செவ்வாய், 6 அக்டோபர், 2015

"அனந்த சயனம்" - chayanam

சயனம் என்றால் உறக்கம்.   எப்போதும் உறக்கத்தில் இருப்போன் என்ற பொருளில் "அனந்த சயனம்" என்ற தொடரும் வழக்கில் உள்ளது.

இங்கு,   சயனம் என்ற  சொல்லைக் கவனிப்போம்.

படுக்கையில்  சாய்ந்து படுக்காமல் எப்படி நன்றாக உறங்கமுடியும்?   நின்றுகொண்டே உறங்கி வீழ்கிறவர்களுமுண்டு  என்றாலும்,  இது போல்வன இயல்பான உறக்கங்கள் அல்ல.

சாய்(தல்) என்ற வினைச்சொல்லே  சயனம் என்பதற்கு  அடிச்சொல் ஆகும்.

சாய்+அன்+அம் = சாயனம்  என்று வரும். இதில் சா என்பதைக் குறுக்கிச் சயனம் என்று அமைத்தால், சயனம் வந்துவிடுகிறது.

இஃது ஒரு மிக்க இயல்பான புனைவுதான்.

எப்படிக் குறுகும் என்று கேட்கலாம்.  தெரியாத மாணவி கேட்டால் பொறுமையாகப் பதில் சொல்வது கடன்.

சாவு+ அம் = சாவம் என்று வரும்.  அது நனறாக இல்லை. அதை இனிமையாக்க, சா என்பதைக் குறுக்குவதே  திறமைதான். பழங்காலத்தில் பயன்பட் ட திறமை.

குறுக்கவே சவம் என்ற சொல் கிடைக்கிறது.

இதைப்போல் குறுகிய சொல்தான் சயனம் என்பதும்.

சாயுங்காலம் என்பது  குறுகவில்லை.  பொழுது சாயுங்காலம்,  சாய்ங்காலமாகியது. இதைக் குறுக்கினால் சய்ங்காலம் என்றால் நன்றாக இல்லை. எனவே முன்னோர் முயலவில்லை.


வெட்டிச் சாய்ப்பது, வெட்டி முறிப்பது என்றெல்லம் பேச்சில் வரும். கிழித்துவிட்டாய், சாய்த்துவிட்டாய் என்று கிண்டல் பேசுவதுண்டு.  இதிலிருந்து வந்த சொல்தான்  "சாய்த்தியம்"  இதில் பல சொற்களில்போல யகர ஒற்றுக் குறைந்து சாத்தியம் என்பது உண்டானது. இது முன் கூறப்பட்டதுண்டு.

கருத்துகள் இல்லை: