சனி, 31 அக்டோபர், 2015

தமிழில் கிருகம் கிரகம் இல்லை

இன்று கிரகம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கிரகம் என்பது நாம் நன்கறிந்த சொல் போலவே தோன்றுகிறது. நாம் ஓட்டிச் சென்ற வண்டி எங்காவது போய் மோதி, நமக்குச் செலவு கூடிப்போனால், கெட்ட கிரகம் என்கிறோம். கால நிலை சரியில்லை என்கிறோம். கணியரும் ( சோதிடகாரரும் ) அதையே தெரிவிக்கிறார். இப்போது எகிப்தில் உயிர் நீத்த உருசிய வானூர்திப் பயணிகட்கு நமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு,
ஆய்வினைத் தொடர்வோம்.

அதிலிருந்த எல்லாப் பயணிகட்குமா கிரகம் சரியில்லை? விபத்துக்கு1த் தீவிர
வாதிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும் அதிகாரிகள் அவர்கள் கூற்றை ஏற்கவில்லை.

கிரகம் என்றால் கோள் நிற்குமிடம் என்று பொருள். வீடு என்றும் கூறலாம். கிருகலெட்சுமி என்றால் வீட்டின் நற்செல்வி என்று சொல்வர். கிரகம் அன்று, கிருஹம் என்பர். இருக்கட்டும்.

காராகிரகம் என்ற சொல் காணுங்கள். இதன் பொருள் சிறை என்பது. கார்= கருப்பு. கிருஹம் -வீடு . ( சிறை.) the terrible dark prisons என்று பொருள் விரிப்பார். இது உண்மையில் கார்+ ஆகு+ இரு + அகம் = காராகிருகம் ஆகும். இருட்டான, இருக்கும் உள்ளிடம் என்பது பொருள். ஆகவே சிறை.

இதுபோது கிரகம் , கிருகம் . கிருஹம் என்ற மாறுபாடுகளில் கவனம் கொள்ள வேண்டாம். இம்மூன்றில் எல்லா வடிவங்களையும் ஒருபுறம் வைத்துக்கொள்ளுங்கள்.

காராகிருகத்தை காரா + கிருகம் என்று பிரித்தால், கிருகம் கிடைக்கிறது. ஆகவே, கிருகம் என்றால் வீடு என்று பொருள் கூறி, கார் ஆகு இரு அகம் என்பதை முடிபோட்டு மறைத்துவிடலாம்.

எனவே பிறழ்பிரிப்பின் மூலம் ஒரு புதிய சொல் கிடைக்கிறது,

தமிழில் கிருகம் கிரகம் இல்லை; ஆதலால் அது தமிழ் அன்று என்று முடிக்க வேண்டியது,

கொண்டாட்டமே!



------------------------------------------------------------------------------------------------
1. விழுபற்று >விழுபத்து> விபத்து.

திரிபுகள் தரு வரு, அரு & ors

வரு என்னும் பகுதி வார் என்று திரியும்.  இதை வாக்கியமாக எழுதாமல் இப்படிக் காட்டலாம்:

வரு >  வார்.

இதனை,  வாராய், வாரான் (வர மாட்டான்) முதலிய வடிவங்களில் காணலாம்.)

இதேபோல் 

தரு >  தார்.  ( தாரீர் ,  தாராய் )

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர்  என்று திரியும்.


இரு >  ஈராயிரம்.   ஈருருளி .

இருத்தல் என்ற வினையும்  "உள்ளிழுத்தல் " என்ற பொருளுக்கு  மாறும்போது ஈர்த்தல் என்று   திரியும்.   இரு>  ஈர் . வெளியிலிருப்பது  உள்ளில் இருக்கச் செய்தல் நிகழ்கையில்  ஈர்த்தல்  நிகழ்கிறது.  ஈர்த்தல்  என்பது ஓர்  இடை நிகழ்வு,   இரு >  ஈர்  :   இரு. an intermediate act.   தமிழ் உள்ள சொல்லையே  திரித்து இன்னொரு சொல்லை அமைக்கும் திறனுடைய மொழி  

தேவ நேயப் பாவாணர் விளக்கம்:

அரு  >  ஆர் >   ஆரி.

:ஆரிப் படுகர் :   (  மலைபடு .  161.)    ஆரி -  அருமை.
ஆரி ஆகவம் சந்தத் தளித்தபின், ( சீவக . 139.)  ஆரி - மேன்மை .
ஆரி  (  சூடாமணி )    -   அழகு
ஆரி  borrowed by Greek,  aristos   best, noble.

from: வடமொழி வரலாறு ,  பக். 24. இளவழகனார் பதிப்பு. 1

தரு வரு, அரு திரிபுகள் 
--------------------------------------------------------------------
Notes:  editor's
1, 491.109.
2 894,8115 முத்துக்குவியல், 

வியாழன், 29 அக்டோபர், 2015

3 - 5 God functions

இறைவனின் முத் தொழில் யாவை,  அவன்றன்   ஐந்தொழில்  யாவை என்பதைப் பார்ப்போம்.

படைத்தல்  காத்தல்  அழித்தல்  என்ற முத்தொழிலுடன்,  மறைத்தல், அருளல்  என்பவற்றையும் செய்வோன் இறைவனாகிய சிவம்.  ஆகவே ஐந்தொழிலாகிறது.  மறைத்தலாவது, மாயைகளை உண்டாக்கி உண்மைத் தன்மையை  ஒளித்துவிடுதல். (தெளிவாக்காதிருத்தல்)
திரோபவித்தல், ஆன்மாவை மயக்கஞ் செய்தல். திரோதானம்  என்றும் கூறுவர்.1

சிவஞான போதம் முத்தொழிலைக் குறிப்பிடுகிறது.  அம்பலவாணன் ஐந்தொழில்புரிகுவன் எனினும்  முத்தொழில்களே அவற்றுள் முன்மை பெற்று நிற்பவை..

உலகு தோன்றுதலும் ஒடுங்குதலும் இந்த முத்தொழில்களின் பயனே என்பார்,   இப்பயன் அல்லது விளைவைக் குறிக்க மூவினைமை என்ற சொல்லாட்சியை முன்வைக்கிறார்.,

அவன், அவ:ள்  அது:    உலகிலுள்ள பொருள் மூன்று.
படைத்தல், காத்தல், அழித்தல் =    மூவினை. இங்கு வினை என்றது  தொழிலை,  எனவே முத்தொழில்.
தோன்றுதல்  ஒடுங்குதல் :  மூவினைமை.  அதாவது மூவினைகளின்  பயன். அதாவது முத்தொழில்களின் நேர்விளைவு .
திதி அல்லது நிலை. அந்தம். ஆதி.
மலம்:   (தீவினை) .காரணம்.

திதி : இது ஸ்திதி எனவாகும்.

மூவினைமை :  இதில் "மை" விகுதி என்ன குறிக்கிறது?   பயன் அல்லது விளைவு குறிக்கின்றது.  மை என்பது உண்மையில் மெய் என்பதன் திரிபு என்கிறார்  டாக்டர் மூ. வரதராசனார் . ஆகவே முத்தொழில்களின் வெளிப்பாடு,  போந்த உருவம்  அல்லது பயன் . நல்வினை தீவினை என்ற வினைகள் வேறு.

===============================================
Notes:

1. also: திரோபவம் tirōpavam
n.  (Šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out Tam.Lex.

அந்தமாதியும் ஆதியந்தமும்

அந்தமாதி என்மனார் புலவர் என்கிறது சிவஞான போதம்.  நாம்  நாடோறும்   கேள்விப்படுவது  "ஆதி  அந்தம்"  என்பதுதானே!

அந்தம் ஆதி என்று தலைமாறி  வந்தது ஏன் ?  இதற்குக்  கடவுள் என்று  பொருள் கூறினர் அறிஞர் சிலர். இதை  யாம் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.htmll

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_27.htmll


தோன்றியதே  ஒடுங்கும்  (அழியும் ) என்று  நூலாசிரியர்  முன்வரிகளில்  கூறியுள்ளபடியால் அதை விரித்து விளக்கவே  " அந்தம் ஆதி " என்கிறார் என்பது எம்  கருத்து ஆகும்.  உலகம் அழிந்து  இவ்  அழிவிலிருந்தே மீண்டும் ஆதி ( ஆகுதல்,  உருவாக்குதல் ) ஏற்படும் என்பது பொருளாம்.

முட்டையும் கோழியும் போல  அந்தம் ஆதி மாறி மாறி  வருகிறது.

இதற்கு மறுப்பு உண்டாகலாம். கூறியதே எப்படி மீண்டும் கூறலாம் என்பதுதான் அது, உறுதிப்படுத்தி உரைத்தற்  பொருட்டு இது நிகழலாம் என்று கொள்ளுதல் கூடும். 

நீங்கள்  சிந்தித்து இதை ஏற்கவோ தள்ளவோ செய்துகொள்க.



  

திகதி தேதி திதி

திகைதல் என்னும் சொல்லை இக்காலங்களில் நினைவில் யாரும் வைத்திருக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக  ஆங்கிலச் சொல்லான fix என்பதே பயன்பாடு கண்டுள்ளது.  விலை இன்னும் பிக்ஸ் ஆகவில்லை என்பர்.  அல்லது இன்னும் நன்றாகப்  படித்தவர் என்போர் டிடர்மின் determine பண்ணமுடியாமல் இருக்கிறது என்பர்.

அவசரமான இவ்வுலகில் வேற்றுமொழி கற்று வேலைபார்க்கும் நிலையில் இதைக் குறையாகச் சொல்லிக்கொண்டிருப்பதை விட, தமிழார்வத்தைப் பரப்ப  இயன்றவரை பாடுபடுதல் நல்ல பயனை உண்டுபண்ணக்கூடும்.

வண்டியை வாங்க விலை இன்னும் திகையவில்லை என்று
சொல்வதுண்டு.

இன்று நாம் காலகண்டரை ( நாட்காட்டியை) நோக்கினால், நாளை என்ன தேதி என்று திகைந்துவிடுகிறது.  கணக்கிடப்பட்டுத் திகைந்து நிற்பதால்,   அது " திகைதி" ஆகிறது. நடுவில் ஐகாரம் பெற்ற சொற்கள் குறுகி அமையும் என்பதை அறிந்த தொல்காப்பியர்,  ஐகாரக் குறுக்கத்தை எடுத்தோதினார்.  எனவே. திகைதி என்பது  திகதி என்றும், பின்னும் திகதி தேதி என்றும்  திரிந்தன.  பகுதி என்பது பாதி என்று திரியவில்லையா. அதுபோலவே.  ஆனால் தி என்ற முதலெழுத்து தே என்றும் திரிந்துள்ளது.

திகதி என்ற சொல் முதல் நீளாமல்  நடுவில் உள்ள க எழுத்தை இழந்தும் அமையும். அப்போது அது திதி என்றும் வரும். திகைந்த அல்லது, குறித்த, முன்பே அறியப்பட்ட  நாள் என்று கூறலாம். It acquired other meanings and nuances along the way with the passage of time.

திதி  என்பதற்குக்   கூறத்தகும் பொருள் வரையறவுகளில் (definitions)   முன்னரே  உறுதிபெற்ற ஒரு நாள் என்பதுமொன்றாகும்.   A date which is determined by a previous event. 

சிவஞான போதம் முதல் பாட்டில் இச்சொல் உள்ளது. அங்கு என்ன பொருளில் வந்துள்ளது என்று காணுங்கள்.

Click here to  read the previous connected post:-
tp://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

புதன், 28 அக்டோபர், 2015

searching old posts: useful?

முன்னர் எழுது  முனைகருத் தெல்லாமும்
இன்னும் இறுகப்  பிடித்தேமாய்  === பின்போய்த்  
திரக்கிக்தொட் டாலும் புதுக்குலைஈன்   வாழை  
பிறக்குமோர் பெற்றிவரு மோ

பொருள் :

பிடித்தேமாய் =  பற்றிக்கொண்டபடியாய்.
திரக்கி =  தேடி 
தொட்டாலும்  =  தோண்டினாலும் 
"தொட்டனைத் தூறும் மணற்கேணி "    என்பது  நினைவுகூர்க 
குலை ஈன்  -  குலை தள்ளும் .    வாழை : வாழை மரம் 
பெற்றி  -  தன்மை ..

disciplinary action

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சில முடிவுக் கருத்துச் சொற்கள்.

சில முடிவுக் கருத்துச் சொற்களை  கண்டு இன்புறுவோம்.

நீங்கள் இருக்கின்ற அல்லது உள்ள இடத்தைச் சுட்டும்போது " இங்கு"  என்கிறீர்கள்.  இதில்  "இ " என்பதே  சொல்.  "கு"  என்று இறுதியில் நின்றது வெறும் சொல்லீறு அல்லது விகுதி.  கு என்பது பல சொற்களில் பலவாறு வரும்.  மூழ்கு என்றும்    குறுகு  என்றும் (வினைச்சொல்  அமைதலிலும் )  அதற்கு  இதற்கு என்றும் (வேற்றுமைப் பொருளிலும் )  வரும்.  கு  என்பது  மலாய் மொழிக்குள் ஏகி  "க"  என்று உருமாறி  ke - Kuala Lumpur,  ke- Singapura என்றும் வரும் .  அது   "கி "  என்று மாறி  ராமனிகி  ஜெய்  என்பதிலும் வரும்.

மீண்டும் " இ" என்ற முன்னிலைச் சுட்டுக்கு வருவோம். இதுவும் பல மொழிகளில் தொண்டு செய்கிறது.  ஹியர் என்ற ஆங்கிலச் சொல்லில்  ஹ்+இ+அர்  என்பதில்  இ இருக்கிறது.  இ என்பதே  சுட்டு.  மற்றபடி  ஹ் என்பதும்  அர் என்பனவும்  வளரொலிகள்.ஒருவகைச் சொற்சாயங்கள். மலாய் மொழியிலும்  ஸினி என்பதில்  ஸியில்  (ஸ்+இ)  இ  என்னும் சுட்டு உள்ளது; சீன மொழியிலும்  சித்தாவ் என்ற சொல்லில் ச்+ இ என்று  இ என்னும் சுட்டு உள்ளது.  இட் எஸ்ட் என்ற இலத்தீன் தொடரில்  இட் என்பதில் இகரச் சுட்டு உள்ளது. உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

சில மொழிகளில் அது என்று படர்க்கை  வரவேண்டிய இடத்தில்  இது  என்று முன்னிலை வந்தால் அது அம்மொழி மரபு.  இத்து என்று மலாயில் வந்தால்  இது அதுவாகிவந்த இடப்பிறழ்ச்சியாகும்.

இங்கு என்பது முடிந்துவிட்டால் அங்குஎன்பது தொடங்கிவிடுகிறது. அதாவது இங்கு -வின்  இறுதி.   இதன்காரணமாக,   அ, அன், அங்  என்பன இறுதிப் பொருளை அடைகின்றன 

எடுத்துக்காட்டு:

அன்று  (  இன்று என்பதன் முடிவு).
அங்கு (  இங்கு என்பதன் முடிவு).

ஆகவே;   அன் என்றால் முடிவு,இறுதி என்று பொருள்.

அல் என்பதிலும் இதே கருத்து மிளிர்கிறது.

இல் ( இங்கு,ஆகவே உங்கள் வீடு);  அது முடிந்த இடம்:  அல்லது நிலைதான் அல். அல்லாதது.

அ> அல்> அன்>,அங்

அன் >  அன்று.  (இன்று முடிந்தது)
அன்று >  அன்றுதல் :   முடிதல்.  ( அன்+ து)
அன் து >   அந்து:  துணி முதலிய கடித்து இறுதியாக்கும் ஒரு பூச்சி/
அன் து >  அந்து >  அந்தம்: முடிவு.

து என்பது ஒரு சொல்லீறு.   முன் து > முந்து.  பின் து > பிந்து என்பன காண்க .  பல வுள.

cf  the English word "end"  with the root  அன் .
Malayalam:  இன்னல  (இன்னு  அல்ல )  ஆகவே நேற்று,  Notice word  அல்  > அல அல 


will edit

ஆதியந்தம்

இறை என்ற அடிச்சொல், இறைவன்,இறைவி, இறையன், இறையனார் என்ற வடிவங்களைப்  பிறப்பித்துள்ளது. இவை தாயும் பிள்ளைகளும் போலவே உள்ளன.

இறை என்பதற்கும் ஓர் அடிச்சொல் இருக்கிறது.  அது இறு என்பது. இதன்பொருள்  பொருள் என்ன?  இது பல்பொருளொரு சொல், பல பொருளுள்ளது. பல சொற்களையும் பிறப்பித்துள்ளது.

அவற்றுள் ஒன்றிரண்டையே இங்கு பேசுவோம்.

இறுதல் = முடிதல். இதிலிருந்து முடிதல் என்ற பொருள் உள்ள இறுதி என்ற சொல்லும் பிறக்கிறது.  இறுதிச்சுற்று,  இறுதி நபி,  இறுதியாய்விடுதல் என்று  முன் நீங்கள்  சொல்லாட்சியை எதிர்கொண்டிருக்கலாம்.

இறுத்தல்-  வரி முதலியன செலுத்துதல்.  இதிலிருந்து இறை = வரி என்ற பொருள்தரு வடிவமும் கிடைக்கின்றது.

இறு, இறை, இறைவன் :    இங்கு கண்ட பொருட்சாயல்களால்,  இறைவன் என்ற சொல்லையும் அறிஞர் பல்வேறு  கோணங்களிலிருந்து விளக்கினாலும்,  அவ்விளக்கங்கள் பிழைபடமாட்டா.

இறைவன்:  கடவுள் என்றும்  மன்னன் என்றும்  இடம்  நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும்.

கடவுள் என்ற பொருளில்  எல்லாவற்றுக்கும் இறுதி அவன் , ஆகவே இறைவன் என்று கொள்ள, சொல்லில் வசதி உள்ளது.

அந்தம் என்பது இறுதி குறிக்கிறது.

அவன் ஒருவனே இறுதியில் இருப்பவன்; இறுதியாகவும் இருப்பவன். இறுதியை  உண்டாக்குகிறவன்.  இங்ஙனம்  எண்ணங்களை விரித்துப் பொருளையும் விரிக்கலாம்.

ஆதியிலும் அவனே இருந்தான். அவன்முன் யாருமில்லை. எதுவுமில்லை. உலகம் ஆதல் பொழுதில் இருந்தமையினால் அவன் ஆதி ஆகிறான்.  உலகம் தொடங்கியதால், அது தொடங்கிய பொழுது அல்லது காலம்,   ஆதி ஆகிறது. பொழுது=  சிறியது. காலம்- நீண்டது. இவை சொற்பொருள்கள்.

எனவே, மெய்யறிஞர்கட்கு   (religious  philosophers) ,  ஆதியுமவன்; அந்தமும் அவன்.

சிவஞான ;போதம் என்ற நூல், அவனை ஆதியந்தம் என்றே குறிக்கிறது.

ஆதி, அந்தம் என்பன காலப்பெயர்கள்.   இவற்றை ஒன்றாகவோ சேர்த்தோ கடவுள் என்ற பொருளில் வழங்கினால், இலக்கணப்படி அது கால ஆகு பெயர் ஆகிறது.

சிவஞான போதப் பாடலை இங்கு காணலாம்:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

திங்கள், 26 அக்டோபர், 2015

அவன் அவள் அது

செகம் என்ற சொல்லை ஆய்ந்த போது http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
நாம் உலகம் அழிதலையும் மீண்டும் ஆவதையும் உடையது என்ற கருத்தினடிப்படையில்  அச்சொல்  உருவானது என்று கண்டோம். ஜகம் என்ற ஒலியொப்புமை உடைய சொல்லையும் உடன் கண்டு அதன் வேறு அடிச்சொல்லையும் கண்டுகொண்டோம்.

உலகம் அழிதலும் ஆவதும் உடையதென்பதற்குச் சிவஞான போதத்திலிருந்து  ஓர்  ஆதாரத்தை இப்போது பார்ப்போம்;

அவன் அவள் அது எனும் அவைமூ வினைமையின்
தோன்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதா(கு)ம்;
அந்தம் ஆதி என்மனார் புலவர்.       (1)

இதன் பொருள்:

அவன் அவள் =  ஆடவர் பெண்டிர் என்பாரும்,
அது =  ஏனை உயிர் உடையனவும் இல்லாதனவும் ஆகிய பொருள்களும்,
மூ வினைமையின் =  படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இறைவனின் செய்கைகளின் பயனாக;
தோன்றிய திதியே =  உருவான  அந்த நிலையே;
ஒடுங்கி -   பின் அழிவு அடைந்து,
மலத்து  =  -  கரும வினையின் காரணமாக;
உளது =  மீண்டும் தோன்றுவது;
ஆகும்= இதுவே  நடக்கிறது;
அந்தம் ஆதி =  முடிவிலும் முதலிலும் ( உள்ளவன்  இறைவன்,  அவனால்தான்.)

இனி,  வினைமை, திதி, ஒடுங்குதல் ஆகியவற்றை அடுத்த இடுகையில் கவனிப்போம்.

சனி, 24 அக்டோபர், 2015

ஜகம் etc & உலகம்

பகவொட்டுச் சொற்கள்.

ஒரு சொல்லின் ஒரு பகுதியையும் இன்னொரு சொல்லின் ஒரு பகுதியையும் இணைத்து ஒரு புதிய சொல்லை உருவாக்கு முறை  பல மொழிகளில் காணப்படுகிறது. இத்தகைய  சொற்களைக் காணும்போது அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில்  இதற்கு  "portmanteau"  என்பர்.

ஆங்கிலத்தில்  brunch  (breakfast + lunch     )  என்ற சொல்லை ஓர்    உதாரணமாகச் சொல்லலாம்.
sheeple   -   என்பதும் அன்னது.2 (people who are sheep-like followers)   (மந்தை  ஆடுகள் மக்கள்  என்பது)

இன்னொன்று:    (mo) tor +  ho (tel )   =  motel. 

உலகம்:

இச்சொல்லிலிருந்து புனையப்பெற்றவை:-

இ = இந்த.
கம் =   உலகம்.
இ+கம் =  இகம்  -   இந்த உலகம்.

எடுத்துகாட்டுச்  சொற்றொடர்  :  இக பரம்.  

செகுத்தல் = அழித்தல்..
ஒவ்வோர் ஊழியிலும் உலகம் அழிந்து புத்துலகம் மலர்வதாகச் சொல்லப்படும். ஆகவே  இது குறிக்கும் சொல் தேவையாயிற்று. 

இங்குள்ள விளக்கத்தையும்  நோக்குக:
http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html 


 செகு  = அழி(த் )தல்.
கம்  =உலகம்.
செகு+ கம் =  செகம்.  இதில் புணர்ச்சியில் குகரம் மறைந்தது.: 
செகம் =   அழித்து உருவாகும் இவ்வுலகம்.

(மக + கள்  =மக்கள்  என்பதில்  ஒரு க  மறைந்தது போல   செகு  +  கம் =  செகம்  என்பதில்  ஒரு கு  மறைந்தது,  )

மா -  பெரிது.
கம் -  (உல)கம்.
மாகம் :  விரிந்த விண்வெளி 1 .


mAkam. upper space; . sky, air, atmosphere;  svarga;  cloud

சமத்கிருதப் புனைவு:

ஜ -  பிறந்தது,
கம் -  உலகம்.
ஜகம் :  உலகம்.
--------------------------------------------------------------------------
பிற்குறிப்பு:

1 மாகம் என்பதும் ஒரு பகவொட்டு ஆகலாம்.  மா - பெரியது;  கம் - உலகம் என்பதன் இறுதிச் பகுதிச்சொல்.  ஆக மாகம் ஆகிறது.  பெரிதான உலகம். இன்னும் பல பொருள்.  யாவும் பெரியவை.  மக + அம் =  மாகம்,  முதனிலை நீண்ட,   விகுதி பெற்ற சொல் எனினுமாம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

இக்கட்டும் இடுக்கணும்

இக்கட்டு  என்ற சொல்லினமைப்பைக் கவனிப்போம்.

இந்தச் சொல்லின் பொருள் :   இடர், இடையூறு  இடுக்கண்,  என்பன .

இ + கட்டு = இக்கட்டு எனவரும் சுட்டுத் தொடக்கத்துத் தொடர் இதுவன்று.

இக்கட்டு  என்று இடையூறு குறிக்கும் சொல்லில் வரும்  "கட்டு "  வேறு.   கட்டுதல் எனும் சொல்லின் ஏவல் வினையாய் வரும் " கட்டு "   என்பது 
 வேறாகும்.  "மூட்டையைக்  கட்டு",   "கடையைக் கட்டு"  "சேலையைக்  கட்டு" என்று ஏவலாய் வரும்.

நாம் எடுத்துக்கொண்ட இக்கட்டு,  இடுக்கண் + து  என்று  பிரியும்.

முதலில் "கண்+து " என்பதை எடுத்துக் கொள்வோம்.

"சுவை ஒளி ஊறோசை  நாற்றம் என்றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு" 

என்ற குறள் பாருங்கள்.

இதில்  (கண் + து)  + ஏ  =  கட்டே  என்று வருதல் நீங்கள்  அறிந்தது  
இங்கு  கட்டு + ஏ  =  கட்டே..    ஏகாரம் :  தேற்றேகாரம் . A component showing emphasis.

ஆகவே  இடுக்கண்+ து என்பது  இடுக்கட்டு  ஆகிறது.

நமது பயன்பாட்டுக்கு  இடுக்கண் என்பதிலிருந்து இன்னொரு சொல் கிடைக்கிறது.

ஆனால் இப்போது நம்மிடம் இருக்கும் சொல் இக்கட்டு.   இடுக்கட்டு அன்று.

இது:

இடுக்கட்டு > இக்கட்டு   என்று இடைக்குறைந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது,

இக்கட்டு என்பதை வாக்கியமாக விரித்தால் :

இக்கட்டு <  இடுக்கட்டு <  இடுக்கண் து  <  இடுக்கண் அது  என்று விரித்து மகிழ்க .

இதுபோல் திரிந்த சொற்களில் ஒன்றிரண்டு கண்டு மகிழ்வோம்.

இடுக்கு+ இடைஞ்சல் =  இக்கிடைஞ்சல்.  -   இந்தத்  திரிபு நோக்கி இவ்வண்ண்ணம் திரிதல் கண்டுகொள்க. 


முக்கம் என்ற தெருமுனை குறிக்கும் சொல்  அகரவரிசைகளில் இடம்பெற வில்லை  என்று கருதவேண்டியுள்ளது.  இன்றுள்ள எல்லாவற்றிலும் தேடிப்பார்க்கவில்லை. நாட்டுப்புற மொழியில் உள்ளது.

முடுக்கு >முடுக்கம் >  முக்கம் 

என்ற திரிபாகவிருக்கலாம் :   ஆய்தற்குரியது. 








தந்திரம் - மற்றொரு முடிபு

இனித் தந்திரம் என்ற சொல்லுக்கு மற்றொரு முடிபும் கூறுவோம்.

ஓர் இக்கட்டான  நிலையில் அதைத் தவிர்க்கும் வழியைத் தந்து  தன் இருப்பு எப்படியும் குலைந்துவிடாதிருத்தல்  ஒரு தந்திரம் ஆகும்.   தன் நிலைபோல்  பிறர் நிலை காத்தலும்  அதுவே.

ஆகவே  தந்து + இரு + அம்  =  தந்திரம்  ஆகிறது.

இனி  இரு  என்ற சொல்லினை இறு  என்பதன் திரிபாய்க் கொள்ளினும் இழுக்காது.

இறுதல்  எனின்  முடிதல் இறுத்தல் எனின் முடித்தல்.

தந்திறம்  தந்திரம் ஆயிற்று என்று   அறிஞர் \கூறுவதால்  தந்திறம்  தந்து முடித்தல் என்று கொள்ளுதலும்  ஆகும் என்று அறிக .

ஒரு காரியத்தில் ஏற்படும் தடைக்கு அல்லது இடையூற்றுக்கு தீர்வு தந்து முடித்தலாம்..


செவ்வாய், 20 அக்டோபர், 2015

தந்திரம்.

தந்திரம்.

இப்போது தந்திரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

றகரத்துக்கு ரகரம் பரிமாற்றமாக வரும் சொற்கள் உள.  தமிழின் வரலாற்றில் ரகரமே முன் தோன்றியதென்று தெரிகிறது. பின்னரே றகரம் தோன்றியது.   

இரு ரகரங்களை இனைத்து  றகரம் அமைக்கப்பட்டது. எழுத்துருக்களை ஆய்வு  செய்தாலே இது புலப்படும்.

ர >  ரர > ற.

மலையாளத்தில் ற என்பது இரு ரகரமாய் எழுதப்படும்,

 எனவே,  ர <> ற.

திறம் >  திரம்.

தன் + திறம் >  தந்திரம்.

தன் சொந்தத் திறத்தைப் பயன்படுத்துவதே  தந்திரம் ஆகும்.

சொல்லமைப்பில் ஒரே சொல்லாக உருவாக்குகையில் தன்றிரம் எனறு அமையாது.  தனித்தனி முழுச்சொற்கள் நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணர்கையில் தன்றிறம் என்று வரும்.

தம்+ திரம் = தந்திரம் எனினுமாம் .  தந்திரம் என்ற சொல்லின்  நுண்பொருள்  இப்போது  சற்று  வேறுபட்டுள்ளது..    இதிலிருந்து தோன்றிய  அயன்மொழிக் கருத்துகளின்  காரணமாக   பொருள் விரிவுற்றுள்ளது   நாம் இங்கு கருதியது  சொல்லமைப்புப் பொருளையே. தன்  தம் என்பவற்றின்  எண்ணிக்கைக் கருத்துகள்  (ஒருமை பன்மை)   தந்திரம் என்பதில்  அறுந்தொழிந்தன. 


This has been also said by other scholars before.

மரத்தடி two meanings

சில சொற்களை இரு வகையாகவோ  அதற்கும் மேலாகவோ பிரிக்கலாம். இருவேறு பொருள்கொள்ள இத்தகைய சொற்கள் இடம்தரும்.இத்தகு சொற்கள்ளையும் தொடர்களையும் தேர்ந்தெடுத்து  அவற்றைச்  செய்யுட்களில் அமைத்துக் கவிபாடிக் காலம் கழித்தோரும் உளர்.

இப்போது அத்தகைய ஒரு சொல்லைக் கவனிப்போம்.

சொல்:   மரத்தடி.

 மரக்கிளைகளுக்குக் கீழுள்ள  தரைப் பகுதியைக் குறிப்பது. இது:

மரம் + அத்து + அடி   =   மரத்தடி.

இதில் வரும் "அத்து"  சாரியை.   முன் உள்ள சொல்லையும் பின் வந்த சொல்லையும்  சார்ந்தும்  அவற்றுடன் இயைந்தும் வருதலால்,  "சார்+இயை " = சாரியை எனப்பட்டது,  

சாரியைக்குத் தனிப் பொருளேதும் கூறப்படாது.   எனினும்  "து"  என்பது  உரியது  எனக் கொள்ளுதல் கூடும்.

இதை விரிக்காமல் விடுவோம்.

இனி,

மரம் +  தடி =   மரத்தடி  \\\

அம்  குறைந்து அல்லது மகர ஒற்றுக் குறைந்து,   தகர ஒற்றுத் தோன்றியது. 

கொஞ்சம் நீண்ட  மரக்கட்டை  என்று பொருள்.   சிறிது தடித்ததாயும் இருக்கவேண்டும்.   மெல்லியது  "குச்சி " என்பர்.



Indonesian fires cannot be extinguished

மூச்சுக்கு நற்காற்று கிட்டுமோ இப்போதே
ஆச்சென்ற எண்ணமும் ஆமோவீண்  ----  சீச்சி
இருமல் சளியென்றே எல்லாம்தாக் கிற்றே
வருமோதான் தென்றல் இனி



Indonesia fires can't be put out, Malaysian minister warns


செய்தி இங்கே...................................

https://sg.news.yahoo.com/indonesia-fires-cant-put-malaysian-minister-warns-083942958.html


திங்கள், 19 அக்டோபர், 2015

தாகம்

கம்  என்பதை ஒரு பின்னொட்டாகக் கொண்டு  தாகம் என்ற சொல்லினை ஆய்வு செய்யலாம்.

எடுத்துக்கொண்ட சொல்: தாகம்.

தாகம் என்பதில்  தா மற்றும் கம்  உள்ளன

உடலுக்கு நீர் தேவைப்படும் அறிகுறியாகிய  தாகத்தின் தா என்பதில்  இதற்கேற்ற பொருளில்லை. தா:  நீர்விடாயைக் குறிக்கவில்லை.

ஏன் ?

தண்ணீர் தவிக்கிறது என்கிறோம். தவித்தல் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கொண்ட சொல்லின் திரிபுதான் தாகம்;

தவி + அம் = தாவம்.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தாவம் >  தாபம்,  இது வகர பகரப் பரிமாற்றத் திரிபு.

என் தாபம் நீ அறியாயோ ? என்கிறது ஒரு பாடல்.

மனத் தாபம்  (  மனஸ்தாபம் ) என்பது வழக்கு

தாபம் >  தாகம்.  ப பின் க வாகத் திரிகிறது/

ஆகவே கம்  என்பது இச்சொல்லில் ஒரு பின்னொட்டு அன்று.

Read also:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html




கு என்னும் இடைச்சொல்.

தமிழ் மொழியில் வழங்கும் பல சொற்களில்   பகுதி அல்லது முதல்நிலைக்கும்  விகுதிக்கும் நடுவில்  ஓர் இடை நிலை தோன்றுகிறது.  அதுதான் கு என்னும் இடைச்சொல்.

தேய் :>  தே .

தே + கு +  அம்  =  தேகம்.

பானையைப்  போட்டுத் தே தே என்று தேச்சு வெள்ளையாக்கிவிட்டாள். என்ற நாட்டுப்புறப் பேச்சில் தேய் என்ற சொல் தன்  யகர ஒற்றை  இழந்துவிடுதலைக் காணலாம்.   தேய் என்பது தேயி எனப்படுதலும் உளது.

வானத்தில் மேலே ஊர்ந்து செல்வது மேகம்.  இந்தச் சொல்லின் ஆக்கத்தில்  விளைந்த மற்றங்களைக் கவனியுங்கள்:

மேல் >  மே.   லகர ஒற்று மறைகிறது.

அடுத்து  கு என்னும்  ஓர் இடை நிலை  தோன்றும்.  பின் விகுதி வரும்.

மே  ​ +  கு + அம் =   மேகம்.

கு என்ற இடை நிலையை   இடை நிலையாய்  எண்ணாமல்  கு+ அம்  இரண்டையும் இணைத்து  கம் என்பதை ஒரு பின்னொட்டு என்றும் சொல்லலாம்.  அல்லது இரு விகுதிகள் புணர்க்கப்பெற்றன என்றும் சொல்லலாம்.   எல்லாம் ஒன்றுதான்.

சனி, 17 அக்டோபர், 2015

மகிழாசுர > மகிஷாசுர. a brief further explanation

மகிழாசுரமருத்தினி என்ற தமிழ்த் தொடரைச் சங்கதத்துக்குக் கொண்டு செல்வோம். சிலசொற்களை இணைத்து அமைந்த  சொற்சொடர்.  அதன் தமிழ்ப் பொருளைக் கைவிடுவோம். அப்போது கீழ்வரும் விளைவுகள்  தோன்றும்.

1. மகிழ் ஆசு உற >   மகிழாசுர > மகிஷாசுர.

இதைப் பிரித்தால்:

2. மகிஷாசுர > மகிஷா +  அசுர.

மகிஷ  என்பதன் சங்கதப் பொருள்:   எருமை என்பது.

அசுர  --  தீயோர்  என்று வைத்துக்கொள்வோம்.

மனித உடலும்  எருமை  முகரையும் உள்ள ஒரு தீயோன் வருகிறான்,

புலவன் சொல்லப்போனது அரச குடும்ப நிகழ்வுகளில்  இறையருளால் தீயோர் ஒழிந்தனர் என்பது.

அதில் கொண்டுபோய், இந்தச் சொல் ஏற்பில் விளைந்த எருமை அசுரனை  இணையுங்கள்..

மகிஷா,  அவள்  கணவன் முதலானோர், எருமை முகத்தவர்கள் ஆகிறார்கள்.

அவர்கள்  சண்டித்தனத்துக்கு இந்த வருணனை  பொருத்தமாகிவிட்டதால், கதை அப்படியே  நிலை நாட்டப்பெறுகிறது.

மகிழ்ச்சியும்  பற்றுக்கோடும் காண ஓர் மருந்துஆகும்   இறைவி என்ற பொருளில்  எந்தக் கதையும் புனைய  முடியாமையால்  அது ஒதுக்கித் தள்ளப்படுகிறது  அல்லது தமிழறிவு இன்மையால்,  அதைப் பயன்படுத்த வில்லை,  

சொற்கள் புனைகிறவர்கள்  தாங்கள் எப்படிப்  புனைந்தோம் என்பதை எழுதிவைக்கவில்லை.  எழுதி வைத்திருந்தாலும் அதைப் போற்றி வைப்பவர்கள்  யார்? ஆகவே தொன்ம (புராண) காலத்துச் சொற்கள்  அவற்றின் அமைப்பு  வரலாறு அற்றவையாக உள்ளன.  

இந்தக் கதையைச் சுருக்கமாக அறிந்துகொள்ள :

http://www.hindudevotionalblog.com/2012/03/story-of-mahishasura-mardini.html



Story of Mahishasura Mardini
Mahishasura Mardini is the incarnation of Goddess Durga who had taken birth to kill the asura king Mahisasura. Mahishasura was the king who ruled the kingdom of Mahisha or Mahishaka. According to Hindu Puranas, Mahisha was the son of an asura King Rambha who had fallen in love with a beautiful female buffalo named Shyamala. Shyamala was a princess who became a water buffalo due to the curse. Rambha due to his magical powers took the form of a male buffalo and by their union Mahisha was born with the head of a buffalo and human body. Mahishasura has the magical power to take the form of buffalo and human according to his wish. In Sanskrit language, Mahisha means Buffalo.

அங்கு சென்று வாசிக்கவும்:

முன் இடுகைகள் காண்க : 

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_64.html

http://sivamaalaa.blogspot.sg/2015/10/the-truth-about-our-puranas.html 

.



வெள்ளி, 16 அக்டோபர், 2015

The truth about our puranas.

பழங்காலத்தில் அரச குடும்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை  அக்குடும்பத்தினரின் இயற்பெயர்களுடன் உள்ளபடி எழுதினால், அரசியலார் வந்து உதைத்து அடித்து  நையப்புடைத்துவிடுவார்கள். இதற்கு என்ன வழி என்றால் அதை மறைத்துக் கொஞ்சம் அறிந்தவர்கள் முழுமையாக  அறிந்துகொள்ளும் விதமாக  எழுதவேண்டும். இப்படி எழுந்தவைதான் பல புராணங்கள் என்ற தொன்மங்கள்.  அவை புனைவுகள்  என்கையில்,  அவை முழுவதும்  புனைவு என்று நினைத்துவிடலாகாது. 

உண்மை நிகழ்வுகளை மறைத்து எழுதப்பட்டவை.  ஆகவே அவை மறை என்பது பொருத்தனமான பெயர்.

ஓர் அரசன் சில வேளைகளில் மனிதனாய்ச் சிந்தித்து முடிவு  செய்கிறான்.  அப்போது  தொன்மப் புலவர் அவன் மனித உரு எடுத்ததாகக் கதையில் சொல்வார் .  சில சமயம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் விருப்பபடி முடிவுகளை  அரசன் மேற்கொள்வான். மந்திரி தந்திரியின்  பேச்செல்லாம் எடுபடாது.
அப்போது அவன் எருமைபோல் போகிறான்.  புலவர் அவன் எருமை உருவெடுத்ததாக எழுதுவார்.   அவர் காலத்தில் நீங்கள் இருந்து இதை நடித்துக் காட்டினால் உங்களுக்குக் கதை உடனே  விளங்கும். இப்போது . ஆய்வுக் கண்ணோட்டத்தில் இவ்ற்றைக் காணவேண்டும்.

வேண்டிய நேரத்தில் வேண்டிய உருவை அடைவான் என்றால் இதுதான் பொருள்.

அரசனின் படைஞர்கள் வந்தால் , நாங்கள் கடவுளை எழுதுகிறோம் என்று எளிதில் சொல்லித் தப்பிவிடலாம்.

மகிழாசுர மருத்தினி கதையைப் படித்துப் பாருங்கள்.

இதில் வரும் மகிஷி  (மகிழி)  மிக்க மகிழ்ச்சியுடன் காலங்கழித்தவளாக இருந்தாள் என்பதே உண்மை.

பிரம்மா, விஷ்ணு  சிவன் எல்லாம் இறுதியில் வருவார்கள்.    இறுதியில் மூவேந்தரும்  அல்லது அவர்களின்  பதிலாளர்களும் வந்திருப்பார்கள். அவ்வளவுதான்.  பல புராணங்கள் உங்களை ஏமாற்ற எழுதப்பட்டவை அல்ல. சில நிகழ்வுகளை மனத்தில் வைத்துப் புனையப்பட்டவை.  காட்சி இடத்தை 
வடக்கே மாற்றிவிட்டால் ...... அரசனிடமிருந்து முழுமையாகத் தப்பித்துவிடலாம். ஒரு நல்ல புனைகதையும் கிட்டும்.  காலம் செல்லச் செல்லப்  புதிய புனைவுகளும் புகுந்து  சுவையும் மிகுந்து  நீங்களும்  மகிழ்ந்து...................... ........ 

வியாழன், 15 அக்டோபர், 2015

. மகிஷாசுரமர்த்தினி.

மகிழ் =   மகிழ்ச்சி.
ஆசு = பற்றுக்கோடு.
உற = மிகும்படியாக.
மருந்து > மருத்து >  மருத்தினி.
>.
இவையெல்லாம் சேர்க்க:

மகிழாசுறமருத்தினி. > மகிழாசுரமருத்தினி>  மகிஷாசுரமர்த்தினி.

இரு மாற்றங்கள்:கவனம்:

ற > ர.
ழ > ஷ.

வாழ்வில் மகிழ்வு உண்டாக மருந்தாகும் தேவி.  இறைவி.

மருந்து > மருத்து:  வலித்தல்.  This occurs in many words. No need for citation when it is too common.

மகிஷாசுரன்  கதை -  மகிழ்வுறுத்தும் புனைவு.

சே என்னும் அடிச்சொல்

பல் வேறு சொற்கள் திரிந்து சே என்ற வடிவை அடைகின்றன.  இவற்றில் சில  இங்கு பேசப்படும்.

சிவ (சிவப்பு) என்ற அடிச்சொல்லும்  சே என்று திரியும்.

அவன் வேலிற் சேந்து (கலித். 57) 

சேத்தல்  -  சிவப்பாதல்.
சேந்து :  வினை எச்சம்.
சேந்த : பெயரெச்சம் .
சேக்கொள் =  சிவந்த.
சேவடி -  சிவந்த  அடிகள்.  (திருவடிகள் )
சேது  > சிவந்தது ;  செம்மையானது;  சிவன்.


(வேறு பொருள்களும் உள.  அவை நிற்க..

சேர்  என்ற வினைச்சொல்லும்  சே என்று திரியும்.

சேக்கிழார். ( யாவருடனும் சேர்ந்து நட்புடன் பழகும் கிழார்.)
சிவக்கிழார் என்றும் பொருள் கூறக்கூடும்.
செம்மை நேர்மைப்பொருளும் ஆகும்.

சே > சேமி  > சேமிப்பு.     (சேர் > சேர்மி > சேமித்தல் )
சேப்பு :  பிறரைச் சேர்த்துக்கொள்ளுதல்  , சேர்த்துச் செயல்படல் 

செதுக்குதல். 
-------------------

செது >  செதுக்கு.
செது >  செத்து .  (புல்லைச்  செத்தி  எடு  என்பது வழக்கு.)
செது >  சேது > சேதம். (செதுக்குண்ட  நிலை )( meaning damage.) 
செது  + அம்  = சேதம் ( முதனிலை (தலை)  நீண்ட சொல்) எனினுமாம் 

சேது என்பது சே என்று திரியவில்லை.

செய் > சே .

இது வேறு.

செய் >  சே >  சேவை.

செய்  >  சேதி   (செய்தி > சேதி)








  

ஆச்சி மனோரமா மறைவு

ஆச்சி மனோரமா ஆயிரத்தைந்  நூறிகந்து
பேச்சுநடிப் போடிசையாற் செங்கோலே -- ஓச்சினவர்;
எல்லோரும் போற்றும் இவர்மறைவு மக்கட்குச்
சொல்லொணாத் துன்பக் கடல்.

புதன், 14 அக்டோபர், 2015

மாமழை பெய்ய முழங்கி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தலைவி கூற்றாக வருகின்ற ஓர்  அகத்திணைப் பாடலை இப்போது பாடி இன்புறுவோம். இதைப் பாடிய புலவர் கச்சிப்போட்டுக் காஞ்சிக் கொற்றனார் என்னும் சங்கப் புலவர். இவர் பாடியனவாக குறுந்தொகையினுள் இரு பாடல்கள் உள்ளன.  அவற்றுள் ஒன்றுதானிது:

அவரே -----

கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடு இறந்தோரே;
யானே------

தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந்திசினே;
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னும் தொழிலென் இன்னுயிர் குறி த்தே.

இதன் பொருளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கேடில் விழுப்பொருள் =  மிகச் சிறந்த  உயர் பொருள்.
அதாவது இனி  இருவரும் வாழ்தற்கு வேண்டிய பெரு நிதி.

தருமார் = கொண்டு தருவதற்கு;

வாடா வள்ளியங் காடு இறந்தோரே; -   வாடாத வள்ளிக்கொடிகளையுடைய  அழகிய காட்டைக்கடந்து சென்றார்;

தோடு ஆர் =   தொடுத்ததுபோல் வரிசையாக அணியப்பட்ட.
தொடுத்தல்:  தொடு(வினைச்சொல்) > தோடு. (முதனிலை திரிந்த தொழிற் பெயர்)

எல்வளை =  ஒளிவீசும் வளையல்கள்.

நெகிழ ஏங்கி =  கழலும் படியாகக்  கவலை மிகவடைந்து.

பாடு அமை =  கிடப்பதற்கு அமைந்த;

சேக்கை:=  படுக்கை.
படர்கூர்ந்திசின் -=   நடமாடும்   எழுச்சியும் வலிவும் இன்றி  ஒரே கிடப்பாய்ப் கிடந்து துன்புறுகின்றேன். (அவர் நினைவினால்.)

அன்னள்  அளியள்  என்னாது =  ஐயோபாவம் என்றுகூடக் கருதாமல்;

இன்னும் =  இனியும்;

மாமழை =   வலியவாகிய  இந்தக்  கருமுகில்கள்

என் இன்னுயிர்  குறித்தே  -=   என்  இனிய   உயீரை வாங்கும்வண்ணமாக;

(இறந்து விடாமல் அவர் 

பொருட்டு இன்னும் வாழ விரும்புவதால்  இன்னுயிர் என்கிறாள் )

பெய்ய முழங்கி -- மழையைக் கொட்ட  இடித்துப்  
பேரொலி செய்து

மின்னும்தோழி =   தோழியே மின்னுகின்றது

இடி மின்னற் காலத்தில்  பிரிவுத் துன்பம் மிகுந்துவிடும்.   அவருக்கு ஏதும் துன்பம் நேராமல் இருக்கவேண்டுமே

முகிலு ம் இரங்கிற்றிலது  என்றபடி.

பாடிய  புலவர்:

அழகிய இப்பாடலை  வடித்த  நல்லிசைப் புலவர்தம்  பெயருடன் இணைந்துள்ள அடைமொழிகள்  இவர் வாழ்ந்த ஊர்ப்பெயர்களைக் காட்டுவனவாய்க் கொள்ளலாம்  கொற்றம் என்பது அரசாட்சியைக் குறிப்பதும்  ஆகும்  ஆதலால்  இவர் ஓர் அரசியல்  அதிகாரியாய் இருந்திருக்க்கூடும்.
கொற்றம் > கொற்றன்.
எனினும்  இதனை உறுதிப்படுத்த இயலவில்லை.  கொற்றன் என்பது கொத்தன்  அதாவது கட்டிடக் கலைஞன்   என்றும் பொருள்படுவதால் இதில் மாறாட்டம் உள்ளது.  கட்டுமானத் தொழிலர்களும்  புலவர்களாய் இருந்தனர் எனின்   இப்பாடல் எழுந்த காலத்தில் கல்வி கற்று உய்யும் வசதிகள் யாவருக்கும் கிடைத்தன என்று  எடுத்துக்கொள்ளலாம்.    இசின்  மற்றும் தருமார் என்னும் சொல்லாட்சிகளால் இப்பாடல் மிக்கப் பழைய பாடல் என்று 
தெரிகின்றது. ஈயும் என்பதே  இசின் என்று திரிந்துள்ளது என்றாரும் உளர் .
இசின் என்ற சொல்லிறுதி வேறு  திராவிட மொழிகளிலும்  வழங்குவதாகச்  சொல்வர்   இவற்றை  அவ்வறிஞர் நூல்களிற் காண்க  

will edit,   

செவ்வாய், 13 அக்டோபர், 2015

‘பாக்கிஸ்தான் விடுதலை இயக்கம்


‘பாக்கிஸ்தான் விடுதலை இயக்கம்  அதனால்   பாக்கிஸ்தானுக்கு இந்தியாமேல் ஐயப்பாடு. 

 பலுச்சிஸ்தானம் போய்விட்டால் என்ன காஷ்மீர் வந்துவிடாதா ?  என்று ................................................ஒரு கனவு .

Govt may soon lose all control over Balochistan’




Prince of the defunct Kalat state Prince Mohyuddin Baloch.—PPI/File
Prince of the defunct Kalat state Prince Mohyuddin Baloch.—PPI/File
KARACHI: The prince of the defunct Kalat state and chief of the Baloch Rabita Ittefaq Tehreek, Prince Mohyuddin Baloch, has warned that if the government fails to settle by the end of 2015 the Balochistan issue according to the aspirations of people, it will soon lose all control over the situation.
“We have so far managed to restrain [disgruntled] Baloch people but after Dec 31, 2015 the situation will get out of our control and our rulers will no more be in a position to do anything to reverse it. After the end of this year, we will be forced to allow Baloch people to take any path they like,” said the prince at a press conference held at a local hotel here on Thursday.
He was accompanied by his younger brother Prince Yahya Baloch of Kalat.
He said: “So far, our 5,000 children have been killed and some 10,000 people have been kidnapped, but no one should think that the resistance has been crushed. It is correct that Baloch are by nature slow, stubborn and quarrelsome, but when it comes to war no one can defeat them.”
The entire world was increasingly becoming interested in Balochistan and trying to take advantage of it because of its strategic position. All wanted to exploit its resources at the cost of Baloch people who remained deprived with little positive impact on their life, he said.
The prince who remained federal minister in military ruler Gen Ziaul Haq’s regime said: “My father Khan of Kalat had attached his autonomous state to that of Pakistan on the advice of the Quaid-i-Azam and in the hope that a big Islamic state was in the making, but after its coming into being, the Pakistan of the Quaid-i-Azam and Allama Iqbal was forgotten.
“Though we were a small state, we were content with whatever we had. Not only were we practising Islam but we also used to have a form of democracy in line with our Baloch traditions, but after joining Pakistan, we lost everything and were grossly neglected by the new state,” he said.
He recalled that a democratic government was dismissed in Balochistan in 1972 because everyone had set their sights on its resources and every ruler wanted to exploit its strategic position.
“Sometimes Baloch people were branded as traitors and foreign agents without producing any proof. But in spite of it we always talked about peace,” he said.
He said that from 1976 to 1999, the situation remained comparatively peaceful in the province but afterwards it went downhill. “Today we see use of force, mutilated bodies dumped in deserted places, even I could have got killed but let me make it clear that at present Baloch people are not at war but are staging protests and even those who have climbed to mountains tops are not engaged in fighting,” he said.
He said the objective of the protest was to draw the government’s attention and make it listen to them but, regretfully, no one was paying any heed to their cries. “If someone thinks Baloch organisations have vanished into thin air, he is mistaken. No doubt some Baloch leaders are abroad and others lie low within the country, but all resistance groups are part of Baloch nation and everyone has its sphere of influence,” he said.
In reply to a question the prince said the purpose of his press conference was to awaken the establishment in Lahore and Islamabad from their deep slumber and bring home to them the fact that Baloch people were not happy with the present situation. “Pakistan at present is passing through the worst crisis of its history. The country has not even a semblance of governance. Some say it is being ruled by people in uniform, others say people in black suits are running the affairs and yet others say people in civvies are real rulers,” he said.
He said that he did not recognise Nawaz Sharif as a true ruler because he did not have genuine authority. “He is merely a face of the establishment. In case of any change, such rulers will fly to the country where they have amassed their assets,” he remarked.
Published in Dawn, February 27th, 2015
On a mobile phone? Get the Dawn Mobile App: Apple Store |Google Play



ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ஸ்ரீ நிவாஸ்

ஸ்ரீ நிவாஸ் என்ற  கூட்டுச் சொல்லைக் காண்போம்.

ஸ்ரீ =  திரு.
 நி -=  உள் சென்று;
வாஸ் =  பதி(ந்திருப்பவன்.)

ஆகவே திருப்பதி; அங்கு எழுந்தருளியிருக்கும் தேவன்.

திருப்பதி என்பதன் நேர் மொழி பெயர்ப்பு என்றே கூறத்தகும்.

தொண்டைமானால் நிறுவப் பட்டதாதலின் அவன் தமிழில் பெயரிட்டு அது பின் சங்கதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

நிவாஸ் என்பது  சங்கத அகர வரிசையில் உண்டு;  ஸ்ரீ நிவாஸ் என்பது பின் வந்த சொற்கோவை .

திருமகளை நெஞ்சில் கொண்டதால் ஸ்ரீ நிவாஸ் என்ற பெயர் எற்பட்டது என்பது ஒரு திறன்மிக்கப் பொருட்கூற்று ஆகும்.   ஸ்ரீ  = பெண் . திருமகள் 

திருவாகிய நன்மகள் பதிந்துள்ள இடமென்றும் திருமால் நெஞ்சினைக் கூறலும் ஆகும்.

பதி : பதிவு; பதிதல். 

பதி  > வதி > வசி  > வசி +  'அம்  = வாசம்;=  வாஸ்.  வாஸ .

சீர் + இனி + வாசம் >  சீரினி வாசம் >  ஸ்ரீ நி வாச

சீராக இனிய வாசம் செய்வோன்.

நி  :    நில் என்பதன் கடைக்குறை என்பதுமுண்டு.

இனி = இனித்தல் .  இனி வாசம் : இனிக்கும் வாசம். வினைத்தொகை.

இனிவாசம் >நிவாஸம் >  நிவாஸ்.

அடிப்படைச் சொற்கள் தமிழாகும்.


சாமிஒன்றாய் இருந்தாலும் வேறு பட்டோர்

மனிதருள்ளே வேற்றுமைகள் கணித்துக் கூற
மாமேதை என்போர்க்கும் இயன்றி டாதே!
புனிதரொடு பாவிகளும் புரட்டர் தாமும்
போலிகளும் புன்மையரும் ஒருபக் கத்தில்!
வனிதையர்கள் ஆடவர்கள் உருக்கு றைகள்
வளர்ந்துயர்ந்த நெட்டையர்கள்  குறளர் மற்றும்
தனியழகில் வெள்ளைமஞ்சள் கறுத்த தோலர்
தனித்தனியே பேச்சில்பல மொழிகள் கொண்டோர்

சாமிஒன்றாய் இருந்தாலும்  வேறு பட்டோர்
சாற்றுங்கால் ஒருமையுறு சாய்வு கொண்டு
பூமிஒன்றாய்ப் புகப்பெற்றுப் போற்றும் வாழ்வைப்
புதைபொருளாய் அடைந்திடவோர் புத்தி வேண்டும்;
ஆமிதுவே புதுமையெனும் புத்தி ஆகும்
ஆழ்ந்தறிந்தார் அமைவினிலே  ஆங்குத் தோன்றும்
ஏமுறவே விழைந்தாரை ஈமக் குண்டால்
இரக்கமறக் கொன்றார்க்கு இல்லை அன்றோ

Our hearts are with the peaceful marchers killed in Turkey with bombs.....