இல்லாவிட்டால் உடற்பயிற்சி என்று சொல்லிக்கொண்டு, நடந்தேகூடத்  
தன் இடத்திற்குப் போய்விடுவாள்.

அழகான ஆடவனுக்கு அழகிய காதலி என்று மற்ற மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். அதிலும் லின், பால் நிறத்து வெள்ளை யழகி.

அங்கு வந்து யுவானுக்கு  உதவிகள் செய்துவிட்டு அவன் அறையில்
கொஞ்ச நேரம் இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். வீடு எப்படியெல்லாம் அழகாக இருக்கவேண்டும் என்ற தன் கனவுகளையெல்லாம் அப்போது அவள் அவனிடம் விவரிப்பாள். யுவான் பெரும்பாலும் பதில் கூறாமல் கேட்டுக்கொண்டிருப்பான்.

காதலிக்க வேண்டும். அந்தச் சமயத்தில், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். போதுமான வசதிகளுடன் ஓர் இல்லம் அமைத்து குடும்பவாழ்க்கையில் ஈடுபடவேண்டும். பெற்றோர் பக்கத்திலிருந்து  வாழ்த்துரைகள் வழங்கி மகிழ்விக்கவேண்டும்.  பட்டங்கள் பெற்று வேலைக்கமர்ந்தவுடன் இதெல்லாம் இடர் ஏதுமின்றி நடைபெறவெண்டியவை

ஒரு நாள் தன் கனவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டு அவனறையில் அவன்முன் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் லின். கனவுகளா?  அவைகளெல்லாம் யுவானுக்கு எதிர்பார்ப்புகளாகவே இருந்தன. தேனீர்க் குவளையைக் கழுவி அடுக்கிவைப்பதில் என்ன கனவு இருக்கிறது? இது அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பட்டது.  

"லின், உனக்குத் தேர்வு நெருங்கிவிட்டதல்லவா? உலகில் எது கிடைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. பாடங்களை மீண்டும் ஒரு முறை
படிக்கவேண்டுமே,,,,"

இப்படிச் சொல்லி லின்னை வீட்டுக்கு  விரைவாக அனுப்பி வைத்தான்
யுவான்.  அப்புறம் தன் பாடங்கள்....

ஒரு நாள் அவன் கேட்கச் சென்ற மருத்துவச் சொற்பொழிவுகள் முடியும் வரை லின் வெளியில் மண்டபத்தில் காத்திருந்தாள்.

பொழிவுமுடிந்து அவன் வந்தான். " லின்,  இன்று நீ வீட்டுக்குப்
போகிறாயா..... எனக்கு அவசர வேலை.... நான் வீடு போக நேரம் ஆகும்..." என்று மன்னிப்பு வேண்டியபடி யுவான் கிளம்பிவிட்டான்.

சந்திப்புகள் தொடர்ந்தால்தானே காதல் மொட்டு பூக்கும்?

தொடரும்









ஒரு நாள் தன் கனவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டு அவனறையில் அவன்முன் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் லின். கனவுகளா?  அவைகளெல்லாம் யுவானுக்கு எதிர்பார்ப்புகளாகவே இருந்தன. தேனீர்க் குவளையைக் கழுவி அடுக்கிவைப்பதில் என்ன கனவு இருக்கிறது? இது அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பட்டது.  

"லின், உனக்குத் தேர்வு நெருங்கிவிட்டதல்லவா? உலகில் எது கிடைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. பாடங்களை மீண்டும் ஒரு முறை
படிக்கவேண்டுமே,,,,"

இப்படிச் சொல்லி லின்னை வீட்டுக்கு  விரைவாக அனுப்பி வைத்தான்
யுவான்.  அப்புறம் தன் பாடங்கள்....

ஒரு நாள் அவன் கேட்கச் சென்ற மருத்துவச் சொற்பொழிவுகள் முடியும் வரை லின் வெளியில் மண்டபத்தில் காத்திருந்தாள்.

பொழிவுமுடிந்து அவன் வந்தான். " லின்,  இன்று நீ வீட்டுக்குப்
போகிறாயா..... எனக்கு அவசர வேலை.... நான் வீடு போக நேரம் ஆகும்..." என்று மன்னிப்பு வேண்டியபடி யுவான் கிளம்பிவிட்டான்.

சந்திப்புகள் தொடர்ந்தால்தானே காதல் மொட்டு பூக்கும்?

தொடரும்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Will the former DPM succeed obtaining pardon?

PKR supports pardon plea by Anwar’s family


http://www.themalaysianinsider.com/malaysia/article/pkr-supports-pardon-plea-by-anwars-family


There are many commentaries dealing with the incarceration of the former DPM. There are many views too. You can find one such view here, though one may hesitate to agree with everything said therein. The complaint was made by a private individual and the prosecutor conducted the case on a fiat. The government maintained a hands-off policy on the case.   


http://www.economist.com/news/asia/21643227-jailing-anwar-ibrahim-setback-whole-country-not-just-opposition-malaysias

திசைச்சொல் என்றால் என்ன?

திசைச்சொல் என்றால் என்ன?

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தில் ‍==  அதாவது தமிழ் நாட்டில் ==வழங்காமல்  பிற ஆந்திரம், (தெலுங்கானா,) கருநாடகம், கேரளம் முதலிய மாநிலங்களில் வழங்கும் சிறப்புச் சொற்களே திசைச்சொற்கள் என்று மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் கூறுகிறார். செந்தமிழ் = இயல்பான தமிழ். கொடுந்தமிழ் திரிபு என்றும் உணர்த்துகிறார். திசையை நோக்கினால், திசைச்சொற்கள் தமிழ் வழங்கும் தென்பகுதிக்கு வடபால் வழங்குபவை.

 கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் திரிந்தமையவில்லை. இது பாகதங்களிலிருந்து திருந்தி அமைந்த சமஸ்கிருதத்துக்கு மாறான நிலைமை ஆகும்.

 இனி, "திசைச்சொல்:  திசைகளில் வழங்குகின்ற  தேச பாழைகளிலிருந்து செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்." இது சடகோப இராமாநுச கிருட்டினமாச்சாரியார்  ( நன்னூல்   ) உரை. இதை பாவாணர் மேற்கோள் காட்டியுள்ளார்.

 ஆக, ஆங்கிலச் சொல் போல்வது  "அயற்சொல்" எனப்படும். திசைச்சொல் அன்று என்று தெரிகிறது

இனித் தொல்காப்பிய நூற்பா:

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் 
தங்க்குறிப்பினவே  திசைச்சொற்  கிளவி    (எச்சவியல்  4 ).

நன்னூல் :  

செந்தமிழ்  நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் 
ஒன்பதிற்றிரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் 
தம் குறிப்பினவே திசைச் சொல்  என்ப..   (பெய).



வியாழன், 26 பிப்ரவரி, 2015

மயிலும் வடமொழியும்.


ஆரியர் நண்ணில வட்டாரங்களிலிருந்து (Mediterranean area) இந்தியத் துணைக்கண்டத்திற்கு ஏகினர் . என்பது ஒரு தெரிவியல் (theory) கருத்து ஆகும். ஆராய்ச்சியாளர்களுக்கு இதைத் திட்டவட்டமான முறையில் முடிவு செய்ய இயலவில்லை. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி முடிவு செய்ய இயலும்?  ஆகவே அதைப்பற்றிய வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.வரலாற்றாசிரியரான ரோமிலா தாப்பார் அம்மையார் ஆரியர் வந்தனர்  என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆரியர் வந்தனர் என்பதற்கே ஆதாரம் கிட்டாமல் அலமருகின்ற வேளையில்,  அவர்கள் படையெடுத்து வந்தனர் என்பதற்கு ஆதாரம் என்ன இருக்கின்றது என்று கேள்வி எழுவது இயற்கை.  ஆரியர் என்பது ஓர் இனத்தின் பெயர் அன்று என்பது  ஒரு 
மறுப்பு ஆகும். ரிக் வேதம் முதலிய நூல்களில் இந்தச் சொல் இனத்தைக் குறிக்கும்  சொல்லாக‌ வரவில்லை. எல்லை கடந்து மக்கள் வந்துகொண்டுதான் இருந்திருப்பார்கள். இப்போதுபோலவே, தனிப்பட்ட கூட்டங்களும் தனி ஆட்களும் வந்திருப்பார்கள். சில படையெடுப்புகளும் நடந்திருக்கும்.

 ஆனால் இவை சமஸ்கிருதம் என்ற மொழியைக் கொண்டுவந்த‌ நிகழ்வுகள் என்று மெய்ப்பிக்க வேண்டுமே! ஆனால் பல சமஸ்கிருதச் சொற்கள், 
மேலை நாட்டு மொழிகளில் காணப்படுகின்றன.இவை எங்ஙனம் அங்கு சென்றன?   மக்களிடை ஏற்பட்ட தொடர்புகளால் ( அவை படையெடுப்பானாலும் வெறும் போக்குவரவானாலும்) சொற்கள்
பரிமாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
-
வரலாறு எழுதிவைத்து வாழ்ந்தவர்கள் சீனர்கள். அப்படி எழுதிவைக்காமல் வாழ்ந்தோர் இந்தியர். பல்வேறு வழிகளில் இந்திய வரலாற்றை எடுத்துக்கட்ட வேண்டியுள்ளது. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுகள், மண் ஓடுகள், சொல் ஆய்வு, மொழி ஆய்வு என்றெல்லாம் அலைந்து திரிந்து தேடி எடுத்துப் புனைந்தாலும், அவை கற்றோர் கருத்துரைகளாய் (merely educated opinions and not facts ) நிற்கின்றன.

வடமொழி வடதிசையில் வழங்கிய மொழி என்று பொருள் கூறலாம். ஆனால் அப்படியின்றித்  தென் திசையிலும் அது வழங்கிவந்திருக்கிறது. அப்புறம் எப்படி வடமொழி? வடமொழி எனப்படும் மொழியில் எழுதிய ஆசிரியர்கள் பலர் தென்னாட்டினர். மேலும் வடமொழி யாருடைய மொழியுமில்லை. அது எந்த இனத்தவரால் வழங்கப்பட்டது? ரிக் வேதத்திலேயே  எண்ணூறு முதல்  ஆயிரம்  வரையிலான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்துள்ளனர். ( Kamil Svellebelle ) தமிழர்கள் ரிக் வேதத்தில் சில பாடல்களையாவது பாடாமல்  எப்படி இந்தச் சொற்கள் அங்கே  போயின?

வடம் என்றால் மரம் என்றும் பொருள்.  இப்படிப் பார்த்தால், வட மொழி மரத்தடி மொழி என்று பொருள்பெறும்.(திரு வி.க) மரத்தடிச்  சாமியார்கள் பயன்படுத்திய ஒரு மந்திரமொழி. பின் அது நன்றாகச் செய்யப்பட்டுச் சமஸ்கிருதமாயிற்று. சமஸ்கிருதத்தில் 1/3 விழுக்காடு
சொற்கள் தமிழ் அல்லது தமிழின்  இனமொழிகளுடையன. (டாகடர் லகோவரி).
இன்னும் 1/3 ஆய்வுக்குரியன. சமஸ்கிருதத்தின் ஒலியமைப்பு திராவிட ஒலியமைப்பு. (எஸ்.கே. ச‌ட்டர்ஜி) ஆங்கிலமொழி அல்லது சீனமொழிபோல் இல்லை. வேதவியாசன் மீனவன்; வால்மீகி வேடன்;
பாணினி என்னும் சமஸ்கிருத இலக்கணியன், பாணன். இறையருளால் இவர்கள் விந்தை விளைத்தனர் என்பது உண்மை. பிரம்மைத்தை உணர்ந்தவர்கள். பெரும்புலவோர்.

சரி, இனி மயிலுக்கு வருவோம்.  ஆரியர் நண்ணில நாடுகளிலிருந்து வந்தோர் எனில், சமஸ்கிருதம் ஆரிய மொழி எனில்  அங்கே   மயில் இல்லை. மயில் தென்னாட்டில் உண்டு. ஆகவே மயில் பெயர், சமஸ்கிருதத்தில் இல்லை. மயில் என்ற தமிழே.  சமஸ்கிருதத்தில் மயூரமாய்த் திரிந்து மலர்ந்தது.

அசோகனும் தன் கல்வெட்டுகளில் மயிலைக் குறிப்பிட்டுள்ளான். அவனது கர்னர் சாசனத்தில்  "மொர" என்றும், அவனது வடமேற்கு சாஸனத்தில்  மஜுர என்றும்  அவனது கால்சி சாஸனத்தில் மஜுல என்றும் இச்சொல் திரிந்துள்ளது

மை + இல் = மயில்.
மை > ம :  ஐகாரக் குறுக்கம்..
யி :  இதில் ய்  யகர உடம்படு மெய்.
இல் = இடம்.  ( கடலில் , மண்ணில் :  இடம் குறித்தது  "இல்" 1)
ஆகவே  மைக்குறிகள்  இட்ட இடங்களை (இறகுகளை )உடைய பறவை..

திருமயிலாடுதுறை  என்பது மயூரம் என்று  மாற்றப்பட்டது.மயூர என்பது சங்க்கதத்துக்காக உருவெடுத்த சொல்.  இதுவும்  மை+ஊர்(தல் )  என்ற இரு தமிழ்ச் சொற்களைக் கொண்டு புனையப்பட்டது.  மை + ஊர் + அம் . We do not know what is currently the official name of this place.    We have not checked it.    ஆனால்  மயூரம் என்பது மாயவரம் என்று மருவிட்டதாகச் சொல்வர் . இது மாயமான  முறையில் கிடைத்த வரமென்றும்  மாய்வதற்குக் கிடைத்த  வரமென்றும்  இரு வழிகளில் பிரிக்கப்படலாம் என்பர்.. 
மையூர்ந்த  சிறகுகள்,  


Footnotes:

-------------

1 வீடு என்பது இன்னொரு பொருள்
2 Panini's Sanskrit grammar was updated by later authors, as demanded by whatever subsequent circumstances.  Karthiyayana and Pathanjali of South India (the lattter from Chidambaram,Tamil Nadu  and a disciple of Mamular) were known updaters. Panan was a minstrel  whence the name Panini. ( just  as the term parathavar means fishermen, whence the word Bharatham,  p-b interchangeable in many words and can be adequately explained.)  .










புதன், 25 பிப்ரவரி, 2015

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

vidyAsam


விதத்தல் என்ற வினைச்சொல், தமிழ் மொழியினுடையது.
ஒன்றை விதந்து கூறுதல் அல்லது ஓதுதல் எனில், சிறப்புகளை எடுத்து
வேறுபடுத்திக் கூறுதல் அல்லது  ஓதுதல்.

விதத்தல் >  வித+ அம்=  விதம்.

ஒரு" விதம்"
 எனப்படுவது, வேறுபடும் வகையைச் சேர்ந்தது.

"vi(வித்) > வித > விதத்தல்

"vith"  is a constructed root  (artificial)  extracted from "vitha".  For illustration it is shown as
preceding "vitha".  This is Panini's method,
 இந்த  (வித் என்ற) அடியைத் தனித்து எடுத்து, இதிலிருந்து வித்தியாசம் என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது  தெரிகிறது/

(வித்)  > வித் + இ + ஆய + அம் = வித்தியாயம் > வித்தியாசம்.

வேறுபாடு ஆயது என்பதாம்


வித என்பதே நாம் இங்கு அடிச்சொல்லாகக் காட்டியது ஆகும். அது எப்படி வித் என்பதை முன்வடிவமாகக் கொண்டிருக்க முடியும் என்று ஐயப்பாடு எழலாம்.  இப்படி வருவனவெல்லாம் மிக்க இயல்பானவை.
எடுத்துக்காட்டாக, ஸக (தோழன்) என்று பொருள்படும் சமஸ்கிருத வடிவச் சொல்லைப் பார்ப்போம். உருபு ஏற்கும் போது இது "ஸ்க்" என்று நிற்கிறது. இங்ஙனமே வித என்பதிலிருந்து வித் பெறப்பட்டுப் பின் சொல்லாக்கத்திற்குப் பயன்பட்டது வியப்பன்று   விளக்கம்:

ஸகா  <  (ஸக் )
.

ஸகா  தோழ(ன்)
ஸக்யா  தோழனால்
ஸக்யே  தோழனுக்காக‌
ஸக்யு:  தோழனிடமிருந்து.
ஸக்யௌ  தோழனிடம்

தமிழில்  தகு என்ற சொல்லிலிருந்து  தகுந்த,  தக்க  என்பவை  எடுத்துக்காட்டு.
திரிபு:  தகு+இணை = தக்கிணை >  தச்சிணை >   தட்சிணை..
.

வித்தியாசம் :   இதற்கு  வேறு முடிபும் தமிழிலேயே கூறலாம்.  
அதைப் பின்னொரு முறை காண்போம்.

நிவேதிதா தேவியாரின் ஆங்கில நடை

Sister நிவேதிதா மிகச் சிறந்த  எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அவரெழுதிய சிவனைப்பற்றிய ஒரு கட்டுரையும் மற்றும் புத்தரைப் பற்றிய இன்னொரு கட்டுரையும் நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. மிக்கத் தெளிவான ஆங்கில நடை. ஆற்றொழுக்குப் போன்ற அமைதியுடன் நம்மை மிதந்து செல்லவைக்கிறது.  கூடுமானவரை இலத்தீன் கிரேக்க வழிச் சொற்கள் இன்றித்   தூய ஆங்கிலமாய் உள்ளது. வரணனைகளும் அவருக்கே உரித்தான பாங்கில்  தரப்பட்டுக் கவர்ச்சி செய்கின்றன ,

பதிப்பாசிரியர்கள் ஆசிரியரைக்  கதை கூறுவதில் பெருவல்லுநர் என்று சொல்வது முற்றிலும் உண்மையாகும். அது படிக்கும்போதே தெளிவாகும். . அவர் இவ்வுலகை நீங்கிய பின்னர் அவர்தம் ஏடுகளை அலசிய‌போது இவை கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் போக்கினைக் காணுங்கால்  அவர் மேலும் பல கட்டுரைகளைத்  தம்  மேலை நாட்டு மக்களுக்காக எழுத எண்ணியிருந்தார் என்றே   நாமும்   ஊகிக்கவேண்டியுள்ளது,.
இந்து ஆசாரங்கள் பற்றியோ அல்லது மேலையர்  அறியாத  இந்தியச்  சமயவியல் கூறுகள் பற்றியோ  கூறப்புகுங்கால் அவரளிக்கும் விளக்கங்களைக் காணும்போது  இது புலனாகின்றது  .இந்து  சமயத்தை இந்துக்கள் அறிந்து வைத்திருப்பதை விட அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.



நூலின் பெயர்:  Siva and Bhudha
வெளியிட்டோர்: இராமகிருஷ்ண மடம்

நிவேதிதா தேவியாரின் ஆங்கில நடை படித்தின்புற வேண்டியதொன்றாம்,

சனி, 21 பிப்ரவரி, 2015

புருவம் புருடன் (புருசன் )

புரு என்னும் அடிச்சொல் சில சொற்களைப் பிறப்பித்துள்ளது.

புரு > புருவம்:   கண்ணுக்குப்  பாதுகாப்புத் தருவது.

புரு > புருடன்   பெண்ணுக்குப் பாதுகாப்புத் தருபவன்

புரு > புரி :  செய்தல் .

புரு > புரை  (ஒப்புமை, போன்மை  இன்னும் பல பொருள் .)

புரு   என்பதன் மூலச்சொல் புல்  என்பதாகும்.  புல்லுதல் எனில் பொருந்துதல்.

புருவமாவது, கண்ணுடன் பொருந்தி நிற்பது.  புருடன் என்போனும் பெண்ணுடன்  பொருந்தி நிற்பவன் ,

புரு என்பதும் மேலும் பொரு என்று திரிந்து, பொருது, பொருந்து என்றாகும்.

புல் > புரு> பொரு > பொருது >  பொருந்து.

புருசன் என்பது நாட்டுப்புற வழக்கில் உள்ள சொல்.  இங்கிருந்து அது பிற மொழிகளிலும் சென்று பழைய நூல்களிலும் இடம்பெற்றிருக்கிறது.

புருச  என்பது கண்ணின் மணி என்றும் பொருள்படுவது கவனிக்கத் தக்கது.
இது புருவத்துடன் தொடர்பு உண்மை காட்டுவதாகும்.


வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

Rathika Canadian Minister speech in Tamil


கானடா ஆளுமன்றில் கன்னித் தமிழொலிக்கத்
தானயரா உந்துதலால் தந்திட்ட ‍‍‍‍---- தேனுரையைக்
கேட்டாலும் ஊட்டுமின்பம்; வீட்டுத் திரைதன்னில்
மீட்டாலும் மேல்துள் ளுணர்வு

ஆளுமன்று :  நாடாளுமன்றம்.. parliament.
உந்துதலால் :  முயற்சியால்.
வீட்டுத்திரை: ( by_)_ tv screen or other means similar
மீட்டாலும் :  if you tune to or retrieve 


https://www.youtube.com/watch?v=K9yqU37MhT4

வியாழன், 19 பிப்ரவரி, 2015

சத்து

சா  என்பதொரு தமிழ் வினைச்சொல். இது பல தோற்றரவு(அவதாரங்)களை  எடுக்கிறது.அதாவது, பல வடிவங்களை அடைகின்றது. சில மொழிகளில் வினைச்சொல் மட்டுமே நின்று வினை முற்றுப்பெற்றதைக் காட்டும் .  உதாரணத்துக்கு  மலாய் மொழியைக் காட்டலாம். (அவன்) இறந்துவிட்டான்  என்று சொல்ல வேண்டுமானால்  dia mati (ia mati)  என்கையில் ,  mati என்ற வினை எந்த உருமாற்றமும் அடையவில்லை.   இறந்த காலம் காட்ட,  ia telah mati, அல்லது ia sudah mati என்று சொல்ல வேண்டும்.  பழம்பெரும் மொழியான சீன மொழியிலும் வினை உருமாற்றம் இல்லை. இது இலத்தீன் சமஸ்கிருதம் முதலான பிறவற்றுக்கு வேறான அமைப்பு முறை.

தமிழர்  அல்லாதாருக்குச்  சில வேளைகளில் தமிழ்ப் பேச ஆசை.  Where is she ?  என்று ஒரு சீனப்பெண்ணிடம் கேட்டால், அவள் "அவன் போ !"  என்கிறாள். பெண்பாலுக்குப் பதில்  ஆண் பாலில் சொன்னது கிடக்கட்டும்.  போ என்பது ஏவல் வினையாகவே, அல்லது வினைப்பகுதியாகவே நின்றுவிட்டது. தமிழ் முறையில் இது குற்றம். சீன அல்லது மலாய் மொழிகளின் இலக்கணப்படி மிகவும் சரி .

இப்போது  சா என்ற சொல்லுக்கு வருவோம்.

அவன் சாகிறான்.
அவன் செத்தான்.
அவன் சாவான்.

அது செத்த பாம்பு,
அவன் செத்து  மடிந்தான் .

சா>  செ  > சா > செ >  செ .

வா என்ற வினை, இறந்த காலத்தில் வந்தான்  என்று  வா> வ 
என்றாவதுபோல்  (குறுகுவது போல்)  சா என்பது  சத்தான் அல்லது வந்தான் என்பதற்கியைய சந்தான்  என்றோ வந்திருக்க வேண்டுமே.  Bloomfield  முதலிய அறிஞர்  மொழி முறைகேடுகளை எடுத்துக்காட்டியதுதான்  நினைவுக்கு வருகிறது.

மலையாளத்தில் மட்டும்  "அவன் சத்து "என்பது முறைப்படி வினை முற்றாக வருகிறது.  செத்துப்போய் என்னாமல் சத்துப்போய்  என்பது முறைப்படியானது.

கோழியோ உருளைக்கிழங்கோ உண்கிறீர்.  உயிருடன் உங்கள் உடலில் போய்ச் சேர்வதில்லை. செத்து  அல்லது சத்துத் தான் உள்ளேபோகிறது.  அதுவே சத்து ஆகிறது. 
சத்து மடிந்த கோழியை  அல்லது சத்துப் பொரித்த  கிழங்கை 
அது சத்துவிட்டதால் சத்தாக உள்பெற்றுக்கொள்கிறீர்.

சத்து என்ற சொல் உண்மையில் ஒரு வினை எச்சம் . இலத்தீன் omnibus என்ற சொல்லிலிருந்து வந்த "[பஸ்]"  என்ற சொல்லிறுதி  இப்போது சக்கை போடு போடுவது போல,  சத்து என்ற வினை எச்சமே, "சத்து " என்று  சத்துப் பொருள்களை உங்கள்பால் கொண்டுவருகின்றது.

இப்படி எற்பட்ட தமிழ்ச்சொல் சத்து.  பாலி மொழியில் கூட சில எச்ச வினைகள் பெயர்ச் சொற்கள்  ஆகி மறு வாழ்வு பெற்றுள்ளன. பின்னர் காண்போம். 

சத்து உண்டது சத்துத் தந்தது. அதுவே சத்து. 
   

Give Sirisena and Sri Lanka a last chance....

புதன், 18 பிப்ரவரி, 2015

சீனர்தம் நிலவு தொட்ட பெரு நாள்

சீனர்தம் நிலவு தொட்ட பெரு நாள்
காணும் கடைகள் யாவும் அடைப்பு
காய்கறி வாங்க \வேண்டுமென் றாலும்
போய்த்தான்  தேடணும் அல்லார் கடையை.
வளம் பல கண்ட வணிகர் மூன்று
வாரங்கள் கழித்தும் வந்து திறப்பார்
சிங்கை முதலாய்ப்  பினாங்கு வரைக்கும்
பங்கமில் காட்சி பரந்து பட்டதே.
ஜோ கூர்1 செல்லும் சிங்கை வண்டிகள்
சோதனைக் காக ஆயிரக் கணக்கில்
யாதும் அறியாது கடப்பு நிலைகளை
நிரப்பும் தமக்கு நேரம் வரும்வரை
கிடக்கும்  எப்போது கடப்போம் எனவே
என்றோ தொடங்கிய பண்டை வழக்கம்
இன்றும் அவர்களின் மூச்சாய் உள்ளது
பெரு நாள் காலம் ஒருதொழில் செய்யா
திருவென எந்த   அரசுப் பெரியோன்
உத்தரவு தந்துசென்  றானோ
மெத்த மகிழ்வொடு  கடைப்பிடித் தனரே,

ஜோகூர் :   a city next to Singapore.  Written as:    Johor or  Johore

See the congestion for yourselves at this link

http://www.onemotoring.com.sg/publish/onemotoring/en/on_the_roads/traffic_cameras0/woodlands.html

The original of this poem written in puthukavithai format was lost due to software error.  It has been reconstructed and edited, now has fallen into Asiriyap pA format. It was not intended. வெண்சீர்களும் வந்துள்ளன. இவற்றை மாற்றவில்லை /

சாதல் சமஸ்கிருதச் சொல்லா?

சாதல் என்ற சொல், தமிழ்ச் சொல். இதை யாரும் சமத்கிருதம் என்று சொல்லி யாம் கேள்விப்பட்டதில்லை.  இந்தச் சாதல் என்ற சொல்லின் வினைப்பகுதி ஆகிய "சா" என்பது, அங்கும் இடம்பெற்றுள்ளது. அதன் பல்வேறு பொருள்கோள்களை இப்போது கண்டின்புறுவோம்.

Sa :  loss , destruction ; loss of knowledge ; end , term ; rest , remainder ; eternal happiness , final emancipation ; heaven , paradise ; sleep ;

சா:  (= ஸா):  இழப்பு, அழிவு.  அறிவு அழிதல்.  இறுதி.  காலச் செலவு; ஓய்வு.  இறுதலில்லா மகிழ்வு. இறுதிச் சம நிலை;  மேலுலகு. ஒப்பற்ற துறக்கம்; உறக்கம். பொறுமை; தாங்கிக்கொள்ளல்.

இவை எல்லாம் சாதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இயைந்த பொருண்மைகளே.

இப்போது கேள்வி: சாதல் சமஸ்கிருதச் சொல்லா?  சமஸ்கிருத அகரவரிசையில் இருக்கிறதே!

சமஸ்கிருத அகரவரிசையில் இருப்பவை எல்லாம் சமஸ்கிருதச் சொற்கள் அல்ல . அகரவரிசைகள்  ஆக்கப் பட்ட \காலங்களில் ஒரு மொழியில் வழங்கிய   சொற்கள்  யாவற்றையும் விடாது  உள்வாங்கி எழுதிக்கொள்ள முனைந்தனர்,  பொருந்தாதவை என்று அவர்கள் நினைத்தவற்றை விட்டுவிட்டனர்.  மொழி ஆய்வும்  சொல் ஆய்வும்  செய்துதான்  சேர்க்கலாம் என்ற கட்டாயம் ஏதுமில்லை. குறிப்பிட்ட மொழியில் ஒரு சொல் வழக்கில் இருந்ததா என்பதுதான்  முதன்மையான கேள்வியாய்  அவர்கள் மனத்துள் இருந்தது.  அதுமட்டுமின்றி,  ஆக்கியோரின் மொழிக் கொள்கைகளும் அவர்களையே   பாதித்தன. சமஸ்கிருதம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்ற கொள்கை  அன்றைய அறிஞர்  இடையே நிலவியதால்  அக்கொள்கையின்படி  எதை வேண்டுமானாலும் உள்வாங்கிக் கொள்ளலாமே.  மேலும்  அகரவரிசை என்பது   பொருளறியும்  கருவியன்றோ?  சொல்லின் பொருளைத் தேடுகிறவன்  அதில் அதைக் காணமுடியவில்லை என்றால் 
அகரவரிசை பயனற்றதாகிவிடும்.  அகரவரிசை ஆசிரியன் இதையும் கருதவேண்டியிருந்தது. இத்தகைய சூழலில் அவன்  குறிப்பிட்ட மொழியில் கிடைத்த சொற்களையெல்லாம்  உள்வாங்க்கிக்கொண்டான்.  இது தவறன்று.   "சா" என்பதை  ஏதேனும் ஒரு நூலிலோ  வாய்மொழியிலோ  அறிந்திருப்பான். அதை எழுதிக்கொண்டான்.  அல்லது மொழிக்கொள்கையின்படி  அதை  ஏற்றுக்கொண்டான் அறியாமையும்  சிலவேளைகளில்  காரணமாகலாம்.   மொழி  ஆர்வமும்  காரணமாகலாம்.

பயன்படுத்துகிறவன்  அயன்மொழிச்சொல்லைக்  கொள்வதற்கு  சட்டப்படியான  தடை ஏதும் இல்லை;  அவனே  அதைத் தீர்மானிக்கிறான். மொழி   அறிஞன்    வேண்டாமென்றால்  அது வெறும் பரிந்துரை மட்டுமே.  
  

-----------------------------------------------------------------------------------------------quod supplantandum, prius bene sciendum

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிவ ராத்திரி

இரவு என்பது எப்படி இரா என்று வந்தது?  இதில் ஏதும் வியப்பு இல்லை,  காரணம் :

நிலவு  >  நிலா,
உலவு  > உலா
உணவு >  உணா
கனவு  > கனா.\

\பெயர்  வினை என்றில்லாமல் வடிவங்கள் இங்ஙனம் வருகின்றன,

நிலவு  என்பது  வு விகுதி பெற்றமைந்தது.   நிலா என்பது  ஆ என்னும் விகுதி பெற்று அமைந்தது. எனினும் வு விகுதி பெற்றவற்றுக்கு  ஆ பெற்றவை மாற்றுப் படிகள் .


நில் + வு  = நிலவு  ( இடையில் ஓர்  அகரம் தோன்றியது).
நில் + ஆ = நிலா.   

பார்க்கும்போது  நிற்பதுபோல் தோன்றுவது;  நிலையானது , அழியாதது  என்று பொருள்.   

ஆகவே இரவு இரா ஆனது இயல்பு

அடிச்சொல்  (இர் )
இர்  > இரவு.  ( இர் +அ +வு )  நிலவு என்ற சொல்லில்போல   ஓர்  அகரம்  தோன்றியது 

இர்  என்பதோர் மூலச்சொல்.  பிற சொற்கள்.

இர்  >  இருள். (உள்  இறுதி பெற்றது )
இர் > இருள் >  இருட்டு.  (இருள்+ து)   இரு விகுதிகள் உள் மற்றும் து.
இர்  >  இராகு.  ( விகுதிகள்:  ஆ  கு ,  அல்லது "ஆகு " என்னும் வினை). 

இராத்திரி  என்பது இராவுடன் திரியையும் கோத்து வைத்துக்கொண்டுள்ளது.  திரி என்பது திரிபு என்னும் பொருளது.

பகல் என்பதன் திரிபு இரவு,  திரிபு எனின் மாற்றம். பண்டை மக்கள் இரவைத் திரிபாகக் கருதியதையே இது காட்டுகிறது.
இரவு பகல் எப்படி ஏற்படுகின்றன என்று அவர்கள் காலத்தில்
தெரியவில்லை/  திரிபு என்று கருதியதில் வியப்பில்லை எனினும் இப்படிக் கருதியதிலும் பெருந்தவறு ஒன்றுமில்லை.

இரவாகிய திரிபு என்க, திரி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.


மாற்றுக் கருத்து:  திரி  என்பது  திரம்  என்பதன்  மாற்றுரு. இவை இரண்டும் திறம் என்ற சொல்லிலிருந்து பிறந்து விகுதிகளாய்ப் பயன்பட்டன.,  இராத்திரி  என்பதில் திரி  ஒரு விகுதி எனினும்  ஆகும்.



குழித்தல்  குழி என்று முதனிலைத் தொழிற்பெயர் ஆனது போல  திரிதல்  எனற்பாலது திரி என்றே நின்று  ஆனது. 

இராத்திரி என்பது நல்ல தமிழ் , இது வழக்கம்போல தலையிழந்து ராத்திரி ஆனது.

சிவ ராத்திரி என்பது சிவ என்ற இயல்பு எச்சச் சொல்லும் ராத்திரி என்ற உருத்திரிந்த சொல்லும்  கலந்த கலவைச் சொல்.
 இந்தக் கலவைச் சொல்லை நாம் சிவயிராத்திரி என்று எழுத வேண்டியதில்லை,

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நீ என்னென்ன சொன்னாலும் குறைதான்

நீ என்னென்ன சொன்னாலும் குறைதான்
நீ எங்கெங்கு சொன்னாலும் குறைதான்;
நீ சொல்கின்ற குறையெல்லாம் நிறைதான்;
அந்த நிறைக்குத்தான் எனக்கிங்கு வாக்கு!

உன்னாவி போகின்ற நட்டம்; அதை
உணர்ந்துமா உனக்கிங்கு கொட்டம்;
தென்னாடு தெரியாமல் பிட்டம்; பிசைந்து
திரட்டினை தரத்திலாள்   மட்டம்.


பிட்டம் -  மாவு.

தேர்தலில்  ஒரு கட்சி இன்னொன்றைப் பலமாகக் குறைகூறுகிறது. இருப்பினும்  குறைகூறின கட்சி  படுதோல்வி அடைய,  சொன்ன குறைகளைத் தாங்கிக் கொண்ட கட்சி, மிக்கப் பெரும்பான்மையில் வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.   ஏன்  அப்படி?  வெற்றி பெற்றவன் கூறுவதுபோல் வருகிறது இந்தப்பாடல்.  



லீ சியான் லுங் நலம்பெற்று..........


நல்ல முறையில் நகர்நாடு சிங்கப்பூர்

வல்லலீசி   யான்லுங் வளர்க்கின்றார்  --- சொல்லுவனோ

புற்றுநோய்  கண்டறுவை போற்றி நலம்பெற்றுத்

தொற்றின்றித் தோன்றுவார் மீண்டு


PM Lee Hsien Loong's prostate cancer operation a success

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

கொழுக்கட்டை

உகரமும் அகரமும்  ஒன்றுக்கொன்று மாறி நிற்க வல்லவை  என்பதை முன் பலமுறை  இங்கு எழுதியுள்ளோம்.

 இந்நேரம்  நீங்கள் ஒரு பட்டியலே தயாரித்திருப்பீர்கள் என்று நம்பலாம்.

இதோ இன்னொரு சொல்.     குட்டை -  கட்டை.

குள் > குட்டை >  கட்டை  என்ற திரிபுகள் வேறு.  

கடு >  கடுமை;   கடு> கடினம்;  கடு+ ஐ = கட்டை  என்பன வேறு.

குட்டையனைக் கட்டையன் என்றும் சொல்வதுண்டு.   தொடர்பு அறிக.

கட்டை : நீளம் இல்லாதது  என்ற பொருள் படும் சொற்களில் ஒன்று: கொழுக்கட்டை.
கொழுவியது போன்றும் நீளமின்றியும் மாவினால் உள்ளீடு வைத்து ,  அவிக்கப்படுவது  கொழு + கட்டை.

   கொழு ( fat, fat-looking).

பார்க்கக் கொழுகொழு என்றிருக்கிறான் என்பர்.

சனி, 14 பிப்ரவரி, 2015

தாளிகைப் பலம்

மாபெரும் ஆற்றல்
மாநில மீதினில்
அரசுகள்  ஏறவும்
அவற்றின் வாழ்வு தீரவும்
தாளிகை என்னும் தரமுயர் பொருளால்
சாலும் அதற்கே  சரியீடு காண்கிலம். 
வேண்டிய வேண்டியாங்கு விழைந்தது செயவும்
காரணம் அதற்குப் பொருத்தமாய்க் கூறவும்
அவற்றிற் கன்றி  ஆகுமோ பிறர்க்கே?
விரும்பா தாரையும் வேறுவழி இன்றி
கரும்பெனப் போற்றும் கலைகை வந்ததே!
தொல்லை ஈதிவ் வில்லை வளைக்க‌
தொல்பழ மன்னர்க்கு வில்லங் கில்லை!
இதனின் வலிமை அறிந்தே
முதலதை அடக்க முனைந்தனர் சிலரே.


  

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

Campaign against BJP

As the BJP was routed in Delhi, the Rashtriya Swayamsevak Sangh has accused the media, in particular television channels, of an open bias in favour of the AAP and against the BJP.
What was broadcast in the name of opinion polls and surveys in the past few days was not only a deliberate misinformation campaign but also a gross violation of journalistic conduct during elections, the RSS mouthpiece Organiser said in an editorial.
After “demonising” Narendra Modi before his victory in the 2014 Lok Sabha elections, the media made a U-turn, the editorial said. “The same media, unable to find any fault with the policies of the Centre, was in full praise… of the NDA government’s initiatives.” However, “the moment the Delhi election was announced, their tone and temper has changed. Not only through daily TV bulletins but also through their Twitter handles and Facebook pages, they have almost started campaigning for the Aam Aadmi Party.”
Organiser attributed the bias to the advent of the 24X7 electronic media which fostered the culture of “Breaking News.” “What we are witnessing in the last few years in India, especially since the last general election till the latest Delhi Assembly elections, is ‘breaking’ of news to favour or oppose a particular political disposition. This approach has shaken the very foundation of the role and ethics of journalism.”
Acknowledging the media’s right to question the establishment and making informed public opinion with plurality of views, the editorial said “activism” had crept into the media rather than “journalism.” “With [its] own agenda to fulfil, the basics of ‘objective reporting’ are missing. What the electronic media are trying to be is either a spokesman or adversary of one or the other political outfit. In the process, they are either hiding important information or distorting facts.”
The editorial said the media made a similar attempt during the Lok Sabha election, creating a “hype of the Kejriwal phenomenon in Varanasi [where Mr. Modi contested].” In the past few days, “another pet project” that the media seemed to have adopted was making the former Bihar Chief Minister and JD(U) leader, Nitish Kumar, a national hero
by Omar Rashid

உருசிய "ஆரோஸ்" ஆறு தான்;



உருசிய நாட்டில் உள்ளது  வோல்கா என்ற ஆறு.  ஆனால் இதை எரோடோட்டஸ்   (Herodotus) "ஆரோஸ்"  என்றல்லவா குறிக்கின்றார்.!  இதைத்  தமிழ்ச் சொல்லான  ஆறு என்பதன் வாயிலாக நன்கு விளக்கலாம்.  ஆரோஸ்  என்று அவர் குறித்தது  ஆறு தான்; வேறன்று.

இதிலும் தமிழ்த் தொடர்பு  காணப்படுகிறது.  வணிக நிமித்தம், கடல் கடந்தோர் தமிழரே.  எல்லை கடந்து திரிந்தோரும் தமிழரே.  திரைகடலோடியும் திரவியம் தேடுவான் தமிழன்.

கடல் கடக்கா தே என்று எந்தத் தடையும் எந்த நூலும் அவனுக்கு  விதிக்கவில்லை..

வியாழன், 12 பிப்ரவரி, 2015

Confess for an accused....!

http://steadyaku-steadyaku-husseinhamid.blogspot.sg/2015/01/an-anwar-ibrahim-in-sungai-buloh-is.html



B.I Sivamala

1 second ago  -  Shared publicly
"Which nation, what legal system and why would a Prime Minister and an Attorney General amongst others, concern themselves with what has been done to the a... of Saiful?"

Anwar I thought denied the act.  You mean: ... what has been alleged to have been done to ......" or "allegedly done to ...."
Otherwise it may tantamount to confessing for him. 

Post Script:

Anwar did not admit anything until he was convicted  and conviction upheld by the Federal Court.

It is not a defence to say that so many others too are committing parking offence or beating the red traffic light.  They were all not caught. If you have been, then you have to pay the fine. The Court  only adjudicates in respect of persons accused before it.   If you did not commit the offence, it is then a  different matter.

If you say others have also dommitted the offence, then it means you committed the offence too. It is a form of admission..

(யானெழுதிய ஆசிரியப்பா......



அண்மைக் காலமாய் இங்கு வரவே............


(யானெழுதிய ஆசிரியப்பா. கவிதை இன்புறுவோர் கண்டு மகிழ்க )



https://bishyamala.wordpress.com/2015/02/13/356/https://bishyamala.wordpress.com/2015/02/13/356/


எதிரியினி எழுந்திடாமல் இருப்ப தற்கும்
இடுகின்ற வழக்குக்க ரசியல் நோக்கம்


எனத் தொடங்கும் விருத்தமும்  இங்குக் காணலாம்.

https://bishyamala.wordpress.com/2015/02/13/


A critique legal on Malaysian Appeal Court

The Court of Appeal’s “Outline of Reasons” in Anwar Ibrahim v PP – A Critique - See more at: http://www.loyarburok.com/2009/07/22/the-court-of-appeals-outline-of-reasons-in-anwar-ibrahim-v-pp-a-critique/#sthash.15WvMaJW.dpuf


காம நதி நாமம்.

உருசிய  (ரஷ்ய)  மலையான ஊறல் (ஊரல்)  மலைப்  பக்கம்  காம ஆறு  என்று ஓர்  ஆறு  ஓடுகிறது.  காம  அல்லது காமம்  என்ற பெயர் இங்கு  இருப்பதில்  எந்த வியப்பும் இல்லை ,  அம்மொழியில் உள்ள வேறு தமிழ் அல்லது தமிழொத்த பெயர்களையும்  சொற்களையும்   கண்டவர்க்கு .

ஊறல் மலை; காம ஆறு;  நாரத மலையுச்சி. 

அறிந்து இன்புறுவீர்.

இவை சுமேரியத் தமிழர் தாம் விரித்த  வணிக மற்றும் ஏனை நடவடிக்கைகளில் பரவிய சொற்கள்  என்பதில் ................


புதன், 11 பிப்ரவரி, 2015

NAratha in Ural mountains!!!


1927 வாக்கில், ஒரு மண்ணியல் ஆய்வறிஞர் குழு, ஊரல் மலைத்தொடரில் உள்ள மிக்க உயர்ந்த மலையுச்சியைக் கண்டுபிடித்தனர்.  அவ்விடத்துக்கு அருகில் வாழ்ந்த மக்கள் அம்மலையை நாரதா என்று குறித்தனர். நாரதா என்ற பெயர் நமது தொன்மங்களில் (புராணங்களில்) உள்ள ஒரு கதைப்பாத்திரம், ஒரு முனிவர் என்பது நீங்கள் அறிந்ததே.  இம்முனிவர் பெயருடன் ஒலியொப்புமை உடைய ஒரு சொல்லை அவர்கள் அம்மலைக்கு அல்லது மலையுச்சிக்கு இட்டிருப்பது நாம் அறிந்து மகிழத்தக்கதே ஆகும்.  நாரத என்ற சொல், நமதாகவுமிருக்கலாம்; அல்லது நமது  சொல்லுடன் ஒத்த, வேறு பொருளுடைய பிறமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். இதுவா அதுவா என்று உறுதியுரை தருவது, கடின வேலைதான்.  காரணம் அம்மக்கள்  நமது தொன்மங்களை அறிந்திருக்கவில்லை. நமது நாரதரையும் அறிந்தவர்கள் அல்லர்.

நமது நாரதர் வடக்கே ஒரு மலையில் வாழ்ந்தவர் என்று நம் தொன்ம‌
அறிவில் படுவதால், அம்மலை இமயம் அன்று, ஊரல் மலைதான் என்று ஒரு கருத்தை முன்னிடுகை செய்யலாம். அது நம் வாத எல்லைக்கு உட்பட்டதாகவு மிருக்கலாம்.

இந்தியர்கள் இவ்வாறு சொல்வதை அறிந்தோ அறியாமலோ,  உருசிய‌
அரசு இதை ஆயத் தொடங்கியது. நாரத என்ற மலைப்பெயரை உண்மையில் மக்கள் என்று பொருள்படும் நாரோட்னோய் என்று மாற்றிவிட்டு அதை மக்கள் புரட்சிக் கொண்டாட்டங்களின்போது அறிவித்துவிட்டனர்.   அதாவது  நாரத = மக்கள்;   நாரோட்னோய் =  மக்கள்.    word form updated.

  நரன் என்ற தமிழ்ச்சொல், மனிதன் என்று பொருட்படும், இது நருள் என்ற மக்கள்பெருக்கம் குறிக்கும் சொல்லுடன் தொடர்புடையது,

நர் > நரு> நருள்.     
நர் > நரு > நரு+ அன் = நரன் (மனிதன்).
நர் > நரு > நார்+ அது+ அன் = நாரதன். (< நாரத).  நாரதன் என்றால் பொருள் மனிதன்; இது முனிவருக்கு இடப்பட்ட பெயர். இது ஏன் இடப்பட்டது என்ற ஆய்வு இருக்கட்டும். கேட்டால் சொல்வோம்.

(ஒப்பு நோக்குக: பரு+ அது+ அம் = பருவதம்.  பரு> பார்> பார்வதி.  வதம்> வதி.  (வதம்:  வ்+ அது+ அம்). வ்,  உடம்படு மெய்.
இப்படி நீண்டு திரியும் சொற்கள் பல.)

நாரத,   நாரட்னோய் என்பனவும், மக்கள்  என்றே பொருள்படுவதால்,
நாரத என்ற உருசிய மொழிச் சொல்லின் பொருள், தமிழில்போல, மக்கள் என்பதே.

முனிவருக்குப் பெயர்தந்த தமிழ்.
மலைக்கும் பெயர்தந்த தமிழ்.

குறிப்பு:  யூரல் /  ஊரல்  மலை,   ஊறல்  ( ஊறுதல்)  மலையாகவும் இருக்கலாம். நீர் ஊறும் மலை.  தமிழென்பது  புழக்கத்தில் உலக மொழி அன்றெனினும்  அதன் தொடக்கத்தில் உலகம்  அளாவிய மொழியே.  இல்லையென்றால், இதை யெல்லாம் சொல்ல,   சொல்லில் வசதி இருக்காது.
ரஷ்யரின் ஆய்வு முடிவும் சரியானதே.

இது  அவ்வட்டாரத்து  அல்லது  பக்கத்து  நிலப்பகுதிகளில் வழங்கும்  துருக்கிய இனமொழிகளில் ஒன்றிலிருந்து ( Turgic or Ob-urgic ) வந்திருக்கலாம் என்று எண்ணுவர்.  தன்னை ஈகை செய்துகொண்ட இளைஞன் ஒருவனின் பெயராக இருக்கலாம் என்று வேறு சிலர் எண்ணினர்.  இந்த ஆய்வாளர் தமிழை அறியாதவர்கள்.


சிறிசேனாவைக் கவிழ்க்க நினைக்கும் பக்சே

தேர்தலில் வென்றுவிட்டால் 
நாற்காலியில் அமர்ந்துவிட்டால் 
கவிழாமல் நிலைத்துவிட்டதாய் 
கணித்துவிடலாமோ ?  ஆட்சிப் பொறுப்பின் 
அவிழாத முடிச்சு ஆமோ அது?

எதிரி பூச்சிபோல் இழைந்துகொண்டிருக்கிறான் 
ஆட்சி வேரை அரி த்துவிட்டு --- தன் 
மீட்சியைக் காட்சியாக்கிவிடுவானே !

அதிபர் சிறிசேநா பற்றிய இந்தக் கட்டுரை நன்று/


https://www.colombotelegraph.com/index.php/mr-president-hang-him-or-he-will-hang-you/

அகிலம்

அகிலம் என்னும் சொல் அமைந்த விதம் காண்போம்.
இது பன்மடித் திரிபுச் சொல் ஆகும்.

உலகம் என்பது அலகம் என்று திரிவது முதல்மடி.
இதற்கு வேறு எடுத்துக்காட்டு.

அம்மா   >உம்மா   > உமா.   ( அ‍‍ > உ; உ> அ ). ஒன்று மற்றொன்றாகத் திரிய வல்லது.

சில மொழிகளில் உகரம் அகரமாகவும் திரியும், ஆங்கில உ (u) எழுத்து அ என்றும் ஒலிக்குமிடம் காண்க.

அம்மா என்பது சில மொழிகளில் உம்மா என்றும் சிலவிடத்து உமா என்றும் வழங்குவதை அறிக.  மலபாரில் உம்மா..
இதன்படி உலகம்  ( அலகம்) ஆனது.

இரண்டாம் மடித் திரிபு:

அலகம் > அகலம் என்று எழுத்து முறைமாறுதல். இந்த அகலம் வேறு; அகல் என்ற சொல்லில் இருந்து அம் விகுதி பெற்ற அகலம் என்பது  வேறு.
 வேறு உதாரணங்கள்:

விசிறி  >  சிவிறி.
மருதை> மதுரை.

அகலம் என்பது பின் அகிலம் என்று திரிந்தது.

உலகம் > அகலம் > அகிலம்;

இங்ஙனமன்றி அகலம் விரிவு என்று பொருள்படுவதே அகிலம் என்று திரிந்தது என்று கூறுவர்/

இது தமிழ்ச் சொல்லே ஆகும்.

அகிலம் என்பது சமஸ்கிருத வடிவமன்று, இதை அம்மொழி அகர வரிசையில் தேடிப்பாருங்கள். சமஸ்கிருத  "ஆகல்பம்" என்பது ஆ ​+ கல்பம் எனப் பிரிந்து  பொருள் உணர்த்தும் என்பர். 
Akalpam t the end of the world (lit. of a Kalpa,  ). 
ஆ - அந்த.






செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

தைப்பூச மேளம் தலைவலி தந்தது

வேண்டாம் என்பதை விட்டு விட்டால் என்ன?
தைப்பூச மேளம் தலைவலி தந்தது. .....................

http://theindependent.sg/blog/2015/02/08/thaipusam-incident-statement-from-mohan/


கோயில் அதிகாரிகள்
வாயில் வந்ததைச் சொல்லார்;
தெரிந்துதான் சொல்வர்;
புரிந்துகொண்டு புரிக செயல்.

உறுமி மேளம் :

http://en.wikipedia.org/wiki/Urumee

எதிர்க்கட்சித் தலைவர் ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை

http://www.abc.net.au/news/2015-02-10/malaysias-anwar-ibrahim-sentenced-to-five-years-jail-sodomy/6082574

எதிர்க்கட்சித் தலைவர் ஐந்தாண்டுச்  சிறைத் தண்டனை பெற்றார். அரசியல்  உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று  குற்றச் சாட்டு.

Click the above link to read more.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

Judgement excerpt in Rajapaksa's case

Per Amarasinghe J :  I am left with the definite and firm conviction that there was no violation of the petitioner's freedom of speech and expression: I cannot conclude that the petitioner was unable to explain his case fully for lack of the apprehended material when it has not been established that he spoke at all. Moreover, having regard to what was demanded and expected of him, it has not been established that the material was necessary for discharging his duties as a speaker at the Geneva meeting. The petitioner has failed to show that it was even receivable. In fact, the evidence points to the probability that the material given up by him was irrelevant to the purposes of the meeting and were not admissible and publishable at all at that meeting. The subsequent release of the material enabled the petitioner, and left him free, to publish the material, at a time and in a manner he was expected to do so, by those with whom he wished to communicate.

http://www1.umn.edu/humanrts/research/srilanka/caselaw/Arrest/Mahinda_Rajapakshe_v_Kudahetti_&_Others.htm


SUPREME COURT
BANDARANAYAKE, J.
AMERASINGHE J. AND
DHEERARATNE, J.
18 AND 19 JUNE, 1992.

You may enjoy reading this case judgement for your pleasure.

Will Rajapakse stand against PM Wikramasinghe?




நாடாளுமன்றத் தேர்தலில் இராஜபக்சேயை  தலைமை அமைச்சர் விக்ரமசிங்கேவுக்கு எதிராக நிறுத்தினால்,  விக்ரமாவைத் தோற்கடித்துவிடலா ம்  என்று  அரசியல்வாதிகள் சிலர் திட்டமிடுகின்றனர்.

என்ன நடக்கும் என்பதைக் கூறமுடியாது.

இந்தச் செய்தி:

http://www.dailymirror.lk/63149/mr-in-the-ring-against-rw

http://www.dailymirror.lk/63149/mr-in-the-ring-against-rw


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

காந்தாரத்தில் மும்முகத்துச் சிவன்

இது காந்தாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மும்முகத்துச்  சிவன்  சிலை.  இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. 


மலேசிய இந்தியர் போட்டாபோட்டிகள்

மலேசிய இந்தியர் காங்கிரஸ் உள்கட்சி போட்டாபோட்டிகள்

தாங்க‌ரும் துயர்பல தாங்கி நின்றே  இந்தத்
தாரணி வியந்தொன்று  கூற யாரும் புகழ்
காங்கிரஸ் இந்திய மலேசியர்கள் தமைக்
காத்திடக் கொண்டதிந்  நாட்டினில் தோற்றமே.

கூட்டினிற் குருவிகள் போட்டிகள் போட்டிடில்
ஈட்டு திறமைபல இனியவி ளைவுகள்,
ஆட்டிப்ப டகுதனை ஆழ்கடல் மூழ்காமல்
கூட்டுமவ் வெல்லையில் போட்டியும் நிற்கணும்!

http://english.astroawani.com/malaysia-news/analysis-mic-crisis-53394

சந்தம் இப்படி:


தாங்க‌ரும் துயர்பல தாங்கிநின்   றே இந்தத்
தாரணி வியந்தொன்று  கூறயா  ரும்புகழ்
காங்கிரஸ் இந்திய மலேசியர்    கள்தமைக்
காத்திடக் கொண்டதிந்  நாட்டினில் தோற்றமே.

கூட்டினிற் குருவிகள் போட்டிகள் போட்டிடில்
ஈட்டுதி  றமைபல இனியவி ளைவுகள்,
ஆட்டிப்ப   டகுதனை ஆழ்கடல் மூழ்காமல்
கூட்டுமவ் வெல்லையில் போட்டியும் நிற்கணும்!




அக்காள், அம்மாள், தங்காள்.

தொல்காப்பியத்தைப் படித்துவிட்டு, அதற்கப்புறம்  பவணந்தியின் நன்னூல் முதலிய பொன்னேடுகளையும் கரைத்துக் குடித்துவிட்டு, யானோர் இலக்கணப்புலி என்ற எண்ணக் கடலிலே நீந்திக்கொண்டிருப்போனுக்கு அக்காள், அம்மாள், தங்காள் என்ற சொல் வடிவங்களைக் காணும்போது ஒரே எரிச்சலாக வரும். ஏ தமிழா, இது தமிழா என்று கேட்டுப் பாயத் தோன்றும்.

இவற்றின் செந்தமிழ் வடிவங்கள் எவை?

அக்காள் ‍ : அக்கை.
அம்மாள் :  அம்மை.
தங்காள்  :  தங்கை.

கூப்பிடும்போது,

அக்கை |>  அக்கா!
அம்மை >   அம்மா
தங்கை  >  தங்காய்.

என்றல்லவா வரவேண்டும். இவற்றை விளிவடிவம் என்கிறோம். விளி எனில் அழைத்தல். ( நெலவிளி (  நிலைவிளி ) நிறுத்தாமல் கூப்பிட்டுக் கொண்டிருப்பது. மலையாளத்தில் இது வீட்டுப் பயன்பாட்டில் உள்ள சொல்).

அம்மை அம்மா, அக்கை அக்கா,  இந்த ஆள் இறுதி எங்கிருந்து வந்தது?

இதில் எவை எவை வேற்றுமை உருபு ஏற்கின்றன?

அக்கை >அக்கைக்கு;  ( அ(ந்த)க் கைக்கு ( கரத்துக்கு)ச்  சூடு வை என்ற வாக்கியம் கவனிக்கவும். இது அக்காவுக்கு என்றும், குறித்த கைக்கு என்றும் இருபொருளில் வரும்.)

அம்மை > அம்மைக்கு; "அம் மைக்கு விலை குறைவு. தரமும் குறைவு. இட்டால் அரிப்பு ஏற்படுகிறது". இதுவும் இருபொருளில் வரும்.

தங்கை > தங்கைக்கு;  இது தம்+ கைக்கு என்றும் பிரியும்.

அக்காளுக்கு, அம்மாளுக்கு என்பவற்றில் "காளுக்கு"  ."மாளுக்கு" என்பன பொருளற்றவை.

தங்காள் என்ற வடிவம், நல்லதங்காள் என்ற பெயரின் இறுதிப்பாதியாய் வரும். தனித்து நிற்புழிக் காண்க.

காள்,மாள் என்று வரும் கடைப்பாதிகளெல்லாம், புணர்ச்சியினால் போந்த வடிவங்கள். இவற்றிறுதி ஆள் என்பதே.

அம்மை + ஆள் = அம்மாள்.
அக்கை + ஆள் =  அக்காள்
தங்கை + ஆள் = ~தங்காள்.
உமை + ஆள் =  உமையாள்.

அம்மை என்றால் இப்போது ஒரு நோயைக் குறிக்கிறது. தாயைக் குறிக்கும் இந்த நல்ல தமிழ்ச்சொல் அந்த வடிவில் வழங்கவில்லை. மலையாளக் கரையோரம் சென்றால் இந்தச் செந்தமிழ் வடிவைச் செவிகுளிரக் கேட்டின்புறலாம். உயர்வு குறிக்க வழங்கும் போது மட்டும் அம்மையார் என்ற வடிவம் வரும். எ‍‍-டு:  இந்திரா காந்தி அம்மையார்; ஙூயன் வான் தியூ அம்மையார். மார்கரட் தாட்சர் அம்மையார்.

ஆள்  என்ற சொல்  பெண்பால் விகுதியாக, பெண் என்று காட்டும், முழுச்சொல்லாக ஆள் (ஒரு பெண் அல்லது ஆண் ), ஆளுதல் (ஆட்சி) என்றெல்லாம் பொருள்சுமந்து வருகிறது. நமது மன்பதை ஒரு காலத்தில் பெண்வழி நிறுவமாய் நின்றிருந்ததை இது தெளிவுறுத்த வல்லது,
matrilineal,  matriarchal society,







   

சனி, 7 பிப்ரவரி, 2015

Russian word for worship

போச்சிதனிய என்று உருசிய மொழியில் சொன்னால் அது இறைவனைத் தொழுதல் என்று பொருள். பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை   தென்னாட்டினது ஆகும்.    பூசை என்ற சொல்லும் பூ செய் என்பதினின்று விளைந்ததே ஆகும்.

உருசிய மொழியில் இது போச்சி ஆகிறது. தண்ணீர் என்பது தணிய ஆகிறது.  ஆக பூ செய் தண்ணீர் என்பது போச்சிதனிய ஆயிற்று.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பல தமிழ் மூலங்கள் உள்ளன என்பதை முன்பே ஆய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். செமித்திய மொழிகளிலும் பல சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாக தோகை என்பது இப்ரூ அல்லது எபிரேய மொழியில் இருப்பதை அறிஞர் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.  சுமேரியாவில் தமிழர் இருந்ததை மறைமலை அடிகள் ஆய்ந்து கூறியுள்ளதை நினைவு கூர்க

Russian word for worship, Tamil connection

போச்சிதனிய என்று உருசிய மொழியில் சொன்னால் அது இறைவனைத் தொழுதல் என்று பொருள்படும் . பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை   தென்னாட்டினது ஆகும்.    பூசை என்ற சொல்லும் பூ செய் என்பதினின்று விளைந்ததே ஆகும்.

பூ  செய்  > பூசை  > பூஜை
பூ செய்  > பூச்செய் >  போச்சி  அல்லது போசி 

தண்ணீர்  > தண்ணி >  தனிய 

உருசிய மொழியில் இது  (பூசெய் அல்லது  பூச்செய் )  போச்சி ஆகிறது. தண்ணீர் என்பது தணிய ஆகிறது.  ஆக பூ செய் தண்ணீர் என்பது போச்சிதனிய ஆயிற்று.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பல தமிழ் மூலங்கள் உள்ளன என்பதை முன்பே ஆய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். செமித்திய மொழிகளிலும் பல சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாக தோகை என்பது இப்ரூ அல்லது எபிரேய மொழியில் இருப்பதை அறிஞர் எடுத்துக்காட்டியுள்ளன‌ர். 1 சுமேரியாவில் தமிழர் இருந்ததை மறைமலை 
அடிகள் ஆய்ந்து கூறியுள்ளதை நினைவு கூர்க


1 அறிஞர்  கால்டுவெல்.