சனி, 3 அக்டோபர், 2015

பொருளுக்கேற்ற சொல்லமைப்பு

தை  என்னும் பின்னொட்டு வந்த சொற்கள் சிலவற்றை  முன் இடுகையில்  கண்டு இன்புற்றோம்,

இவற்றுள் குழந்தை என்ற சொல்லும் ஒன்று ,

குழந்தை  மென்மையானது ,  குழ என்ற அடியை  தை  என்னும் விகுதியுடன்  இணைக்கும்போது  குழத்தை என்று வல்லினம் தோன்றாமல்  குழந்தை என்று மெல்லினம் தோன்றிக் குறிக்கும் பொருளுக்கேற்பச் சொல் அமைந்தது, 

சிறிய வகைப்  பு,லியைக் குறிக்கும் சிறுத்தை என்ற சொல் காணுங்கள் ,

இந்த விலங்கு கொடியது . அதற்கு மென்மை  ஒன்றும் இல்லை.  

சிறுத்தையின் கொடூரக் குணத்திற்கேறப்  தகர ஒற்று வந்து சொல் வன்மை பெற்றது.

அர் என்பது சிவப்பு என்று பொருள்படும் அடிச்சொல்.

அர என்பதுடன் தை விகுதி சேர,  அரத்தை என்று வலித்தது காண்க.

 வேறு சொற்களை ஆய்வு செய்து  இந்த  அமைப்பழகு எந்த அளவுக்குப் பின் பற்றப்பட்டுள்ளது என்று கண்டு கூறுங்கள்.

இனிமைத் தமிழ்மொழி  எமது.




கருத்துகள் இல்லை: