செவ்வாய், 31 மார்ச், 2015

Our old viceroys -- ஏற்றாண்டார்

ஏற்றாண்டார்  என்பது  பழந்தமிழ்  அரசு அலுவலரின் பட்டப்பெயர்.  இது மிக்க அழகாகத்  தனித்தமிழில் அமைந்த ஒரு கூட்டுச் சொல் ஆகும்.

இதன் பொருளை ஆய்ந்தால் இது  ஆங்கிலத்தில் viceroy என்பதற்கொத்த உள்ளீட்டினைத் தருகிறது.   அரசரே  நேரடியாக ஆட்சி செலுத்துதலுக்கு  ஏதோ காரணத்தால் ஒத்து வராத ஒரு வட்டத்தை  ஏற்றுக்கொண்டு  அதனைத் திறம்பட  ஆட்சி புரிந்தவர் என்ற பொருள் இச்சொல்லில் நன்கு தொனிக்கிறது.

பிற மொழிக் கலப்புச் சொல்லாக இல்லாமல் இப்பட்டப்பெயர் அமைந்தது அரசின் தமிழ் ஈடுபாட்டையும் பட்டம் பெற்றவரின் தமிழ்ப் பற்றையும் விளக்குவதாகக் கொள்ளுதல் வேண்டும். 

ஏற்று என்ற சொல் இதில் திறமாகக்  கையாளப் பட்டுள்ளது.

"vice roy"   என்பதில் உள்ள  "வைஸ்" என்பதற்கு இன்னொரு சொல் தேடிக்கொண்டிருக்கும் புலவர்க்கு "ஏற்று"  என்பதும் சிந்திக்க வைக்கும் தமிழ்ச் சொல் ஆகும்.  ஒரு பேரரசனுக்காகப்  பொறுப்பை மேற்கொள்கிறார் -
இதுவே உண்மை நிலை அல்லவா ?

Whenever a word occurs in the past tense like "ANdar"  it denotes an accomplishment,  though the holder of the underlying official position might have contrinued.in his political power and ruling of the place. In modern parlance,  it could have been variously expressed as "ERRatchiyar". 

The city before LKY


Friday, March 20, 2015

லீ குவான் யூவிற்கு முந்திய சிங்கப்பூர்

நகரத்தில் உள்ள  கல் கட்டிடங்களில்  தண்ணிர்ப் பகிர்வு முறை இருந்தது  வீட்டிற்குக் குழாய்களின் மூலம் தண்ணிர்  தரப்பட்டது.  இவ்வீடுகளில் பெரும்பாலும் ஒரு கிணறும் இருக்கும்/    மக்கள் இரண்டையும் பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். பின்பு என்ன  ஆயிற்று என்று தெரியவில்லை.  கிணறுகள் மறைந்து குழய் தரும் நீர் மட்டுமே பயன்பாடு கண்டது,

தண்ணிர் அடைப்பு திறப்புக் கருவிக்கு பீலி என்று சொல்வார்களாம்.  இது என்ன சொல் என்று தெரியவில்லை.  பொதுக் குழாயடிகளும் இருந்தன.  லீ வந்தபின் இந்தப் பொதுக் குழாய்களில்  தண்ணிர் இலவசமாகப் பெறும் முறை மறைந்து விட்டது ,

கழிவறைகளில் தண்ணீர் இழுக்கும் தூய்மை முறை பலவிடங்களில் இருந்தது.  இதனை இழுப்புக் கக்கூஸ் என்பர்.  ஆயினும் எடுப்பு முறையும் இருந்தது (  எடுத்து அப்புறப்படுத்தும் முறை. ) சிற்றூர்ப் புறங்களில் பெரும்பாலும் எடுப்பு முறைதான்.

கழிவு வாயுவில் எரியும் தெருவிளக்குகள் இருந்தன. மின் தெரு விளக்குகளும் இருந்தன.போக்கு வரத்து விளக்குகளும் இருந்தன   காவலர் கையசைவுகளால் வண்டிகளுக்கு வழிகாட்டும் முறையும் இருந்தது.

லீ ஆட்சி அமையுமுன்பே சிங்கை நகரம் என்னும் தகுதியைப் பெற்றிருந்தது. ஒரு  நகர அவையும் அவைத்தலைவரும் இருந்தனர்.  நகர உள்ளாட்சி முறை இருந்தது.

But there were not many flats in Singapore as you see today.

சிங்கப்பூர்  நகரத்திற்கு எல்லைகள் வைத்திருந்தார்கள்.  அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை Outside city limits
என்று  குறிப்பிட்டார்கள். உதாரணமாக தெம்பெனிஸ்  வட்டாரம் நகர எல்லைகளுக்கு அப்பாற் பட்ட பகுதியாகும்.  இவ்வெளிப் பகுதிகள்  மாவட்ட அவைகளினால் ஆளப்பட்டன.  நகரப் பகுதிகளை  நகர அவை பார்த்துக்கொண்டது.  நகர  அவைஞர்கள் ( கமிஷனர்கள் பின்னர் ) city councilors  எனப்பட்டனர்.  உள்ளாட்சிக்கு ஒரு மந்திரி இருந்தார்.

திங்கள், 30 மார்ச், 2015

Sleep: "Niththirai"

உறக்கம் என்பது  அலை அலையாக வருவது.

ஓர்  அலை வருகிறது.  அதில் அமிழ்ந்து உறங்குகிறீர்.  ஆழ்ந்த உறக்கம்  சற்று மாறி  இன்னோர் அலை வருகிறது.  மீண்டும் உம்மை  அழுத்துகிறது.  அதில் அமிழ்ந்து தொடர்ந்து தூங்குகிறீர்.  இப்படிப் பல் அலை அமிழ்வுதான் உறக்கம் ஆகும்.

இப்போது நித்திரை என்ற சொல்லைக் காண்போம்.

நி என்பது நில் என்பதன் கடைக்குறை.   நில்>   நி.   திரை என்பது அலை என்று  பொருள்படும்.  அது ஒரு விகுதியுமாகும்.

நி + திரை = நித்திரை.

நில் + திரை =  நிற்றிரை > நித்திரை  எனினுமாம்.

இதன் பொருள் ,  "நிற்கும் அலை " என்பது:  அலையாக வந்து உறக்கத்தில் அமிழ்த்தி  நின்றுவிடுகிறது.   நிற்றலே உறக்கத்தின் தொடக்கம்  அல்லது தொடர்தல்.   Sleep comes in circles  என்று  பிறரும் கூறுவர்.    இதை நம் முற்கால மனிதரும்  உணர்ந்திருந்தனர்.  அதனால்தான் இச்சொல் இப்படி அமைந்துள்ளது.

தமிழில் உள்ள சொற்கள் சிலவற்றை ஆய்ந்தால்  பிறமொழியில் புரியாதது
புரிந்துவிடுகிறது  என்று ஸ்ரீ  அரவிந்தர் சொன்னதன் உண்மை இப்போது புலனாகும்.

நீங்கள் அங்கிருப்பதாகவே நாங்கள் சொல்வோம்

வீடு  கட்டிக்கொடுத்தார்,  வீதி  போட்டுக் கொடுத்தார்,  காடு அழித்துக் கால்பந்துத்  திடல் அமைத்தார்,  கழனியே இல்லாத நாட்டில் கால்வயிறு என்று யாரும் கழறாமல் முழு நிறைவான உணவு கிடைக்க முன்னுரிமை தந்தார்,  போக்குவரத்துத் துறையில் புதுமைகள் செய்தார்,   தாக்கும் வெயிலைக் குறைக்கத்  தக்க மரங்கள் நட்டுப்  பூக்கும் அழகுப் பூந்தோட்ட நகரம்  நிறுவினார்,   ................(இத்யாதி  இத்யாதி...)   அவர்  செய்து முடித்தவை எல்லாம்  அடுக்கி எழுத,  இந் நாள்  போதாது;  பன்னாள்  வேண்டும்..

ஆனாலும் இவையெல்லாம்  இங்குள்ள மக்கள் சொல்பவைதாம்.   அவர்தம் பன்முகப் புகழில் ஒரு பகுதிதான்.  அவர் அரசியல் அறிஞர். அதை முழுமையாகப்  பேச , நமக்கும்  அரசியற் கலையும்  உலக அரசியலும் தெரிந்திருக்கவேண்டும்.

உலக அரசியலில் அவர் மன்னன்.

இப்போது அவர் மறைந்துவிட்டார்.   அவர் கருத்துப்படி,   அவர் மறைந்தபின் அவர் இல்லை. அவர் மனைவியும் இன்றில்லை.  சொர்க்கம்  நரகம் கடவுள் 
என்பவை  அவர்தம் அக்கறையில் இல்லை.  இதில் சிலர் மெத்த வருத்தம் கொள்கின்றனர்.  "  உங்கள் தொண்டுள்ளத்திற்கு  நீங்கள் சொர்க்கவாசியாய் இருக்கவேண்டும்; "  என்கின்றனர். " நீங்கள் இல்லை யென்றாலும்  நீங்கள்  அங்கிருப்பதாகவே நாங்கள் சொல்வோம் "  என்று சிலர் தெளிவாகச் சொல்கின்றனர். ...............

வெள்ளி, 27 மார்ச், 2015

Tamil for vinegar and sandpaper.

பத்தசாரம் -   சீமைக்காடி.  ( English:  vinegar ).

பட்டச்சீலை   -   sandpaper.  ("மணற்காகிதம் ")


If there are other translations of these product names, please share with us. (Pl  use the comments feature ).

Preceding generations of Tamils might have had Tamil names for these products  but these may have fallen into disuse.  Should we not search, collect and bring them into use again?

Notes on word Brahman.

bh  (Sanskrit) < >  f (Latin).

Since l  is older than r,

bh <>  fl.

Therefore,

Brahman  <>   flamen (Latin).

Persian:  bresman.

brahman has many meanings:  some:-
யாகமேடை;  யாகம்;  இவற்றைச் செய்யும் மனிதன். இன்ன பிற.
பிராமன்  மனிதனைக் குறிப்பது ஆகுபெயர்.   derived meaning

flamen (Latin).  இலத்தீன் வழங்கிய நாட்டில்  புரோகிதர் எனினும் இது ஒரு தொழில்; சாதியன்று.

திரி சங்கு  (யாகம் செய்தார் )  :  விஸ்வாமித்திரர்  புரோகிதர்.
சந்தனு  (யாகம் செய்தார் ) :    தேவபி  புரோகிதர்.


ப்ரெஸ்மன்  என்னும் பாரசீகச்  சொல்.  பொருள் புல்கட்டு

Jupiter the pita of Dialis  ( a god) :    புரோகிதன்  Flamen Dialis.(1)

மனைவி இழந்தவன் புரோகித வேலையிலிருந்து விலகவேண்டும்.

flammen > flamoniam > braminium.

பழங்காலப் புரோகிதன்  நீதிபதி போன்றவன்.  குற்றவாளிகளைத் "தூய்மைப் படுத்தியவன்" . தண்டிக்கும் வல்லமை யுடையோன்.  புல் =  தூய்மைப் படுத்தும் கருவி.

ரிக் வேதம் :  தர்ப்பைப் புல்

bibliography:

C M Malwani, The Indo-Eropean Language.
Nirubendra kumar Dutt. Prof of History. Hoogly College.  : Origin and Development of Indian
Castes.
Rajamanickam, M.  Dr.  Essays. 2012.

References:

(1) Proceedings:  3rd Oriental Conf. (Madr 1924) p116.

குறிப்பு:  தமிழர்  புல்லைப்  போற்றியதாகத் தெரியவில்லை.
புல்  > புன்மை (புல் +மை).   (புன்மை : இழிவு .)  ஏன் ?

Jupiter : ஊ  பீடர் :  ஊ  -  முன்னிருப்பது;  பீடர்:  பீடமுடையவர்
முன்னிருக்கும் பீடத்தவர் என்று தமிழில் பொருள்கொள்ளலாம்
ஜூ >  யூ > ஊ .

Jupiter  >(Latin:)   Iuppiter, It was the foremost of the 3  Roman gods.  The Tamil etymology directly explains the cause of the word formation.

பிதா என்ற வடசொல்லும் ஒரு புனைவு.   தாய் , பின் என்ற சொற்கள் முன் பின்னாகப்  புனையப்பெற்றுள்ளது.  பின் > பி ;  தாய் > தா .  மாதா முன்;  தகப்பன்  அவள் பின்புதான்.  ஜூ பிடர்  என்பதில்  இறுதி  பிதா என்பது என்பர்  மேலை ஆசிரியன்மார்..

வியாழன், 26 மார்ச், 2015

பட்டாளம் என்ற சொல்

படை என்ற சொல்  படு+ ஐ  என்று பிரியும்.  இது போரிடுவோரைக்குறிக்கும் சொல்.  படுதல்   என்பதற்குப் பொருள் பல.  போரிடுதல் (தாக்குதல்) என்பதும் ஒன்று.

பட்டாளம் என்பது  படு + ஆளம் என்று பிரியும்.  ஆளம் என்பது இங்கு தொழிற்பெயர் விகுதியாய் வருகிறது.  இந்த "ஆளம்"  வினைச்சொல் அல்லாத வற்றுடனும்  இணைந்து சொற்களைப் பிறப்பிக்கும்.  "மலையாளம் "  எனல்போல.

பட்டாளம் என்பதில் டகரம்  இரட்டித்தது.

பட்டாளம் என்பதும் போரிடுவோரைக் குறிப்பதே.

அயினி food.

அயிலுதல் என்றால்  உண்ணுதல்  அல்லது நீர்  அருந்துதல்.

லகரம் னகரமாய்த் திரியும் என்பதை முன் ஓர் இடுகையில், அண்மையில்தான் எழுதியிருந்தேன்.  மறந்திருக்க மாட்டீர்கள். Click here:-http://sivamaalaa.blogspot.com/2015/03/blog-post_14.html

அயில் > அயிலி > அயினி.

அயினி:  பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தரும் விருந்து.  
இது தமிழ் நாட்டில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை. கேரளாவில் உள்ளது.

தீண்தேர் நன்னற்கும் அயினி சான்மின் என்ற மலைபடுகடாம்  (பத்துப்பாட்டு)  காண்க.

சான்மின்  :   சால் + மின் .   சாலுதல் =  நிறைதல் ;   சான்மின்  -  நிறைக்க  என்பது. திண்தேர்  - திண்மையான தேரை உடைய ;  பலம் பொருந்திய தேரை உடைய 

நாம் எத்தனை சொற்களைத்தாம் இழந்திருப்பது.......

புதன், 25 மார்ச், 2015

ஞாயிறு, 22 மார்ச், 2015

The passing of Mr Lee Kuan Yew


Modern Singapore's founding father, Lee Kuan Yew, dies at 91

more at:




http://www.reuters.com/article/2015/03/22/us-singapore-leekuanyew-idUSKBN0MI08Y20150322



Condolences to the family, government and to Singapore.

வனதரையர் ( வல்லெழுத்து மிகாமை)



வனதரையர்  என்பது பழந்தமிழ் நாட்டில்  ஓர்  ஆட்சி அலுவலரின் பெயர்.  இதன்  நிலை மொழியானது (first component in the compound word)  "வனம் " என்பது. இதற்குக் காடு, மரங்கள் செடிகள் முதலியன அடர்ந்த நிலப்பகுதி  என்பது பொருள் -   இது நீங்கள் அறிந்ததாகும்.   இதில் வருமொழி (இணைந்த சொல் )  அரையர்,  அல்லது தரையர்.

அரையர்  : அரசர்  அல்லது  அவரின் கீழ்  ஆட்சியாளர் ,
தரையர் : தரை அல்லது நிலம் உடையவ ர்   நிலத்தை ஆள்பவர்   


வனம் + அரையர் = வனவரையர்  ( This is correct outcome but the compound word that comes down to us is not in this form). 

வனம் + அரையர் =  வனத்தரையர் .   இதில் அத்துச் சாரியை உள்ளது.  ஆனால்  வல்லெழுத்து  மிகுவதால்,  அதைத் தொகுத்து,  வனதரையர்  என்று கொள்ளலாம். (கல்வெட்டுக்களில்  இங்ஙனம்  ஒற்றுக்கள்  விட்டு  வருவதுண்டு ).

வனம் + தரையர் =  வனத்தரையர் >  வனதரையர்  (வல்லெழுத்து  மிகுவதால்,  அதைத் தொகுத்து,  வனதரையர்  என்று கொள்ளலாம்.) (கல்வெட்டுக்களில்  இங்ஙனம்  ஒற்றுக்கள்  விட்டு  வருவதுண்டு ). Saving space and labour  in  making stone tablets.)

This term is South Indian and from Tamil  country.  Not Skrt.

வன திரையர் என்று கொண்டாலும்  இத்தொடர்  வலிமிகாதே  பேச்சிலும்  எழுத்திலும்  தோன்றுகிறது.  The same problem manifests itself and the explanations here will apply

திரை என்பது  கடலலையையும்  ஆகுபெயராய்க் கடலையும் குறிக்கும் என்ப .  ஆகையால்   திரையர் என்போர்,  1. கடலாட்சி செலுத்தியோர் என்றோ,  2. கடலுக்கு  அப்பாலிருந்து தென்னிந்தியா / தமிழ் நாட்டுக்குள்  குடியேறியோர்  என்றோ பொருள் படுமென்று  வேறுபடக் கூறுவர்.  நாகரென்று சிலர் ஐயுறுவர்.   இதனுள் யாம் செல்லவில்லை.  வலி மிகுமா  மிகாதா  என்பதும்  மிகுமாயின்  ஏன் சொல்லில் தோன்றவில்லை என்பதுமே இங்கு ஆயப்பட்டது. 

லகரம்   னகரமாய்த்  திரியும்;   இதற்குப் பல எடுத்துக்காட்டுகள்  உள;  ஒன்று:  மேல  > மேன .  தொல்காப்பியச் சொல்.   வலம் என்பதே வனமென்று திரிந்ததென்று கொள்ளலாம்     அங்ஙனமாயின்  போரில் வலிமை காட்டிய என்று பொருள் படலாம் .]\

வெள்ளி, 20 மார்ச், 2015

நேர்ந்துகொண்டு கிடை த்த வெற்றி

சிங்கப்பூர்க்  கெல்லாம் சிறப்பாய் முடிந்ததுவே 
தங்கநிகர்  இத்தீவைத்  தானையர்மேற்  கொண்டதிலை;
தேர்ந்தெடுத்த  ஆட்சியே  தேற்றமாய்  நிற்கவெற்றி 
நேர்ந்துடுத்த காப்பாய் நிலை


கடவுளிடம் வெற்றிக்கு  நேர்ந்துகொண்டு கட்டிக்கொண்ட காப்புக்கு  வெற்றி   கிட்டியது போல் ,   யாவும் நிலைபெற்றது.

தனையர்  -   படைத்தலைவர்.   (இராணுவ  ஆட்சியைக் குறிக்கிறது  ) .   

நேர்ந்துகொண்டு  கிடை த்த வெற்றி , 

லீ குவான் யூவிற்கு முந்திய சிங்கப்பூர்

நகரத்தில் உள்ள  கல் கட்டிடங்களில்  தண்ணிர்ப் பகிர்வு முறை இருந்தது  வீட்டிற்குக் குழாய்களின் மூலம் தண்ணிர்  தரப்பட்டது.  இவ்வீடுகளில் பெரும்பாலும் ஒரு கிணறும் இருக்கும்/    மக்கள் இரண்டையும் பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். பின்பு என்ன  ஆயிற்று என்று தெரியவில்லை.  கிணறுகள் மறைந்து குழாய் தரும் நீர் மட்டுமே பயன்பாடு கண்டது,

தண்ணிர் அடைப்பு திறப்புக் கருவிக்கு பீலி என்று சொல்வார்களாம்.  இது என்ன சொல் என்று தெரியவில்லை.  பொதுக் குழாயடிகளும் இருந்தன.  லீ வந்தபின் இந்தப் பொதுக் குழாய்களில்  தண்ணிர் இலவசமாகப் பெறும் முறை மறைந்து விட்டது ,

கழிவறைகளில் தண்ணீர் இழுக்கும் தூய்மையுறுத்து  முறை பலவிடங்களில் இருந்தது.  இதனை "இழுப்புக் கக்கூஸ்"  (flush toilets)  என்பர்.  ஆயினும் எடுப்பு முறையும் இருந்தது (  எடுத்து அப்புறப்படுத்தும் முறை. ) சிற்றூர்ப் புறங்களில் (kampongs or villages) பெரும்பாலும் எடுப்பு முறைதான்.

கழிவு வாயுவில்  (coal gas with methane ) எரியும் தெருவிளக்குகள் இருந்தன. மின் தெரு விளக்குகளும் இருந்தன.போக்கு வரத்து விளக்குகளும் இருந்தன   காவலர் கையசைவுகளால் வண்டிகளுக்கு வழிகாட்டும் முறையும் இருந்தது.

லீ ஆட்சி அமையுமுன்பே சிங்கை,  நகரம் என்னும் தகுதியைப் பெற்றிருந்தது. ஒரு  நகர அவையும் அவைத்தலைவரும் (mayor) இருந்தனர்.  நகர உள்ளாட்சி   (local government) முறை இருந்தது.

But there were not many flats in Singapore as you see today.

சிங்கப்பூர்  நகரத்திற்கு எல்லைகள் வைத்திருந்தார்கள்.  அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை Outside city limits
என்று  குறிப்பிட்டார்கள். உதாரணமாக தெம்பெனிஸ்  வட்டாரம் நகர எல்லைகளுக்கு அப்பாற் பட்ட பகுதியாகும்.  இவ்வெளிப் பகுதிகள்  மாவட்ட அவைகளினால் (district councils)  ஆளப்பட்டன.  நகரப் பகுதிகளை  நகர அவை (municipal or later city council ) பார்த்துக்கொண்டது.  நகர  அவைஞர்கள் ( கமிஷனர்கள் பின்னர் ) city councilors  எனப்பட்டனர்.  உள்ளாட்சிக்கு ஒரு மந்திரி இருந்தார்.

வியாழன், 19 மார்ச், 2015

ஊருக்கு உழைக்கப் போய்‍‍‍...............


ஊருக்  குழைக்கும் திறமுடையார் ‍‍‍=== வயல்
உழைப்போர்க் கரிதரும் திட்டமிட்டார்;
யாருக் கதில்பயன் என்றெதிர்த்தோர்‍‍=== வழக்கு
யாத்தனர் குற்றம் நுனித்தறிந்தார்.

மக்களுக் கொன்று நலம்புரிய ‍‍=== நெஞ்சம்
மதியுடன் சென்று செயல்படினும்.
தக்கது சூழ்நிலை இல்லையெனில்=== அதன்
தாக்கம் உறுத்தும் துயர்பலவாம். ‍‍‍

நிலவு முகக்கவின் நேரிழைக்காம் ‍=== இது
நேர்வது முன்வினை தன்விளைவோ?
குலவு நகைதவழ் மென்குடியில் ‍‍‍=== நாளைக்
கோலம் தவிர்கதிர் தோன்றிடுமோ?

அரி  -  அரிசி    வயல் உழைப்போர் -  விவசாயிகள்.
மக்களுக்கொன்று -  மக்களுக்கு ஒன்று .
கவின் -  அழகு.  மென் குடி -   மென்மையான குடும்பமும் சுற்றமும் 
கோலம் -  இங்கு அலங்கோலம் குறிக்கும்.   கதிர் -  சூரியன்.
நுனித்து -  ஒரு நுனியில் இருப்பது ;   அறிந்து - (அதை) அறிந்து (( கண்டுபிடித்து ( 
குலவு  :  )இங்கு)  அன்பு   கலந்த ( மென்மை மிக்கக்  குடியில்;. ).



BANGKOK: Thailand's Supreme Court accepted criminal charges against  former Prime Minister Yingluck Shinawatra on Thursday. on alleged mishandling  of    rice subsidy scheme, carrying 10 years if found guilty.
Story  here:-
http://www.channelnewsasia.com/news/asiapacific/thai-supreme-court-accept/1726282.html

On evidence:


Ms Yingluck cited an investigation report with comments by the National Anti-Corruption Commission.
"The report said there was 'no evidence' that I had been corrupt 'or allowed anyone to be corrupt', but the commission still found me guilty.
"Before the Office of the Attorney General indicted me, it pointed out several points considered flaws in the report. 
"However, the prosecution did not conduct an additional investigation into those points.  Instead, the prosecution rushed the indictment.
"This did not follow a regular procedure, which requires the accused to rerceive justice," Ms Yingluck wrote.
She continued: "Even though the Supreme Court has accepted the case for trial, I am still confident of my innocence and evidence to prove that I have not done anything wrong".
"I only hope that during the trial I will be given the right to access the true justice process and the opportunity to present facts, arguments and evidence to fight the case," Ms Yingluck said.
Ms Yingluck said she hoped the trial would be rightful, transparent and just without prejudice, adding that she felt she had not been given the right to fight after being accused, with the intention to destroy her politically.

"I would like to call for all sides to cease any criticism, pressure or misleading comments for political gain  until the Supreme Court has completed the judicial process," she added.





புதன், 18 மார்ச், 2015

first the mantras then the language

In "Rules without Meaning" Staal controversially suggested that mantras "predate language in the development of man in a chronological sense". He pointed out that there is evidence that ritual existed before language, and argued that syntax was influenced by ritual.
Wikipaedia.

மந்திரங்களே  முதலில் தோன்றின;  பின்னரே மொழி  அமைந்து அது பண்படுத்தப் பட்டது  என்றார் அறிஞர் ஸ்டால்,  இந்தப் பேராசிரியரின் கருத்து  ஒரு சில மொழிகட்குப் பொருந்துவதே ஆகும் . இவற்றுள்ளும்  சமஸ்கிருத மொழிக்கு  அது முற்றிலும் பொருத்தமானது  ஆகும் . .

மந்திரங்கள்  சொல்லிப் பிழைப்பவர்  எடுத்த எடுப்பிலேயே  கோட்டை கொத்தளங்கள்  அரண்மனைகள் முதலிய வற்றுக்குள்  நுழைந்து மேலாண்மை செலுத்தினர் என்று நினைப்பது  உலக இயல்பு  அறியாத முட்டாள்தனமாகும் .  பல மரத்தடிகளில் தங்கி அலைந்து திரிந்து  எப்படியோ ஓர்  அரசனைச் சந்திக்க இயலும்போதுதான்  மந்திர மொழிஞருக்கு   ஆகூழ்  ( அதிருட்டம்)   அடித்துவிட்டது என்று பொருள் . அரசனிடம் மந்திரம்  படித்து  அரசனுக்கும்  அதன்பின்  நல்லது நடந்து  மந்திரம் சொல்பவன்பால் பற்றுமிகும்போதுதான்  சீரான நிலை ஏற்படுகின்றது.

இதன்பின்  பல்வேறு   மந்திரங்களையும்  இணைத்து நோக்கி  பாணனாகிய பாணினி போல் ஒரு படித்தவன்  சில இலக்கண விதிகளையாவது  இயற்றித் தரும்போதுதான்  மொழியானது  அமைப்பு நிலையை அடைகின்றது/  இப்படி  அமைந்ததுதான் சமஸ்கிருத மொழியாகும் 

பேச்சில்  வளர்ந்த மொழிக்கும்  மந்திரங்களிலிருந்து  அ மைந்த மொழிக்கும் வரலாறு  வேறுபடும்   இதைத்தான் ஸ்டால்  எடுத்துச் சொன்னார் ;   ஆனால்  விளக்கம்  கேட்டோர்  அதனை நன்கு  புரிந்துகொள்ளவில்லை  போலு ம்.  அதனால்  அப்போது  அதைப் பலர் ஒத்துக்கொள்ளவில்லை .  

மந்திரத்தில்  விளைந்த மொழியே  இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம்  தாயாகிவிட்டது  என்பதை  மேலையர் எப்படி  ஏற்றுகொள்வார்கள் ? அவர்கள்  அதை  ஏற்காதது  எதிர்பார்ப்புக்குரியதே.

மந்திரப் பாடல்கள்  திரட்டப்படும் போது, விடப்பட்டவையும்  இறந்தவையும் பல என்று ஆய்வாளர்கள்  சிலர் சொல்வர்.  எஞ்சியவையே  இருக்குவேதம் ஆயிற்று.

இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் பல்வேறு சாதியினர்.  எந்தெந்தச் சாதியினர் என்றோ  என்னென்ன மொழிகள்/ கிளைமொழிகள்  பேசினர்  என்றோ  தெரியவில்லை. மந்திரம் சொல்வதில் வெளியிலிருந்து வந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டனர் என்று கூற எந்த ஆதாரமும்  இல்லை. ஆனால் அவர்களிடம் வழங்கிய சொற்கள் பலவற்றைக்கொண்டும்  பாகத மற்றும் திராவிட, முண்டா மொழிகளின் சொற்களைக்கொண்டும்  ஒரு புதிய மொழி உண்டாக்கிப்   பல சொற்கள் தொலைந்துவிடாமல் காப்பாற்றப் பட்டன.  அதுவே  சமஸ்கிருதமாகும். 

பாணினியின் அஷ்டாத்தியாயி  என்றால்  எட்டு அத்தியாயங்கள் உடைய நூல் என்று பொருள்.  அட்ட என்பது  எட்டு என்பதன் திரிபு,   ஆங்க்கிலத்தில்கூட எய்ட் என்ப து எட்டு என்று பொருள்   
இலத்தீன்  "அக்டோ"  = எட்டு.   ஒவ்வொரு அத்தியாயமும்  அற்று,  அதன்பின் வருவதனோடு  இயைகின்றது.   அற்று என்பது  அத்து  என்று திரியும்.  பேச்சுத் திரிபு .அத்து+இயை +அம்  = அத்தியையம்  > அத்தியாயம் ஆனது.  இச்சொல்லின் தமிழின் பங்கு காணலாம் -  அது பெயரிலேயே வந்துவிட்டது.  பாண்> பாணன்;    பாண் >பாணினி..  பாண் >பாணர். அப்போது திராவிடர்கள்  நாவலந்தீவு  முழுமையும் பரவிக்கிடந்த காலம்.  வந்தவர்கள்  பல திராவிடச் சொற்களையும் முண்டா மொழிச் சொற்களையும்   ஆஃப்ரோ ஆசிய மொழிச் சொற்களையும்  கற்றுக்கொண்டு பயன்படுத்தினர்.  பின் இவையெல்லாம்  பண்படுத்தப்பட்டதே சமஸ்கிருதமாகும். 
We are just telling you how the terms were formed.  Whether we interpret it in this way or in any other way, you will be still using them  when referring to them.. Therefore your usage or otherwise is not affected by our interpretation. We have served only to make things clearer to you.



செவ்வாய், 17 மார்ச், 2015

ஊர் சுற்றி அழகு மாவு பூசிய சொற்கள்

சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை,  ஸ் , ஷ்   ( இன்னும் இவைபோல்வன ) முதலான எழுத்துக்கள் இல்லாதசொல் நாவால் ஒலிக்க ஓர்  அழகில்லாத சொல் என்று சொன்னால்   மிகையன்று.

கா என்றால்  எவள் என்பது. எவளுக்கு  என்று கேட்க வேண்டின் ஒருமையில்  "கஸ்யை " ?  என்று திரிந்துவிடுகிறது. எவளிடமிருந்து  என்று  கேட்க "கஸ்யா "?   என்று சொல் மாறுகிறது.

எவன் என்று பொருள் படும் "க :" என்னும்  சொல்,  பன்மையில் "எவர்களுடைய   "  என்று கேட்க "கேஷாம் "  என்று  மாறும்.

அம்மொழியின் இயல்பு ,  அடிச்சொல்லில்   ஸ் , ஷ்  இல்லாதபோதும்  இப்படி
மாறுகின்றன.

கடு + அம்  = கட்டம் என்பது  கஷ்டம் என்றும்   மாறியதில்  வியப்பென்ன?
இடு + அம்  = இட்டம்  (மனத்தை  இடுவது )  இஷ்டம் ஆயிற்றே ! இப்படிப்  பன்னூறு .
ஹா  ஹா ஹா என்ற சிரிப்பொலியிலிருந்து  ஒரு சொல் :  ஹா+ அம் >  ஹாயம்  என்று அமையவில்லை . ஹாஸ்யம்  என்று நடு "ஸ் " தோன்றியது.

பழம் என்பது தமிழ் . இது  நேரடியாகவோ  மற்ற பாகதங்கள் மூலமாகவோ  சமஸ்கிருதம் சென்றது ., ஹ்மெர்  மொழியில்  ப்ஹ்லே  ஆனது . வடமொழியில் "ப்ஹல "  ஆனது.  சில வேளைகளில் இடைப்பட்ட மொழியில்
சென்றேறுகையில் தமிழில் இல்லாத ஓர்  ஒலி  ஒட்டிக்கொள்ளும். பின் அந்தச் சொல் தன்  பயணம் தொடர்ந்து வடமொழி புகுதல் ஆய்வில் புலப்படும் . பழம் தமிழா அன்றா ?   மேலை (German Italian French etc ) இந்தோ ஐரோப்பியத்தில்  பழம் பலம் ஆகியவை இல்லை.  ஆதலின் அது திராவிடச் சொல்  = தமிழாகும்.

சம்ஸ்கிருதம் மின்னுவது இத்தகைய ஒலிகளால்தாம்.  வேற்றுச்சொல் எடுத்தாலும்  ஒரு ஸ் போடவேண்டும் .

இறைவர் >  இ - (ஷ்) -வர்  > ஈஷ்வர் >  ஈஸ்வர்  பின் ஈசுவரன் என்று தமிழுக்கே திரும்பியது . ஒவ்வொரு மொழியின் இயல்பும் அறியவேண்டும்.

ஊர் சுற்றி அழகு மாவு பூசிய  சொற்கள்  இங்கு சில .


    

திங்கள், 16 மார்ச், 2015

வடசொல் வரினும் கடிவரை கொள்ளார்

தொல்காப்பியத்தில் இடைசெருகல்கள் உள்ளன.  ஆனால்  அவை எவையெவை என அறிஞர் இன்னும் முடிவு செய்திலர். இச்செருகல்கள் தமிழுக்குப் புறம்பான கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பன வாதலால்,  அறிஞர் இவ்வினையில் ஈடுபட்டிலர். எனவே  காலக் கணக்குப் போடுகையில் "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ " என்பதுபோன்ற நூற்பாக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்று அறிஞர் கொள்கை வகுக்கின்றனர்.  அங்ஙனமாயின் தொல்காப்பியரின் காலம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.  "வடவெழுத்து ஒரீஇ"  என்பதனால் இந் நூற்பா எழுந்த காலத்தில் வடமொழிக்கு எழுத்து ஏற்பட்டுவிட்டதென்று பொருள்.

மேலும் இந் நூற்பா  சொல், கிளவி, சொல் என்று அதே பொருள் உள்ள சொற்களை, மும்முறை பயன்படுத்தியுள்ளது.   எழுத்து என்ற சொல்லும் இரண்டு முறை வந்துள்ளது.  தொல்காப்பியரே இவ்வரிகளை வடித்திருப்பின் வேறுவிதமாகப் பாடியிருப்பாரோ என்பது ஆய்வுக்குரியது. 

வடசொல் வரவும் கடிவரை இலவே
வடவெழுத் தொரீ இய காலை யான.

அல்லது

வடசொல் வரினும் கடிவரை கொள்ளார்
வடவெழுத் தொரீ இய முடிபி லான

என்பதுபோல் வந்திருந்தால் எதுகை மோனைகள் உளவாதலுடன்,  அதேபொருட் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல் இல்லாமல் நூற்பா இயன்றிருக்கும்.    ஆதலினாலும் இஃது ஐயத்திற்குரிய தொல்காப்பிய நூற்பா ஆகும். தொல்காப்பிய நூற்பாவெல்லாம் தொல்காப்பியர் நூற்பாவல்ல.


New jet also for Agong's, Sultan's use

PETALING JAYA: A pro-UMNO blog says a new private jet has been acquired to replace the VVIP jet BBJ373-700NG that is almost 20 years old and is expensive to maintain........


More at:


Posted on 16 March 2015 - 08:26pm
Last updated on 16 March 2015 - 11:46pm

காலக்கணக்கு

அகத்தியரும் தொல்காப்பியரும் தலைக்கழகத்தில் இருந்ததில்லை.  தலைக் கழக காலம் தோராயம் கி.மு. 10,000 - 5000.  அகத்தியர் தமிழகம் வந்த காலம் கி .மு. தோராயம் 1200.  தொல்காப்பியர் காலம் கி.மு. 6-ஆம் , நூற்றாண்டு.  தமிழின் முதுபழந் தொன்மையாலும் வரலாற்றறிவும் காலவாராய்ச்சியும் இன்மையாலும் முக்கழக வரலாற்றில்  முன்னவரையும் பின்னவரையும்  ஒரு காலத்தவராக மயக்கிவிட்டனர்.

கடல் கோளால் பாண்டியராட்சி இடையீடு பட்டதினாலேயே மூவேறு இடத்தில் மூவேறு காலத்தில் கழகம் நிறுவ  நேர்ந்தது. இரு கடல்கோள்களும்  நிகழ்ந்திராவிட்டால் தலைக்கழகம்  ஒன்றே இறுதிவரை தொடர்ந்திருக்கும்.

-

- கட்டுரை: மதுரைத் தமிழ்க் கழகம் ( தேவநேயப் பாவாணர்.) 

You may also refer to :-

http://sivamaalaa.blogspot.com/2012/06/tolkappiyam-timeline.htmltm

http://sivamaalaa.blogspot.com/2012/06/tolkappiyam-timeline.htmll 

ஐந்திரம் - 5 branches of grammar

இந்திரன் என்பவன் இயற்றியதே ஐந்திரம் என்று கூறுவாருண்டு. இந்திரனைப் பற்றி ய கதைகளை நோக்கும்போது, அவன் இலக்கண நூல் வரைந்தான் என்று சொல்வது நம்பத் தகுந்ததாய் இல்லை. காரணம், இந்திரன் வானுறை
தெய்வம், தேவர்களின் தலைவன், தானைத்தலைவன், மழைக்கடவுள் என்றெல்லாம் சொல்லப்படுவதுதான்.
இவ்வளவு வேலைகளையும் கவனித்த இந்திரன், மொழிக்கு இலக்கணம் இயற்ற நேரமும் வாய்ப்பும் உண்டாகியிருக்கமாட்டா. இந்திர என்ற பெயருடன் ஐந்திர என்பது ஒலித்தொடர்பு உடையதுபோல் செவிப்படுவதே இந்தக் கதை எழுவதற்குக் காரணம் என்னலாம். இதைச் சிலர் வரலாறுபோல் சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கை ஆகும். மேலும் சமஸ்கிருதத்துக்கு முற்காலத்தில் எழுத்துக்கள் இல்லை1. வேற்று எழுத்துக்களால் பின் அது எழுதப்பட்டது. "எழுதாக் கிளவி" என்ற சங்க இலக்கியத் தொடர், சமஸ்கிருதத்தைக் குறிக்கும்.
எழுத்து, சொல்,பொருள் , யாப்பு அணி என்ற ஐந்து இலக்கணம் தாம்
"ஐந்திறம்" எனப்பட்டது. பண்டைக் காலத்தில், திறம் என்பது பிற சொல்லுடன் கூடிவருங்கால் "திரம்" என்று எழுதப்பட்டது என்றுதெரிகிறது. திறம் என்பது விகுதியாகும் போதும், "திரம்" என்றே வரும். தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வரும். திறமும் அத்தகையதொன்று என்று தெரிகிறது. பாணிணியம் என்ற வடமொழி இலக்கணம், எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டையே கூறும். தொல்காப்பியம் ஐந்திலக்கணமும் கூறுகிறது.
எனவே ஐந்திறம் ‍ ஐந்திரம் என்பது ஐந்து இலக்கணம் என்பது குறித்ததாகலாம். இவ்வைந்து இயல்களிலும் தொல்காப்பியர் வல்லுநர்
என்பதே "ஐந்திரம் நிறைந்த" தொல்காப்பியன் என்பதன் பொருள் என்று
கூறுக.
வட நூல்களில் ஐந்திரம் பற்றிய கதைகள் ‍ தொல்காப்பியப் பாயிரம்
கண்டு எழுந்தவை ஆதல் தெளிவு,
வடமொழி இலக்கணம் என்பது பாணினி பாடியது மட்டுமே. இப்புலவர் ஒரு பாணர் என்பது தெளிவு. பாண் + இன்+ இ =பாணினி, பாணன் பாடியது என்பதாம்.


1 See John Kay;s History of India


குறிப்பு: சமஸ்கிருதத்துக்கு எழுத்துமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர். மந்திரக் குரல் ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக. எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது. வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது. சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக. சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள . மண்டரின் எழுத்து மொழி இது விரியாமல் நிலைப்படுத்தியது (18.11.2019)..

ஞாயிறு, 15 மார்ச், 2015

இலக்கியக் காதலர் உறவுமுறை

சங்க இலக்கியத்தில் வரும் காதலர்கள்  ஒருவருக்கொருவர்  உறவினர்களா அல்லது ஓர் உறவுமின்றி எதிர்கொண்டு காதலர் ஆனவர்களா ,--   சங்க காலத்தில் எத்தகைய முறை வழக்கிலிருந்தது  என்ற ஒரு கேள்வி உங்கள் மனத்தில் எழுந்ததுண்டா?


அகத்திணை இலக்கியங்களை நோக்குமிடத்து,  தமிழர் காதல் மணம்
புரிந்துகொண்டு வாழ்ந்ததாகவே தெரிகிறது. தாய்தந்தையரை அணுகி முறைப்படி பெண்பார்த்தபின் தலைவியைச் சந்தித்து காதலை வெளிப்படுத்திய நிகழ்வு எதையும் சங்க இலக்கியத்தில் இதுவரை படித்ததில்லை. எங்கேனும் இருக்கலாம். இருப்பின்  மிக அருகிய நிகழ்வாகவே அது இருக்கும் என்பதென் ஊகமாகும். பாரி மறைந்தபின் அவன் மகளிருக்கு மாப்பிள்ளை பார்த்து கபிலர் தொல்லைப்பட்டதுபோல் நிகழ்வுகள் உள.


சாதி முறைகள் நடப்பிலிருக்கும் ஒரு குமுகாயத்துக்கு ( சமுதாயத்திற்குக் )  காதல் மணமுறை இணக்கமுடையதன்று. காதலாகிறவன் எந்தச் சாதியானாகவும் இருக்கலாமாகையால், பின் அது இடர்தருவதாகிவிடும்  என்று  தெரிகிறது   ,

தற்போதுள்ள நடைமுறையில் முன்பின் பழகியிராத ஆடவர்  பெண்டிரிடையே தரகர் மூலமாய்த் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. இது வேறு படும் இடங்களும் உண்டு. இது பாதுகாப்பான நடைமுறை என்று பெற்றோர் நினைக்கின்றனர். சங்க காலத்து நடைமுறைகள் காதலன் கைவிடுதல் போன்றபல நிகழ்வுகள் நடைபெற்றதாலேயே வழக்கொழிந்தது  என்று தெரிகிறது.  இதற்கு ஆதாரங்கள் ஏதும் கிடைத்தில.

 இதனை நீங்கள் ஆய்ந்ததுண்டாயின், இங்கு நம் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வருமாறு அழைக்கிறோம்.











வியாழன், 12 மார்ச், 2015

கலந்துபோன இந்தியர்கள்

இந்தியாவில் சாதிகள் பல்கிப் பெருகியுள்ளன. . மற்ற நாட்டினர்  இவை  எப்படி ஏற்பட்டன  என்று அறிய முற்படுவது இயற்கை . இவ் அறி ஆவலுக்குக்  காரணம் அவர்கள் நாட்டில் இதுபோன்று  ஏதும் இல்லை. மேலும்  அங்குள்ள பகுப்புகள் அல்லது பிரிவினைகள் இந்தியாவில் உள்ளன போல் தொழிலடிப்படையில் இல்லை. அரசர்கள் தந்த பட்டப் பெயர்களின் அடிப்படையிலும் இல்லை. (வண்ணான் : தொழிலடிப்படை;  பிள்ளை:அரசர் தந்த பட்டப்பெயர்)  உதாரணமாக,  சீனாவின் கண்டோனீஸ்  அல்லது கொங்ஃபூ  கிளைஇனத்தினர்  கன்டோன்  கிளைமொழி  பேசுவர்;   கன்டோன்  என்னும் சீன மாநிலத்து மக்கள் ஆவர்.  ஹாக்கியன்  கிளைமொழியாரின் வேறுபட்டவர். கிளைமொழி வேற்றுமையும் சில  கலாச்சார  வேற்றுமைகளும்  உள்ளன.   உயர்வு  தாழ்வு  இல்லை. ஒரே குடும்பத்தில் ஒருவன் குப்பை கூட்டலாம்; இன்னொருவன்  மருத்துவத் தொழிலனாய் 
இருக்கலாம்.  சீனர் மஞ்சள்  நிறத்தினர்.

தமிழனை எடுத்துக்கொண்டால்  எல்லாம் கறுப்பினம் தான்;  ஆனால்  நான்  செட்டி ;  அவன் முதலி என்கிறான்    அப்படி என்றால் என்ன?  இது எங்களுக்குள் உள்ள வேற்றுமை; என்கிறார்கள். நான் கொஞ்சம் "கூட"; அவர் கொஞ்சம் "குறைவு"  என்கிறார்கள்.  You are of the same color, right?  என்கிறான் சீனன்.

சில வரலாற்று ஆசிரியர்கள் இவ் வமைப்பைத் தொழிலடிப்படைச்  சங்கங்கள் என்றனர்.

இதை இரத்த ஆய்வு செய்தோர், கூறுவது:  பல்வேறு குடியினர்   ஏறத்தாழ 4000  ஆண்டுகட்கு முன்தொடங்கி  சுமார் 1900 ஆண்டுகள் வரை (இவர்கள்)  மிச்சம்  ஏதும் இல்லாமல்  கல கல என்று கலந்துபோனவர்கள்.     பின்பு  இப்போது தொழில் வாரியாகப்  பிரிந்துவிட்டார்கள்   அவ்வளவுதான்  என்கின்றனர். பிரிவினை  அண்மையது  என்று முடித்தனர்.



Genetics Proves Indian Population Mixture

A new study indicates that population admixture in the pre-caste era occurred, shedding light on our understanding of present-day Indian populations

By DAVID CAMERON

August 8, 2013

Between 4,000 and 2,000 years ago, intermarriage in India was rampant. Figure by Thangaraj
KumarasamyBetween 4,000 and 2,000 years ago, intermarriage in India was rampant. Figure by
Thangaraj KumarasamyScientists from Harvard Medical School and the CSIR-Centre for Cellular and
Molecular Biology in Hyderabad, India, provide evidence that modern-day India is the result of
recent population mixture among divergent demographic groups.The findings, published August 8 in the American Journal of Human Genetics, describe how India transformed from a country where mixture between different populations was rampant to one where endogamy—that is, marrying within the local community and a key attribute of the caste system—became the norm. “Only a few thousand years ago, the Indian population structure was vastly different from today,” said co–senior author David Reich, professor of genetics at Harvard Medical School. “The caste system has been around for a long time, but not forever.”In 2009, Reich and colleagues published a paper based on an analysis of 25 different Indian population groups. The paper described how all populations in India show evidence of a genetic mixture of two ancestral groups: Ancestral North Indians (ANI), who are related to Central Asians, Middle Easterners, Caucasians, and Europeans; and Ancestral South Indians (ASI), who are primarily from the subcontinent.However, the researchers wanted to glean clearer data as to when in history such admixture occurred. For this, the international research team broadened
their study pool from 25 to 73 Indian groups.The researchers took advantage of the fact that the
genomes of Indian people are a mosaic of chromosomal segments of ANI and ASI descent.
Originally when the ANI and ASI populations mixed, these segments would have been extremely long, extending the entire lengths of chromosomes. However, after mixture these segments would have broken up at one or two places per chromosome, per generation, recombining the maternal and paternal genetic material that occurs during the production of egg and sperm.By measuring the lengths of the segments of ANI and ASI ancestry in Indian genomes, the authors were thus able to obtain precise estimates of the age of  population mixture, which they infer varied about 1,900 to 4,200 years, depending on the population   analyzed.While the findings show that no groups in India are free of such mixture, the researchers did identify a geographic element. “Groups in the north tend to ave more recent dates and southern groups have older dates,” said co-first author Priya Moorjani, a graduate student in Reich’s lab at Harvard
Medical School. “This is likely because the northern groups have multiple mixtures.” “This genetic datatells us a three-part cultural and historical story,” said Reich, who is also an associate member of the Broad Institute. “Prior to about 4000 years ago there was no mixture. After that, widespread mixture affected almost every group in India, even the most isolated tribal groups. And finally, endogamy set in and froze everything in place.”The fact that every population in India evolved
from randomly mixed populations suggests that social classifications like the caste system are
not likely to have existed in the same way before the mixture,” said co–senior author Lalji Singh,
currently of Banaras Hindu University, in Varanasi, India, and formerly of the CSIR-Centre for Cellular and Molecular Biology. “Thus, the present-day structure of the caste system came into being only relatively recently in Indian history.”*
But once established, the caste system became genetically effective, the researchers observed. Mixture across groups became very rare.“An important consequence of these results is that the high incidence of genetic and population-specific diseases that is characteristic of present-day India is likely to have increased only in the last few thousand years when groups in India started following strict endogamous marriage,” said co–first author Kumarasamy Thangaraj, of the CSIR-Centre for Cellular and Molecular Biology, Hyderabad, India.**
Mohan Rao, Director, CSIR-CCMB said, “CCMB's continuing efforts over a decade on this field had helped in understanding the complexity of Indian population history and social structure, such as caste systems.” This study was funded by the NIH (GM100233); NSF (HOMINID grant 1032255); a UKIERI Major Award (RG-4772); the Network Project (GENESIS: BSC0121) fund from the Council of Scientific and Industrial Research, Government of India; a Bhatnagar Fellowship grant from the Council of Scientific and Industrial Research of the Government of India; and a J.C. Bose Fellowship from Department of Science and Technology, Government of India




All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% o...f Iyengar Brahmins.[13][14] The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2.[13][14]

In a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[15


All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians.

தமிழ் வலைப்பூவுலகம்.

Undue interest shown by Dr Manmohan's PMO


http://www.thehindu.com/news/national/coal-scam-former-prime-minister-manmohan-singh-Forindustrial-kumar-mangalam-birla-and-four-others-summed-as-accused-by-a-special-court/article6981525.ece?ref=relatedNews

The undue interest shown by the Prime Minister's Office in facilitating the coal transactions has been focused by the special court in deciding to add Dr Manmohan as an accused in  the case.
  According to reports in the media,  the CBI applied for the matter against Dr  Manmohan to be closed (but to proceed with matters against the others ),  but the Court summarily rejected the application. The  Court did not go into a sort of voir dire to determine the issue, so it has been summarily rejected     So whether  Dr Manmohan is indeed  personally connected to the matter or not, it remains to be determined at later proceedings.  CBI  cannot do anything now with respect to the matter of Dr Manmohan as it is res judicata   .
   For the Court, there need only be prima facie evidence.at this stage..  You may find it interesting. Whither the case will go we have to wait and see.

Suganthi S: " Enough of Anwar......................."

Coin a new word for canteen!

கோவிலுக்குள் சமைக்கும் இடம்  பெரும்பாலும்  மடைப்பள்ளி என்று குறிக்கப்பெறுகிறது.  கல்லூரிகள், "பலகலைகள்", பள்ளிக்கூடங்கள் , தொழிற் கூடங்கள் முதலிய இடங்களில் உள்ள  உணவு பெறும் இடங்களுக்குப் பெயர்கள்  அமைந்திருக்கக் கூடும்;  இவற்றை அகரமுதலிகளில்  காணமுடிவதில்லை . காரண, இத்தகைய அமைப்புகள், நமக்கு இன்னும் ஒரு வகையில்  புதியவைதாம்.  பண்டு குருவானவர் வீட்டிலேயே  சாப்பாடு 
கிட்டியிருக்கும் .

வெளியில் சென்று சாப்பிடுவதற்கு முடியாத போது,  படிக்கும் இடத்திலேயே உண்பதற்கு ஓர்  இடம் இருக்கும். உள் தின்னும் இடம் . 

தின் என்பதை முதனிலை நீண்ட தொழிற்பெயராய் ஆக்கினால், "தீன் " என்றாகும்.  தீன் என்பது முன்பே இகர விகுதி பெற்று தீனி என்று ஒரு சொல் இருக்கிறது.  அதைக் கவனிக்க வேண்டாம்.     தீன் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

உள்+ தீன்  -=  உண்டீன்   ஆகும்.    உள்+ து என்பது  " உண்டு" ஆனதுபோல்.

கண்டீன்  என்பதற்கு  நேர் சொல்லாக உண்டீன்  என்பதைத் தூக்கிப் போடலாம்.

இது ஒரு சொற்புனைவு விளையாட்டுதான்.

உள்ளேயே தின்னும் இடம்,  Just coined when I was resting. Not serious. Idea is to sound close to canteen and yet be different.

You try yours.

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது....

https://mathimaran.wordpress.com/2009/07/02/article-213/ 


தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது ..............................


This is a  terrible attack......  Maybe you would like to read.  Seems to have been written some time back.

புதன், 11 மார்ச், 2015

The proliferating use of tissues and papers

கழுவுதல் விடுத்துக் காயிதம் தொடர்தல்
வழுவுத‌ல் நோய்பல வாய்த்தலும் உளதே


சாயுங்காலம்

கதிரவன் மேற்கில் சென்று  சாயுங்காலம்,  அப்படி யென்றால்  மாலை நேரம்.
இந்தச் சொற்றொடர் மிக்கச் சிறிய சுருக்கத்தை அடைந்து, "சாய்ங்காலம் "  ஆயிற்று.

வினைத்தொகையாய் வருவதாயின் " சாய் காலம்" என்று வரவேண்டும். இடையில் எழுத்துத் தோன்றுதல் இல்லை. அதாவது,  "தருபொருள்"  என்று வரும், தருப்பொருள்  என்று வருதலில்லை. பகர ஒற்று,   தோன்றாது. உறுபொருள் என்னலாம்; உறுப்பொருள் எனலாகாது. இது வினைத்தொகையின் இயல்பு.

சாய்ங்காலம் என்று "ங்"  ஒற்று தோன்றிவிட்டதால், இது  தமிழ்ச் சொல் அன்று  என்று  தமிழ்ப்புலவர்  நுழைவுக்கு மறுப்புத் தெரிவித்ததால், சமஸ்கிருதம்  அதை ஏற்றுக்கொண்டது. சாய்ங்காலே  என்றாலும்  கேட்க நன்றாகத்தானே உள்ளது.  அப்புறம் என்ன?

இந்தப் புணர்ச்சி இலக்கணத்தை வைத்துக்கொண்டு  தமிழ்  தமிழன்று என்பது
ஒரு சிந்தனைக் கோளாறு ஆகும்.

புணர்ச்சி வழு ஆனாலும் தமிழ் தமிழ்தான்  என்பதை உணர வேண்டும்.
பொழுது  சாய்ந்தது  என்பது வழக்கு.

"மாலைத் திசை தன்னில் பொழுதும் சாய்ந்ததே,
வீதி பார்த்திருந்த என் கண்ணும்  ஓய்ந்ததே !"

--- பாரதிதாசன்

சாய் என்பதை முதனிலைத் தொழிற்பெயராய்க் கொண்டு,  காலம் என்பதனோடு  கொண்டு கூட்ட  சாய்ங்காலம்  என்றாகும்  ;  ஒரு  ஙகர ஒற்று தோன்றலாம்.   சாய் என்பது ஒரு காலத்தில் மாலையைக் குறிக்க வழங்கிய ஒரு சொல்லாய் இருந்து  அது வழக்கிழந்து  அது காலம் என்பதனோடு புணர்ந்த  சாய்ங்காலம் மட்டுமே நம்மை வந்து   அடைந்திருக்கலாம்.  பல்லாயிரம் ஆண்டுகளாய் வழக்கிலிருக்கும் தமிழில்  எத்தனை சொற்கள் மறைந்தன என்பதை நாம் அறிதல் எளிதன்று.   பன்னூறு நூலகளும் அழிந்தன.  வெட்ட வெளிச்சம் என்ற தொடரில் வரும் வெட்டம்  என்பது  தனியே தமிழில் வழங்கவில்லை    ஆனால் மலையாளத்தில்  வழக்கில் உள்ளது   வெட்டம்   இவிடே  கொறவு  என்றால் இங்கே வெளிச்சம் குறைவு  என்பது.

வெள் >  வெளி  >  வெளிச்சம்
வெள்  .> வெடு  >  வெட்டம்

( சுள் >  சுள்ளி  என்பது எரிக்க உதவும் விறகு;  சுள் > சுடு > சுடுதல் ;  மற்றும் பள் படு >  படுகை;   பள் >  பள்ளம்   என்பன  ஒப்பு நோக்கி அறிக.

செந்தமிழ் நாட்டில் வழங்காமல் அதற்கடுத்த நிலப்பகுதிகளில் வழங்கினாலும் அவற்றையும நாம் வழங்கலாம் என்றார் தொல்காப்பியனார்.  செய்யுள்  ஈட்டச் சொற்களாம் இவை   தேவை எனில் வழங்குக.

    



Saving the passengers in bus

Bus driver rams flyover column to save passengers



https://sg.news.yahoo.com/bus-driver-rams-flyover-column-save-passengers-033600665.html


மேல்தளம் வெட்டுண்டு கீழ்த்தலைகள் தப்பினதால்
கால்கைகள் மேனிக் கவல்சிறு ‍‍‍‍=== மேற்காயம்!
தப்புக தம்பயணி தாமென்றே தம்முனைப்பில்
ஒப்பினார் ஓட்டினார்   காண்.

மேல்தளம்--- ‍பேருந்தின் மேற்பகுதி;  
கீழ்த்தலைகள்----: பயணிகள், அவர்கள் தலைகள்.
கவல்----  கவலைப்படத் தகும்.

செவ்வாய், 10 மார்ச், 2015

a solar powered plane welcome

Solar-powered plane SI2 lands in Ahmedabad


http://www.thehindu.com/news/national/solarpowered-plane-si2-lands-in-ahmedabad/article6979164.ece?ref=sliderNews


காற்றில் கடக்கும் க‌திராற்ற லால்வர‌
லாற்றில் இடம்கொண்ட  வானூர்தி  ---- ஏற்றவும் 
நற்படைப்பு  நாம்பெறுவோம்  நற்பயன் போர்கருதும்
விற்படைப்பு விஞ்சும் வினை




















ர்


Azrama

ஆசிரமம் என்ற சொல் தமிழிலும் இருக்கிறது. சங்கதத்திலும் இருக்கிறது.  ஏனை இந்திய மொழிகளிலும் அது வழங்கும்.  இந்தச் சொல்லின் ஒலியமைப்பு நோக்கினால், அது இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்குரியதாகத் தெரியவில்லை.

இல்லறவாழ்வினை விடுத்தோர், தாம் தங்கிய இடத்தைக் குறிப்பதே ஆசிரமம்  ஆகும். இதற்கு வேறு தொடர்புபட்ட பொருள்களும் உள.

துறவிகள், தாம் இருக்குமிடத்துடன் பற்றுக்கோடு கொண்டிருப்பர்.
ஆசு என்பது பற்றுக்கோடு ஆகும்.

ஆசு + இரு + அம் + அம் = ஆசிரமம்.

ஆசு= முன்கூறியபடி.
இரு = தங்குதல்.
அம் ‍: விகுதி.  அம்: இரண்டாம் விகுதி.

இது தமிழ் முறையைப் பின்பற்றிய விகுதி சேர்ப்பு முறை.

தமிழ் முதலிய மொழிகளில் ஒன்றுக்கு மேஎற்பட்ட விகுதிகள் வரும். இங்கு ஆய்வு செய்யப்பட்ட ஏனைச் சொற்களைக் காண்க.
இங்ஙனம் விகுதிகள் பெற்ற  சொற்கள் பல.

சங்கதத்துக்கு இரு அம் விகுதி வேண்டாம்."ஆஸ்ரம" என்பது போதும்.
ஆசு+இரு+அம்+அ = ஆசிரம>ஆஸ்ரம  இறுதி "ம்" விடுகை காண்க.




திங்கள், 9 மார்ச், 2015

What then is your paramparai?

இப்போது பரம்பரை என்ற சொல்லைச் சற்றே நுணுகி நோக்குவோம்.

இதன் அடிச்சொல் பரத்தல் என்பது.

பர (வினைச்சொல்)  >  பரத்தல்.

பரத்தலாவது: விரிவான முறையில் இடம் கொள்ளுதலாகும்.

மற்றும்:  பரவுதல், பரப்புதல் முதலிய சொற்களும் இவ்வினை அடியாகப் பிறந்த சொற்களே ஆகும்.  பரப்புதல் ‍  என்னும் சொல் பிறவினை என்பது நீங்கள் அறிந்ததே.

இந்த அடியிலிருந்த் அமைந்ததே பரம் என்பது.

பர+அம் = பரம். இதில் விகுதியில் உள்ள  அகரம் கெட்டு (மறைந்து)
பர+ம் பரம் என்றானது என்று வைத்துக்கொள்ளலாம். இன்னொரு வகையில்
பார்த்தால்  பர என்ற அடிச்சொல்லில் உள்ள அகரம் கெட்டது என்றும்
சொல்லலாம். இப்படிப் பட்ட முறையைத்தான் பாணினி என்ற வட இலக்கணியர் கையாண்டார். இதற்குக் காரணம், "பர்" என்பதைச் சொல்லமைப்பு அடியாகக் கொண்டால், பல தொடர்புடைய சொற்களுக்குப் பொருள் கூறவும் புதியன படைக்கவும் எளிமையாய் இருக்கும்.


பரம்பொருள்: எங்கும் பரவி அல்லது பரந்து விரிந்து கிடப்பதாக உணரப்படும்
பொருளாகிய கடவுள்,

பர+ அன் = பரன்.

பரன் > தயாபரன்.

( தயங்கு :  இதிலுள்ள கு என்ற வினைச்சொல்லாக விகுதியை எடுத்துவிட்டால், மீதமிருப்பது "தய". அன்பருக்கு இடர் உண்டாக்கத் தயங்குதலே " தயை".தண்டிக்காமல் நிற்பதுவே தய> தயை. மேலும் தை = இணைத்தல். இணைந்து அன்பினால் இடர்வாராது நிற்பதுவே தயை. தை> தைத்தல்= இணைத்தல். இவை எல்லாம் தொடர்புபட்ட சொற்கள் என்பதை நுழைபுலத்தால் நுணுகினால் சொல்லாமல் விளங்குமே!  இது விரிக்காது விடுவோம்)

 பர+ அல் =  பரவல்.   "பரவலாக மழை பெய்துகொண்டிருக்கிறது" பல இடங்களில் மழை .... என்று பொருள்.

பர + ஐ = பரை,

பறை என்பது வேறு.  (பர்) > ஐ= பரை. இப்போது எளிதாகிவிட்டது. Thus you

arrive at paramparai. பரம் + பரை = பரம்பரை .

Your succeeding  generations spread over time.  The basic idea is "spreading", which is what paramparai is about.  It does not matter if it is found in Sanga Ilakkiyam or not.  Only few of what has been written have been discovered by strenuous efforts of a few like UV Saminatha Iyer. If he had not made his effort, you would not have any literature of Sangam at all.

If a language has no literature at all, how would you decide whether a word belongs to that language or another? Follow that method.

பர் என்பது ஒரு பொய் அடிச்சொல்.  விளக்க வசதிக்காக, அறிதல்
எளிமைக்காக, சொல்லாக்க நேரச் சுருக்குக்காகப் படைக்கப்பட்ட சொல்.

பல பிற மொழிகளின் தாய் தமிழ்தான். நம் சொற்கள் அங்கும் வாழ்கின்றன.

நாம் அறிகின்றோம் ; அவை வாழ்கின்றன.


note:
Will edit if need is discovered.  A bug  attack occurred during this write up and some parts might have been lost. I shall try to recall and reconstruct.






KL : விவேகா நந்தா ஆசிரமம் இடிக்கத் திட்டம்

ஆசிரமத்தை இடிக்க அறங்காவலர்கள் குழு முடிவு

விவேகாநந்தா ஆசிரமம் இடிக்கத் திட்டம் செயல்பட இருக்கிறது.
"முயற்சிகளில் அக்கறையுடையோர் ஈடுபாடு.

read more

http://www.nst.com.my/node/50074


வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆசிரமத்தை இடித்துவிட்டுக்  குடியிருப்பு அடுக்குமாடிகள் கட்ட முனைப்பு

பாடல்: 

முன்னாளில்   முன்னோரால்  முயன்றுபல தொல்லையிடை  அமைத்த   இல்லம்;;
இந்நாளி ல்  கருத்தின்றிக் காசொன்றே  குறித்து நின்றார்   இடிப்பது நன் முறையுமாமோ? 

ஞாயிறு, 8 மார்ச், 2015

இளநீரால் மரணம்.

தகுந்த முறையில் ஊட்டப்பெற்றால்,  இள நீரும் உயிர்கொல்லப் பயன்படும்  என்று தெரிகிறது. இதைப் படித்து அறியுங்கள்.  வீட்டில் வேண்டாத முதியோரைக் கொல்ல ஒரு வழியாகக்  கடைப்பிடிக்கப் படுகிறதென்கிறார்கள்.



http://archive.tehelka.com/story_main47.asp?filename=Ne201110Maariyamma.asp


"Mother, shall I put you to sleep?"


நன்றிக்கே  ஒரு சான்று எதுவம்மாடி ?
நற்றமிழின்  மூதாட்டி ஔவை சொல்வார்:
என்றும்தன் அடிகளாலே   உண்ட நீரை 
தன் தலையால் தருதென்னை என்பதாக.

நன்றியினோர்  சின்னமிதன் நீரைத் தந்து
நானிலத்தின் வாழ்வுதனை நீங்கிச்செல்க‌
என்றுமக்கள் அம்மாவை அனுப்பிவைத்தல்

எண்ணுகையில் மனமுருக்கும் தலையேசுற்றும்


ஆனென்ற மாடுதரும்

ஆனென்ற மாடுதரும் அம்மென்னும் அழகதனை
ஆங்கறிதல் ஆனந்தமே
தானென்ற சொல்லதனில் தம்மென்று வருவதனைத்
தக்கபடி ஈற்றிலிட்டே
கூன்குன்று நன்மைகொள் எம்முன்னோர் உருதருசொல்
கோதிலதே ஆனந்தமே!
மீன்குன்றும்  முந்நீரில் மென்பாலோ   
குறைதலிலா
மேலிடைநன்  மக்கள்சொல்லே.

ஆன் = பசு;  அம்=அழகு; 

தான்> தாம் >தம்:  இதை ஈற்றில் இட்டால் = விகுதியாக்கினால்;

கூன் குன்று  நன்மை:  குறைவு என்பது சிறிதளவே உள்ள நன்மை.
முழுதும் குறைவானதும்  முழுதும் நிறைவானதும் ஆகிய பொருள்கள் உலகில் இல்லை. தீமை இருப்பினும் பெரிதும் நன்மையாய் இருக்கவேண்டும். விடம் (விஷம்) கூட மருந்தாகி நன்மை செய்வதுண்டு. 

உரு‍தரு சொல் ‍  உருத்தரு சொல். மெய், சந்தத்துக்காகக்  குறுக்கப் பெற்றது. மேல் அடிகளில் நான்காம்  சீர் நோக்கியது.

கடலில் மீன் வளம் குன்றிவிட்டாலும், ( நிலத்து)  மாட்டின் பால்வளம் குன்றாது   
நாட்டின் பொருளியலில் மகிழ்ச்சிப்பெருக்கம்.


சனி, 7 மார்ச், 2015

சாலை நெரிசலைச்

சாலை நெரிசலைச்  சற்றேதான் நோக்கிடினும்
நாளைப் புறப்படென் றொத்திவைத்து === வேளையிதில்
தூங்கென்னும் கண்கள் துவளுமே  என்னுடம்பே
நீங்கற்கு நேரமேநீ வா.

செவ்வாய், 3 மார்ச், 2015

அணிலாடு முன்றிலார் பாடியது kuRunthokai

காதலர் உழையர் ஆகப்  பெரிதுவந்து 
சாறுகொள் ஊரில்  புகல்வேன் ; மன்ற 
 அத்த  நண்ணிய  அங்குடிச் சீறூர் ;
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்பு இல் போலப்  புல்  என்று 
அலப்பென்  தோழி அவர் அகன்ற ஞான்றே 


அணிலாடு முன்றிலார் பாடியது.  குறுந்  41.

காதலர் உழையர் ஆகப்  பெரிதுவந்து  - காதலர் பக்கத்தில் இருக்க, மிகவும் 
மகிழ்ந்து ;
சாறுகொள் ஊரில்  புகல்வேன்  -    திருவிழாக் காலத்தில் ஊர் மகிழ்வதுபோல் நான் மகிழ்வேன் ; 
மன்ற ‍ --உறுதியாக;
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்  - பாலை வனத்தில் உள்ள அழகிய சிறிய ஊர்;
(அங்குள்ள )
மக்கள் போகிய அணிலாடு முன்றில்  --  ‍‍‍வீட்டில் உள்ளோர் போயபின்பு அங்கு வந்து அணில்கள் முற்றத்தில் ஆடும்;
புலம்பு இல் போல -- தனிமையான இல்லம் 
 போல;
புல்  என்று அலப்பென்  -- பொலிவு இழந்து வருந்துவேன்;

 இது தலைவி தோழிக்குச் சொல்லியது. காதலர் பிரிந்து சென்று விட்டார்.அவர்   நீங்கிய  போது எப்படி இருந்தது எனக்கு:  வீட்டிலுள்ளோர் குடிமாறிப் போய்விட்ட சிறு குடிலில் முற்றத்தில்  ஆளில்லாத காரணத்தால் அணில்கள் வந்து அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கின்றன;  அது தனி இல்லம் . பார்க்கப் பரிதாபமான  நிலைமை , அந்தத்  தனிக் குடிலாகிவிட்டேன். துன்பம் தாண்டவமாடு கிறது  தோழி . புல்  இறக்கம்  இழிதல் முதலியன குறிப்பது. downcast . அலப்பென்  என்பது  அலப்பேன் என்பதாம்.   ஏன்  வினா என்பாருமுளர். அலத்தல்  வருந்துதல் .    

அவர் இருந்தபோது என் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை; திரு விழாக்காலத்தில்  ஊர்`மகிழ்வதுபோல மகிழ்ந்துகொண்டல்லவா இருந்தது என் நெஞ்சகம் ?