சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு வாழ்த்துகள்.

மெட்டினிய பாட்டிலே மேலெழும் இன்குரல்போல்
எட்டரிய எல்லாமும் எட்டும் பதினேழில்
யாவர்க்கும் என்றுமெங்கும் இன்பமே பொங்கிடுக‌
தேவமுதாய் மேவ நலம்.

யாவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வியாழன், 29 டிசம்பர், 2016

திராட்சை உருத்திராட்சம் அங்கம்:

ஏறத்தாழ 2008 ‍  ~  2011 வரை எழுதப்பட்ட பல இடுகைகள் கள்ள‌
மென்பொருள் கொண்டு நஞ்சர்களால் அழிக்கப்பட்டன.

நினைவிலுள்ளவற்றில் சில இப்போது:

திராட்சை ‍  இது திரளாகக் காய்ப்பதனால் ஏற்பட்ட பேச்சு வழக்குப்
      பெயர்.  திரள் > திரட்சை (திரள்+சை_ > திராட்சை.

உருத்திராட்சம்:  இது திராட்சைப் பழ வடிவான மணிகளால், கோத்துக் கட்டி, உருப்போடுவதற்கு ( மந்திரம் சொல்வதற்குப்) பயன்படுத்தப்
பட்டதனால் வந்த பெயர்.  உரு + திரட்சை + அம் = உருத்திராட்சம்).

அங்கம்:   இதில் முன் நிற்பது  அம். இது அமைப்பு என்பதன் அடிச்சொல்.  கு+ அம் என்பன விகுதிகள். அங்கம் எனில் அமைக்கப்பட்டது என்று பொருள். அம்> அமை > அமைத்தல்.
அம்> அங்கு> அங்கம்;  அம் > அங்கு > அங்கி.  மூலம் தமிழ் அடிச் சொற்கள்.

ஆமைக்கு மறு பெயர்.

ஆமைக்குத் தமிழில் வேறு பெயர் உண்டா என்று நீங்கள் வினவியதுண்டா ?  ஆமை என்ற உயிரி வேறு; அறியாமை, ஒவ்வாமை, பொறாமை என்று ஆமையில் போய் முடியும் சொற்கள்
வேறு.பொறுமை மிக்கது ஆமை; அதற்கும் பொறாமைக்கும் ஒரு
தொடர்பும் இல்லை. முயலுடன் போட்டி போட்டு வென்ற புகழை
உடையது ஆமை என்பதும் நீங்கள் அறிந்ததே.

ஆமைக்குக் கடமம் என்ற இன்னொரு பெயருண்டு. மிக்கக் கடுமையான் ஓடுகளை உடையது ஆமை. ஆகவே அதற்கு மற்றொரு
பெயரை வைத்தவர்கள், கடு (கடுமை, கடியது)  என்ற அடிச்சொல்லினின்றும் ஒரு பெயரை அமைத்தது மிக்க அழகிதே
ஆகும்.‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கடு + அம் + அம்.

அம் என்ற இறுதியைப் பெற்ற இச்சொல், அம் என்பதே இடைநிலை
யாகவும் பெற்றுள்ளது. சில சொற்கள் ஒரே இடைச்சொல்லை விகுதியாயும் இடைநிலையாயும் பெறுதலுமுண்டு.

சில சொற்கள் எழுத்துமுறைமாற்றாக வரும்.  எடுத்துக்காட்டாக,
விசிறி என்பது சிவிறி என்று வந்து, பொருள் மாறுபடாமலிருக்கும்.
இந்தக் கடமம் என்ற சொல்லும், கமடம் என்று எழுத்து முறைமாற்றி
வருதல் உண்டு. சொற்களும்கூட இரட்டைவேடம் அணிதல் உண்டு.

இன்னொரு எ‍~டு:  மருதை > மதுரை.  மருத நிலங்கள் சூழ்ந்த‌
நகர் என்பது பொருள். இங்ஙனம் பல உள .  முன்  எழுதிய நினைவு இருப்பதால்   தேடித் பார்த்தல் நன்று.

Since posts go missing often, editing will be done later. Cannot be helped.  Thank you.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



நத்தை என்பது..........

நத்தை என்பது ஓர் ஊரும் உயிரி.  இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டதென்பது எவ்வித ஆய்வுமின்றியே அறிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

நத்துதல் என்பது ஒட்டிக்கொண்டு இருத்தல்,  பிறவற்றை  அடுத்து வாழ்தல்  என்று பலபொருளைத் தரும்.  "பிறரை நத்தி வாழமாட்டேன்" என்ற வாக்கியம் காண்க.

நத்து + ஐ = நத்தை.

நத்தை என்பது தமிழ்ச்சொல், தவளை என்பதுபோல.

செடி,  மரம் என்று ஏற்ற எதிலும் ஏறி ஊர்வது  நத்தை. நீர் நத்தைகளும் உள .

புதன், 28 டிசம்பர், 2016

ஜெய லலிதா பொற்செல்வி

பாண்டியனின் மகள்போலப்
பைந்தமிழ்ப்பொற் செல்வியெனப்  
பணிந்துபலர்  உயர்ந்தேத்தப்
பார்புகழக் கோலோச்சி
மறைந்தஜெய லலிதா,      தன்னை ~~

ஈண்டுவளர்த் துயர்த்தியவர்
இருந்தாரேல் இக்கதியும்
எய்த லுண்டோ   என்றுகுரல்
எழும்பிடவே நன்றுபல
புரிந்தவரே முதல்வர்    முன்னாள்..



நல்லவரும் புகழ்கின்றார்;
நல்லதுமுன் செய்தவராய்
உள்ளசில நிகழ்வுகளால்
ஊரெதனைக்  கூறிடினும்
 நல்லோரே யாங்க     ளென்பார்,


எல்லவரும் புகழ்கின்றார்
என்றிடிலோ யார்க்குமொரு
மீட்பரெனத் திகழ்ந்தவரே
அவரெனவே தெளிவுறுத்தும்
வரலாறே        இதுவோ     பண்பால்..


செவ்வாய், 27 டிசம்பர், 2016

சொல் திரிபுகள் : ய > க;( மற்றும் கி ள் கெடுதல் )

இந்த  மூன்று வடிவங்களையும் பாருங்கள்.

சொல்றீங்க >  சொல்றீக >  சொல்றிய.

சொல்றீங்க என்பது சொல்கிறீர்கள் என்பதிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

கி ~  கெட்டது, அதாவது இல்லாமல் போய்விட்டது.
ர் ~  இதற்குப் பதிலாக ங் தோன்றியது.
ள் ~  கெட்டது.

இதுபோல,  ஒன்றோ பலவோ எழுத்துக்கள் அல்லது ஒலிகள் மாறுதலையும் மருவுதலையும் உடைய வேறு சொற்களைக் கண்டுபிடியுங்கள்.

 சொல்றீக >  சொல்றிய.

இங்கு ஈற்று எழுத்து க என்பது ய என்று மாறியுள்ளது. இப்படிப்
பிற சொற்களில் மாறியுள்ளதைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.

இதற்குப் பல உதாரணங்கள் முன் இடுகைகளில் உள்ளன.

இப்படிச் செய்தால் சொற்கள் எப்படித் திரிகின்றன, எப்படி மருவுகின்றன என்பதைச் சொல்லும்போது, தெரியாமல் அதை
மறுப்பது தவிர்க்கப்படும்.

சொல் திரிபுகள் :  ய  > க;(  மற்றும் கி  ள்  கெடுதல் )



















எது செய்தி


எங்கெங்கும் நடப்பனவோ செய்தியல்ல ‍ ===  தம்பி
எங்கேனும் நடப்பதுவே செய்தியாகும்!
எங்கேனும் நடந்ததனைப் படித்துவிட்டு ‍‍=== நீயும்
எங்கெங்கும் நடப்பனவென் றெண்ணிடாதே.


Black money: ஓயாக் கூச்சல்

கோவிலுக்குப் போனாலும் வரிசை தானே
குளிப்பதற்குப் போனாலும் வரிசை தானே
ஆவலுடன் மாற்றுகிறாய்  செல்லாக் காசை
அதற்கென்ன வேதனையா வரிசை நிற்க‌

கால்கடுக்க நீ நிற்கும் வேளை தன்னில்
கட்சிக்கா ரன்வந்து சோறு தந்து
நீர்குடிக்கத தந்தானோ? இருக்கை தந்து
நின்கடினம் போக்கிவிட என்ன செய்தான்?

ஊழலிலே ஊறிவிட்ட நாட்டில் தம்பி
உனக்காகப் பேசவில்லை தனக்கே தானே
வாழவழி வருந்தேர்தல் வெற்றி எண்ணி
வாயாலே பிதற்றுகிறான் ஓயாக் கூச்சல்.


ideally, aspire to become a version of the middle class. Events in their life do not carry the same valencies and their hardships are possible to nationalise. Their short-term problems are sought to be minimised -after all, they are used to standing in queues for everything and their long-term issues in terms of adjusting to an entirely unfamiliar system of payment and their livelihoods being threatened are glossed over.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/demonetisation-and-the-reliance-on-anecdotes-to-support-personal-views/articleshow/56193776.cms







ஞாயிறு, 25 டிசம்பர், 2016

counterfeit notes.

According to certain writers in the Internet,  Pakistan has the factories to print  Indian currency.
So a person outside India who wants to  visit India changes his money at a money changer in a foreign country. He gets Indian Rupee notes printed in Pakistan. (Assumption).  He goes to India and makes transactions using the Pakis-printed "money". 

If many transactions are done in this manner, then the printer in Pak has become richer.

Pity the man who digs the ground the whole day to earn a little to sustain himself and his family.

The world belongs to the smart people.


மண்வெட்டும் ஏழைத் தொழிலாளி
மாலையில் எல்லோன் மறைவரைக்கும் 
கண்சிமிட் டாமல் உழைக்கின்றான்
கஞ்சி இரவில் அவனுணவாம்.
விண்முட்டும் காகிதக் காசுகளை
வேண்டிய  மட்டிலும்  அச்சடிப்போன்
பண்பட்ட வாழ்க்கை நுகருகின்றான்
பாரில் அரசாய் வலம்வருவான்.

Further reading:

http://zeenews.india.com/news/india/pakistan-prints-more-indian-currency-than-its-own-rupee_1947873.html

Pakistan prints more Indian currency than its own
 rupee!





As per Deputy Chief Minister of Jammu and Kashmir, Nirmal Singh, Pakistan prints more Indian currency than Pakistani currency.



கம்முநாட்டி, பொம்முநாட்டி

கம்முநாட்டி,  பொம்முநாட்டி என்பன சிலர் பயன்படுத்தும் வடிவங்கள்.
இவை எங்ஙனம் அமைந்தன என்பதை இதுகாலை உணர்ந்துகொள்வோம்

இவ்வழக்குகள் உலக வழக்கில் உண்டெனினும் இலக்கிய வழக்கில் அருகியே வந்துள்ளன  .    ஓர் திரைப்பாடலில்

நீ எல்லாம் தெரிஞ்ச பொம்முநாட்டி,  நான்
ஒண்ணுமே தெரியாக் கம்முநாட்டி

என வருவது நீங்கள் கேட்டிருக்கலாம்.

கைம்பெண்டாட்டி என்பதே கம்முநாட்டி என்று திரிந்தது என்று சொல்வர்.
இதில் கைம்பெண்டா என்பது "கம்முநா" என்று திரிவது வியக்கத்தக்கது
ஆகும்,

கைம்பெண்டு+ ஆட்டி என்ற வடிவத்திலிருந்து புறப்படாமல், பெண்டு என்பதற்குப் பதில் பெண்ணு என்பதை மட்டும் கருதினால்,

கைம்பெண்ணு + ஆட்டி =  கம்முணு + ஆட்டி = கம்முநாட்டி அல்லது
கம்முணாட்டி என்பது எளிதாகிறது.

பொம்முநாட்டி என்பது, பெண்+முன்+ ஆட்டி = பெம்முநாட்டி > பொம்முநாட்டி என்று அமைந்தது.

இச்சொல் (பொம்முநாட்டி)  என்பதன் முந்து வடிவம் பெண் முன் ஆட்டி ( பெண்முன்னாட்டி) என்பது சரியானால்  அது பெண்கள் ஒருகாலத்தில் முன்னணி வகித்ததைக் காட்டுகிறது.  பெண்முன் என்பது பெம்மு என்றும் பின்னர் பொம்மு என்றும் திரிதல் பொருந்துகிறது.  பெண்மான் என்ற கூட்டுச்சொல்லும் பெண்மா(ன்)> பெம்மா  > பொம்மா என்று திரிதல் எளிது.  ஆனால் இவ்வுலகவழக்குச் சொல்லில்  பொம்மு-நாட்டி என்று வருவதால் மான் என்பது பொருந்தவில்லை.  ஆகவே பெண்முன்னாட்டி என்பதே மூலச்சொல்லாக இருந்திருக்கவேண்டும்.

கட்டப்பொம்மன் என்ற பெயரில் மூலப்பெயர் கட்டைப்பொம்மையன் என்பதாக இருந்திருத்தல் கூடும்,  பொம்மை என்ற பெயர் வழக்கில் உள்ளது, பொம்மையன் என்பது பொம்மன் என்று திரிந்தது எனலாம்,  இந்தப் பொம்மன் பெண் என்ற சொல்லுடன் தொடர்பற்றது என்பது தெளிவு.  பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று திரிவதால் கட்டைப்பெருமான் என்பதே கட்டப்பெம்மான், கட்டப்பொம்மான், கட்டப்பொம்மன் என்று திரிந்ததென்று சொன்னாலும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
 


ஆட்டி என்பது ஆள்+தி என்று பிரிவதால்,  இச்சொல் பெண் குழுவினர்க்கதிகாரிகளைக் குறித்து,  இப்போது பொதுப்பொருளில்
வழங்குகிறது என்பது தெளிவு. பெண்களுக்குப் பொறுப்பதிகாரி, கைம்பெண்களுக்குப் பொறுப்பதிகாரி என்று சொல்லுக்கேற்ப  வரும்.
அரண்மனைகளில் வழங்கிய சொற்கள் இவை எனலாம்.

இங்கு வரும் "ஆட்டி", சீமாட்டி, பெருமாட்டி என்பன போலும் அமைந்த வழக்காம். பின் பொருள் இழிந்தன.

பெண் என்பது மட்டுமே குறித்தல் நோக்கமயின், ஆட்டி என்பது
தேவையற்றதென்பது அறிக. சொல் இழிந்தமைக்குக் காரணம், ஆடவர்
தாழ்த்தி எண்ணியதே என்க‌

பெண்டாட்டி என்பது பெண்+து+ ஆட்டி ஆகும்.  து = உரிமை குறிப்பது.
பெண்ணுக்குரிய தன்மையை ஆள்பவள் என்பது பொருள். குடும்ப நலம்
கருதுபவள் எனல். கருத்து.

இச்சொற்கள் கம்நாட்டி, கம்மநாட்டி,  பொம்நாட்டி, பொம்மநாட்டி என்று
பலவாறு நாவொலிப்புப் பெறுகின்றன.


சனி, 24 டிசம்பர், 2016

Merry Christmas தினம்

நேசம் உலகில் பரப்பும் நிமிர்ந்தநல்   நெஞ்சுணர்வோர்
ஏசு பிரானை இறைமகன்  என்று தொழுந்தகையார்
மாசிலர்க் காடியும்  பாடியும் மாநிலம் மாணுறவே
ஓசுயர் ஏசுவின் தோற்றத் தினம்பெறு   வாழ்த்துகளே..

கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்


நிமிர்ந்தநல்   நெஞ்சுணர்வோர் =  நேர்மையான இதயம் உடையோர்.
தோற்றத் தினம் =  பிறந்த தினம் .
ஓசு =   புகழ் , கீர்த்தி . ஓசு உயர் =  புகழால் உயர்ந்த .

தினம் :  தீ  அல்லது வெளிச்சம் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து அமைந்தது என்ப .

தீ + இன் + அம்  =  தினம் . (தீ  குறுகி தி ஆனது )
இகரம் கெட்டது .
சாவு > சவம்  என்று குறுகுதல்  போல்.
.  

தாக்கிக் கொலை விட ஊசியாற் சாவென

உயர்நிலை நல்லம்மை யார்மறை வெய்திய நேர்வதனால்
நயமன்றி வேறு கருதுவர்  அல்ல‌ராம் தொண்டர்சிலர்
கயமையர் தாக்கிக் கொலைவிட ஊசியாற் சாவெனவே
அயிருறு சொல்லுரை மேவினர் உண்மைக் கயல்படுமே.


மருத்துவர் சொல்லுக்கு மாற்ற முரைத்தல்
பொருத்தமில் ஏலா துலகு.

பொறுத்திருந்து பார்த்திடில் புன்மையர் உண்டேல்
உறுத்திமனம் உண்மை வரும்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

தங்கத்துக்குப் பெயர் வந்தது............

தங்கத்துக்குப் பெயர் வந்தது அது தகதக என்றிருப்பதனால் என்று
கூறுவர்.

தக ‍தக ‍>  தங்கம்.

இதிலொரு ஙகர ஒற்றும் மகர ஒற்றும் தோன்றியுள்ளது.

தக+ அம் = தங்கம்.

ஒப்புமை: பகு+ அம் =  பங்கம்.(  பொருள் :   பகுதி கெட்டது.)
பக்கம் என்பது மற்றொரு முடிபு.  பொருள் வேறுபடுவது.

செலவாகாமல் தங்கும் தகுதி உடையது தங்கம் எனப்பட்டது என்றும்
கூறலாம். பொன்னாகவும் தங்கமாகவும் சேர்த்துவைப்பதற்கு இதுவே
காரணம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

கைப்பணம் கள்ளமோ

கைப்பணம் நல்லதோ
கள்ளமோ  எப்போதும்
எண்ணார்பேர்  இந்தியர்  என் !

சட்டியோ ஓட்டை
எனின்என்ன  நன்குகொழுக்
கட்டைவெந்   தாலே சரி

கள்ளமே  ஆயினும்
காய்கறி கிட்டினால்
உள்ளமே பூரிப்  பவர் ..


என் = என்று சொல்க .

துருவும் துர்~ முன்னொட்டும்.

துருவும்  துர்~ முன்னொட்டும்.

கணிய (சோதிட) நூல்க‌ளில் ஓர் கிரகம் துர்ப்பலன்கள் கொடுக்கும்
இராசிகள் என்று கணக்கிடுவார்கள். இப்போது துர்‍~  என்ற முன்னொட்டினை  ஆய்வோம்.

இரும்பு துருப்பிடிக்கிறது. அதைத் தினமும் தூய்மைப்படுத்தியோ, அல்லது எண்ணெய் முதலியவற்றை இட்டோ அப்படி ஆகாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.  துரு, இரும்பு கெட்டுப்போவதைக்
குறிக்கிறது.  ஆகவே, துரு என்பதற்கு கெடுதல் என்ற பொருள் ஏற்பட்டது.

இது பின்பு ஒரு முன்னொட்டாக மாறித் துர்‍~ என்று சுருங்கிற்று.

துர்ப்பலன்
துர்ப்பாக்கியம்
துர்குணம்


எனப் பல சொற்களில் முன் ஒட்டிக்கொண்டு, கெடுதல் என்ற பொருள் தந்தது.

வேண்டாத துருவின்மூலம்  வேண்டியதோர் முன்னொட்டு மொழிகட்குக் கிட்டியது  வரவேற்றற்குரித்தானதோர் வளர்ச்சியே ஆகும்.

துரு என்ற அடிச்சொல் தமிழோ  ?  பின் கூறுகிறோம்.

க வுக்கு ய நிற்றல்

சில சொற்களில் ககரத்திற்கு யகரம் மாற்றாக வருமென்பதை முன்
ஓரிரண்டு இடுகைகளில் எழுதியுள்ளோம். அவற்றை மறந்திருக்க மாட்டீர்கள்.

கோலியன்  (  நெசவு செய்யும் தொழிலன்)  . இவனைக் குறிக்கும்
இச்சொல், கோலிகன் என்றும் திரியும் என்பதை மறத்தலாகாது.

அதிகமான் =  அதியமான் முதலிய சொற்களில் க வுக்கு ய நிற்றல்
முன் இடுகைகளில் சுட்டப்பெற்றது.

ஆனால் தேகம்  தேயம் என்று வருதலில்லை .

கோவிட்டு து விகுதி

இப்போது கோவிட்டு என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பல சொற்கள் தமிழில் ‍து விகுதி பெற்று முடிந்துள்ளன. கைது என்ற இந்தக் கால வழக்கில் உள்ள சொல் மட்டுமன்று, விழுது என்ற பழந்தமிழ்ச் சொல்லும் கூட இவ்விகுதி பெற்றுள்ளது காணலாம்.

கோவிட்டு என்பது சாணியைக் குறிக்கும் சொல். இதுவும் து விகுதி பெற்று முடிந்த சொல் ஆகும்.

கோ =  மாடு.
விள் + து =  விட்டு.

விள் என்பது விடு என்பதன் மூலச் சொல் ஆகும்.  விள் >  விடு.
சுள் > சுடு என்பதுபோல. நள் > நடு என்பதும் அது,  நள்ளிரவு ‍=  நடு
இரவு எனக்காண்க.  சுள் > சுள்ளி; சுடு > சுடலை என்பனவும்
அறிதற் பாலன.

விள் > விட்டை என்பதும் ஒப்பு நோக்குக.

கோவிட்டு என்ற கூட்டுச்சொல்லில் விட்டு என்பது தமிழ்.

பிற்சேர்க்கை  21102021 1725:

இங்கு கூறப்பட்ட கோவிட்டு என்பது வேறு.  கோவிட்19 என்ற நோய்க்கிருமிப் பெயர் வேறு.  கிருமி என்பது  கரு என்ற சொல்லினடிப்  பிறந்து,  கிரு என்று திரிந்தது. எ-டு: கரு> கிரு> கிருட்டினபட்சம் ( நிலவின் இருண்ட பக்கம்).  கிருஷ்ணன் என்பதும் கரு>கிரு>கிருஷ்ணன் என்பதே. தமிழில் திரிபின்றி வருவது கருப்பன் என்ற சொல். அதாவது:  "கருப்புசாமி". "கருப்பையா" என்பது. இது அயலில் கிருஷ்ணசாமி, கிருஷ்ணையா என்று வழங்கும்.

புதன், 21 டிசம்பர், 2016

அழகான சுழியனிதே ஐயப்பா ‍‍

அழகான சுழியனிதே ஐயப்பா ‍‍===என்மேல்
அன்பாக அனுப்பிவைத்தாய் ஐயப்பா.
மெழுகாக உருகிப்பாடி ஐயப்பா === முடிவில்
மேலான சுவைவழங்கும் ஐயப்பா.

உளமார மக்கள்போற்றும்  ஐயப்பா === நீ
உலகோரைக் காக்கவேணும் ஐயப்பா;
தளமாகச் சபரிகொண்ட ஐயப்பா === நீ
தரவேண்டும் சமர்நிறுத்தம் ஐயப்பா.

இன்று ஐயப்ப பத்தர் தந்த சுழியன் உண்டபின் பாடியது 

திங்கள், 19 டிசம்பர், 2016

தமாஷ். how derived

தாம் மகிழ்வது நடந்தால் அதுவே கேளிக்கை. இதைத் தமாஷ்  என்றும்
சொல்வர்.

இது ஒரு கடுந்திரிபு ஆகும்.  பிறமொழி பேசுவோரால் திரித்து
அமைக்கப்பட்டது.  (உருது  பேசுவோரால் ).

தாம் மகிழ்  > தாமகிழ்.

இதில் மகி என்ற இரண்டெழுத்துக்கள் மா என்று நீண்டது.  பகுதி > பாதி
என்பதைப் பின்பற்றியது.

தா மா ழ் =  தாமாஷ் > தமாஷ்.

தா  > த   ஆனது.
மகி  >  மா ஆனது.
ழ் = ஷ் ஆனது.

தாம்மகிழ் என்பதன் உருவாக்கத்தை சுருங்கச் சொல்வதானால்:

முதலில் ழ் > ஷ் ஆக்கவும்.  ஒரு மகர ஒற்றை நீக்கவும்.

 தாமகிஷ்.

மகி என்பது ஒலி தட்டுப்படுவதுபோல் இருப்பதால், நீரொழுகுவது போல‌
ஆக்க:

தாமாஷ் ,   ( மகி > மா என்று மாறவேண்டும். )  ----->  தமாஷ் .

ஆக, சொல் படைக்கப்பட்டது.























கேளிக்கை.



கேளிக்கை

சில சொற்களில்  அகரத் தொடக்கமான சொல், ஏகாரத் தொடக்கமாகத் திரியலாம். அல்லது வேறு உயிரெழுத்தாகவும் திரியக்கூடும். இதைப் பல ஆண்டுகட்குமுன் யாம் தெரிவித்ததுண்டு.

இப்போது சில எடுத்துக்காட்டுகள்:

களிக்கை > கேளிக்கை.

இங்கு முன் நின்ற அகரம் ஏகாரமாயிற்று.

இதுபோன்று திரிந்தவற்றைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.
இது பற்றிய எம் முன் இடுகை அழிந்தது.

கருணா நிதிக்கு வாழ்த்து

புரட்சி     மகான் இரா      மானுசர்  போற்றி      
வரட்சி இலாத்தமிழ் வண்ண எழுத்தறிஞர்
சொல்வல்ல நற்கலைஞர் வெல்கரு  ணாநிதியார்
எல்போல நின்றொளிர்க‌ நேர்.


உள் விகுதி பெற்ற சொற்கள்.



உள் என்பது ஒரு சொல்லில் இறுதிநிலையாக அல்லது விகுதியாய்
வரும். யாவரும் அறிந்த சொல் "கடவுள்" என்பது. கட என்பது பகுதி. அதனோடு உள் சேர்ந்து கடவுள் ஆயிற்று.

ஆற்றிலேதான் தூண்டில் போட்டு
அதிலே ஒரு மீன் பிடித்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காகும் கடவுளே!

என்ற கலைவாணரின் பாட்டில் கடவுள் என்ற  சொல் நன்கு பயன்பட்டுள்ளது.

ஆயுள் என்ற சொல்லிலும் உள் விகுதி உள்ளது.  ஆ= ஆவது.  அதாவது உயிருடன் இருப்பது. ஆவது உண்டாவதும் குறிக்கும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

என்ற பழமொழியில்  ஆவது  உயிருடன் வாழ்தல் குறித்தது. பிறத்தலும் குறிக்கும்.  ஆயுள் பின் ஆயுசு என்று பேச்சில் திரிந்தது.

உள் விகுதி பெற்ற சொறகள் பல. இங்கு பட்டியலிட முற்படவில்லை.
ஒன்றை மட்டும் கவனிப்போம்.

விக்குள் என்பதே அது. இது விக்கல் எனவும் படும்.

விக்குதல் : பட்டுக்கொள்ளுதல், நின்றுபோய் மாட்டிக்கொள்ளுதல்
குறிக்கும்.  இது உள் விகுதி பெற்று,  விக்குள் என்றும் வரும்.

விக்குதல் ‍ தடைப்ப்படுதல். விக்கினம் என்ற சொல், விக்கு+ இனம்=
விக்கினமாயிற்று.  விக்குதல் என்ற சொல்லிலிருந்து இதைத் தொலைவுப்படுத்த அது >"விக்ன" எனச் சுருங்கிற்று.

வை > வய > வயந்தம் > வசந்தம்

பன்றியும் வன்றியும்.

பகரம் வேண்டிய விடத்து, மொழிமரபு கெடாமல்,வகரமாகத் திரிதற்கு
உரியது ஆகும்.  இது பலமொழிகளில் காணப்படுவதொன்றே.

பன்றி என்பது வன்றி என்றும்
பண்டி என்பது வண்டி என்றும்

திரியும்.

வசந்து என்பது பசந்த் எனத் திரிதல் பாலதே, இது பிற மொழிகளில்
வரும்.

வை > வய > வயந்தம் > வசந்தம் எனக்காண்க.

வயந்தமாலை > வசந்தமாலை.

இதை முன் பல முறை விளக்கியிருந்தும் இடுகைகள் இலபோல்
தோன்றுகின்றன.

வை  > வய  : எப்படிப் பொருந்துகிறது?

சிந்தியுங்கள் .  வந்து விளக்குகிறேன். 

காட்டர சென்று

காட்டர சென்று கழறும் குழறுபடி
மீட்டெடுத் தாங்கு மேற்சட்டம் === கூட்டொழுங்கு
நின்று நிலைப்படவே நேரிய செயலமைப்பு
என்றியலும் மன்னோ இனி.

இதை இன்னொரு கவிதையுடன் வாசித்துப் பாருங்கள்.  அது இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_18.html

இவை இரண்டும் சில மாதங்களுக்கு முன் பாடப்பட்டவை .

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

விண்செலல் துயரதே.


பேறென்று சொல்வன அனைத்தும் பெற்றுத்   தரும்பதி
னாறோடே ஆயிரம் ஈரான இவ்வாண் டிறுதியில்
ஆறோடுங் கண்ணீர் எனும்படி தலைவர் பெரியோர்
வீறாடும் தமிழகம் நீங்கி விண்செலல் துயரதே.

நிறைசுரந்து நிமிர்ந்துநின்ற

நிறைசுரந்து நிமிர்ந்துநின்ற அரசுபின்னிட=== ‍  இன்று
நிலைதளர்ந்து பலவுழந்த பாவமென்னவோ?
கறைகறந்து முகத்துவீசும் காலம்வந்ததோ === எண்ணக்
கலைவளர்ந்து மலையினுச்சி நிலையுமீளுமோ


இது வேறு நாட்டின் ஒரு மாநில அரசு ஆட்சியின்போது நடைபெற்ற‌
ஒரு நிகழ்வினைப் பற்றி வரைந்த கவி. முன் பதிவு செய்ததாக ஞாபகம்.அதைத் தேடிப்பிடிக்கவில்லை. பல அழிந்துவிட்டபடியால்
எதையும் மறுபதிவு செய்வது வேண்டற்பாலதே. ஒன்றை விடமிகள்
அழிப்பினும் இன்னோரிடத்தில் அது கிடைக்குமே.  அதனால்.

சனி, 17 டிசம்பர், 2016

ஆதங்கம் என்ற சொல்லை...

கொஞ்ச நேரம் உடம்பு வெப்பமடைந்தால், அது தங்காதது. வெப்பம் கூடுதலாகித் தொடருமானால் அது காய்ச்சல் என்கிறோம். ஜுரம் என்று சிலர் சொல்வர்.

ஒரு பாத்திரத்தில் நீரூற்றினால் அது தங்க வேண்டும்.  நீர் வடிந்துவிடுமானால் அது தங்கவில்லை. தங்கி நிற்பதையே கலம்
என்கிறோம்.

மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் தங்கித் துன்புறுத்துகின்றன. தங்கித் துன்பம் தராதது ஒரு துன்பமன்று. ஒரு முறை இருமினால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. தொடர்ந்து இருமல் வருமானால் அது தீமை. தங்கிவிட்ட துன்பம்.

நோயும் நீங்கும்வரை தங்குவதே ஆகும்.

பயம், துக்கம் எல்லாம் தங்கிச் சிலகாலம் துன்புறுத்துபவை.

இவைபோல்வன தங்குவது சில நிமையங்கள் ஆகலாம் . பல வருடங்கள்
ஆகலாம்.  கால அளவு சிறிதாகவோ நீண்டதாகவோ இருக்கலாம்.

இப்போது ஆதங்கம் என்ற சொல்லைப் பார்க்கலாம்.

தங்கி நடைபெறுவதே ஆ+தங்கம் = ஆதங்கம் ஆகும்.  ஆ= ஆகுதல்.
தங்கம் என்பது தங்கு அம் ஆகும். அம் என்பது விகுதி.

தங்கி ஆகுவது .

இதன் பொருள்:  ஆபத்து, தொல்லை, கலம், காய்ச்சல், தீமை , நோய் ,அச்சம்  துக்கம்.

இவற்றுள் எதுவும் தங்கினாலே  தொல்லை.  தங்கம் என்ற பகுதிச்சொல்  இதையே தெரிவிக்கிறது. ஆ . தங்கம்.

பொன்  எனும் தங்கம் வேறு. 


வகைகெட்ட வங்கிகளில் புது இரத்தம்?

தலையமைச்சர் மோடி தகைசால்நன் மாந்தர்
நலம்விளைக்கும் அன்னார் நடவடிக்கை என்றாலும்
வங்கிகள் பல்லாற்றான் வக்கறுந்து போனவையே
தங்கிநிற்கும் உள்ளூழல் தன்னிலே தத்தளிக்கும்
புத்துழைப்பு நல்கப் புனிதம் வலிபெறுமோ
செத்த உடலுக்குள் புத்தம் புதுயிரத்தம்
ஒத்தூர்ந்  துயிர்ப்படுமோ  தான்?



http://www.livemint.com/Opinion/uGl7NBV5ePFHffisBJOTjL/How-corrupt-are-our-bankers.html.

http://www.livemint.com/Opinion/uGl7NBV5ePFHffisBJOTjL/How-corrupt-are-our-bankers.html.

காதல் காமம்


காதல் காமம் என்ற சொற்களிலும் கா (காவல்) என்பதே ஆதிப்பொருள்  ஆகும். பிரேமை என்ற இடுகையைப் படிக்க.

http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_75.html

தான் விரும்பிய ஆடவனை, அல்லது பெண்ணை காப்பதனால்
(பிறர் எடுத்துக்கொள்ளாமல்) இச்சொற்கள் இங்ஙனம் அமைந்தன.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பிற + ஏம் + ஐ = பிரேமை.

தன்னைத் தானே பெரிதாக எண்ணிக்கொண்டு தன் நாட்களைக் கழிக்கும் ஓர் இளைஞன், இன்னோர் ஆன்மாவை நேசித்து அவ்வான்மாவுடனும் அது குடியிருக்கும் உடலுடனும் அன்பு பூண்டு ஒழுகும் நெறிதான் பிரேமை எனப்படுகிறது. அவ்வன்பினால் அவன் அவ்வான்மாவைக் காக்க முனைகிறான்.  ஏம் = பாதுகாத்தல். ஏமம் = பாதுகாத்தல். ஏமை என்பதும் அதுவே.  அம், ஐ என்பன விகுதிகள்.

பிற + ஏம் + ஐ = பிரேமை.

இதை முன் விளக்கியுள்ளோம்.  அழிந்துவிட்டபடியால் மீண்டும்
வெளியிட்டோம். இது அதனை உறுதிசெய்யும் வெளியீடு ஆகும்.

பிற என்ற சொல்லில் உள்ள ற, ர‍~வாக மாற்றப்பட்டது. இப்படி ஒரு
மாற்றத்தை நிகழ்த்திவிட்டாலே அதனை அடையாளம் கண்டுகொள்ள‌
இயல்பாக ஒழுகுவோனால் இயலாது!  சிந்தனைக் குறைவே காரணம்.

அடுத்தவீட்டான் எப்போதும்போல் வந்தால் அவன் யார் என்று எளிதில்
தெரிந்துகொள்ளலாம். வேடமிட்டுக்கொண்டு போனால் ஒருவேளை
தெரியாமல் போனாலும் போகலாம். அதுபோலத்தான்.


ஏமம் சேமம் ஆனகதை தொரியுமோ சாமி!

அகர வருக்கத் தொடக்கச் சொற்கள்  சகர  வருக்கத் தொடக்கமாக‌
மாறுகின்றன என்று சும்மாவா சொன்னோம் சாமியே.

எடுத்துக்காட்டுகள் நூற்றுக் கணக்கில் இருக்கலாம். பட்டியல் எமக்குத்
தேவையில்லை.

சந்நிதி சன்னிதி சன்னதி

சென்ற இரு நாட்கள் ஏதும் எழுதமுடியவில்லை. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு, நம் உலாவியும் ஓடவில்லை. எங்கோ பழுது ஏற்பட்டிருந்ததால் என்று நினைக்கிறேன்.

கோளாறு யாது என்று கண்டுகொள்வதில் நேரம் செலவாகிவிட்டது.

நிற்க,  இப்போது சன்னதி ‍ சன்னிதி என்ற சொல்வடிவங்களைப் பற்றித்
தெரிந்தின்புறுவோம்.

இரு சொற்களும் நாம் ஆலயங்களில் கேள்விப்படுவனவாகும்.

சன்னிதி என்பது அகர முதலாகத் தோன்றிப் பின் சகர முதலானது,

அ +  நிதி =  அந்நிதி > சந்நிதி > சன்னிதி.

அ = அங்கு, முன் இருப்பது.
அவை என்ற சொல்லும்  அகர முதலாக அமைந்து பின் சகர முதலானது
தான்.

நிதி என்பது:

நில் > நி. இது கடைக்குறை.

தி என்பது விகுதி.  நி = நிற்பது.

பெரியோர் அல்லது தெய்வச்சிலைகள் நிற்பிடம்.

தனித்தமிழில் இது  திருமுன் எனப்படும்,

இச்சொல்  பின் சன்னதி என்று திரிந்தது.

சந்நிதி  சன்னிதி  என்பன முதல் வடிவங்கள்.


வியாழன், 15 டிசம்பர், 2016

Valmiki Ramayana


Ramayana - The word `Sanskrit' occurs for the first time as referring to a language in the Ramayana : "In the latter [Ramayana] the term `samskrta' "formal, polished", is encountered, probably for the first time with reference to the language"
-- [ EB 22 `Langs', p. 616 ] It is to be noted that extant versions of the Ramayana date only to the centuries AD.
This paragraph was cited by author Shyam Rao writing on Sanskrit.
Valmiki was a Dalit and was the first great poet for Sanskrit..  He composed  the Ramayana.. He referred the language he was composing in as Sanskrit.  Previously the term was not in existence. A similar language that pre-existed was called Chandasa (  சந்த  அசை )  அதாவது சந்தங்களுக்கு  ஏற்ப  வாயசைப்பு ).
Valmiki was also a Tamil poet.  His poem exists in Puram.  Many of the names in Ramayana are of Tamil origin

Panini was a paNan  ( the minstrel caste )   also parayan and a great grammarian.


There are some bugs in this post.  We are looking into the problem


புதன், 14 டிசம்பர், 2016

அகர - சகர வருக்கத் தொடக்கச் சொற்கள்

அகர வருக்கத் தொடக்கத் தில்  வருஞ் சொற்கள் சகர வருக்கத் தொடக்கமாக மாறுமென்பதைப் பல இடுகைகளில் தெரிவித்திருந்தோம். அவற்றுள் பல பிறர் கள்ள மென்பொருள்களால் அழிந்தன.

அடுதல் = சுடுதல்,தீயிலிடுதல்.  இது  அடு+ இ = அட்டி என்று வரும்.
பின்னர் இது  அட்டி > சட்டி ஆயிற்று. இங்ஙனம்தான் பல சொற்கள்
சகர வருக்க முதலாயின.

அடு > அட்டி > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.


இலிர்த்தல் என்பது சிலிர்த்தல் என்று மாறுதலினி ன்றும் இதை அறியலாம்.

அண்டு > சண்டு  > சண்டை   என்பதும் காண்க .
அடு > அடி என்பதிலிருந்து  அடுத்தலின் விளைவே அடி என்று கண்டுகொள்க. இதுபோலவே  அண்டுதலில் விளைவது  சண்டை .

செவ்வாய், 13 டிசம்பர், 2016

படகு கவிழ்ந்தது;

படகு கவிழ்ந்தது;
பதைத்தெழுந்து மிதந்தோரைப்
பாதுகாக்கவில்லை, நாட்டு அதிபர்.
பாவம் அதிபர்.
பாய்ந்து நீரில் வீழ்ந்து
நீச்சல் அடிக்கத் தெரியவில்லை போலும்.

இனிமேல் நாட்டு அதிபர்களுக்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்.
சான்றிதழ் இருந்தாலே
தேர்தலில் நிற்கலாம்,,,

தென்கொரிய அதிபர் நிலை

பேதம் how formed

ஒன்றிலிருந்து பெயர்ந்து இன்னொன்றுக்குப் போகிறோம்.  அப்போதுதான் அதிலிருந்து இது வேறானது என்பது தெளிவாகிறது.
இருந்தபடியே இருந்துவிட்டால் ஏது வேறுபாடு, எப்படிக்காணப்போகிறோம், கூறுங்கள்.

பெயர் : பெயர்தல்.
பெயர் >  பெயர்+ து+ அம் =  பெயர்தம் > பேர்தம் > பேதம்.

பேச்சில் :  நகம் பேந்துவிட்டது என்பர்.   பேர்   >   ‍ பே

பேதம் என்றால் பெயர்ந்து நின்ற நிலையில் உணரப்படுவது.

வேறு >  வேற்றுமை  மற்றும் வேறுபாடு என்பதும் அதுவாம்

இங்கு  பே  என்பது சிலரால்  bE-tham என்று  எடுத்தொலிக்கப்  படுவதால்  இது தமிழ்  அன்று எனத்  தவறாக உணரப்படுகிறது /


examine கணிசமான

புதுசு,  பழசு என்பன பேச்சு வழக்குச் சொற்கள். இந்தச் சொற்களில்
சு என்ற இறுதிநிலை வருவது காணலாம்.  மனம் என்ற சொல் அம் விகுதியில் முடிந்தாலும் பேச்சு வழக்கில் சு விகுதியும் வழங்கும். ஆகவே மனசு என்று வருமேனும் இது பேச்சு வழக்கிற்கே உரித்தானதாக  வலம் வருகிறது. இலக்கணியர், மொழிநூல் மேடையினின்று நீங்கினவர்களாய், அதை விரும்பாவிடினும் எழுத்திலும் ஆங்காங்கு வரவே செய்வதுடன், பொண்ணு மனசு தங்கம் போன்ற தொடர்களில் மற்றும் திரைப்பாடல்களிலும் வரவே செய்கிறது. மொழி பலருக்கும் சொந்தமானது ஆதலாலும் இலக்கணியர் வாத்தியார்கள் ஆகியோரின் ஆதிக்கம் குறைந்த விரிந்த  இடங்களில் அவ் வடிவம் நல்லபடியாய் வரும்.

என்றாலும் பரிசு முதலிய சொற்களில் சு விகுதி வருவதுடன் பரிசம் என வரும் சொல்லில் அம் விகுதி ஏற்கிறது.

இதுவே போல கணித்தல்  என்ற வினையிலும் சு விகுதி வரும். சிலர் படித்தும்
வேலை இல்லாமல் இருப்பதுபோல்  கணிசு   என்ற சொல்  வேலையில்லாமல் இருக்க  அம்  விகுதி பெற்ற  கணிசம்  என்பதில் அது சொல்லாக்க  உதவியாக
உருத்து  நிற்கிறது/.

கணிசமான  உதவித் தொகை என்கையில்  அது திகழ்கிறது .

நெரிசல்  என்பதில் வரவில்லை?
இவளுக்கு ஒரே புடைசல்  என்னும்போது  சு விகுதி இல்லை ?

கரி + சு + அன் + அம்  =  கரிசனம்

பற்பல இடங்களிலும் தோன்றும் அழகான  விகுதியன்றோ இது ..........
  

முன்படித்த முதுபழசை......

முன்படித்த முதுபழசைச் சொல்லிச் சொல்லி
மூளைக்கோ அயர்வளிக்கும் ஆளே வாத்தி;
மண்துகளே படர்ந்திடினும் மாச கற்றி
மாண்புதனை வெளிக்கொணர்வான் ஆய்வு நல்லோன்!
பின்கண்டு பிடித்ததையும் பேணிக் கொண்டு
பிழைகளைந்து நிலையுணர்ந்து பேசு வோனே
முன்தவறு மறைப்பவனே மாற்றுக் காரன்
முனைப்பினையம் அழிப்ப்வனாம் புத்தாள் ஆவான்.

சனி, 10 டிசம்பர், 2016

தனிக்கட்டை வாழ்வினரும்

தனிக்கட்டை  வாழ்வினரும் கொலைப்பட்டே வீழ்வது
தாரணியிற்  புதிதாமோ  யாருமறி  நிகழ்வது!
பனிக்கட்டி வீழ்ந்ததில் பயணித்தார் மேலுலகம்
பணிசெய்து யர்ந்தோரும் பரவினார் பரனுலகம்
இனிக்கெட்டுப் போவதுவோ  இங்கொன்றும் இல்லையடி
இலதேதான் உளதாகும் உளதேதான் இலதாகும்
உனைக்கட்டிப் பிடித்தானும் உய்வதுவும் அவண்தானே
எனைத்திட்டி மகிழ்ந்தானும் எங்குவேறு சொல்வாய்நீ

ஈடற்ற  இணைபிரியா  இன்பத்துத்  தோழியெங்கே
ஈண்டிருந்து செல்கையிலே எங்குசென் றவள்காண்பேன்?
ஆடற்ற கொட்டகைக்குள் அவள்தனியே நான்வெளியே
ஆறுதலைத் தேடுவளோ அழுதுபுலம் பிடுவாளோ
கேடற்ற இடமில்லை கேடென்றும் யாதுமில்லை
கெடுதலொடு படுதலுமே கெடுமாந்தன் உடுதலையில்
வாடென்று வற்றினனோ வாழ்விதுவே வெற்றடையே
வாய்மையுணர் வெய்துவளோ   வாழ்வினிதே யாவினுமே

There was an unexpected blackout at the time of posting.  Some errors have now been
rectified at 6,54 pm.  Shall review autocorrect changes later.
  

வெள்ளி, 9 டிசம்பர், 2016

" கௌதம" - விளக்கம்

இப்போது கௌதம என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

இதற்கு,  முன் பலர் விளக்கம் அளித்துள்ளனர், இச்சொல் புத்தர் காலத்திலும் அதற்கும் முன்பும் துணைக்கண்டத்தில் வழக்கிலிருந்தது  என்பது நீங்கள் அறிந்ததே.

 எனவே இதற்கான பழமை விளக்கம்:  கொ> கௌ:  கூரிய ஒளி;  தம = இருள் என்பதாம். ஒரு கூட்டுச் சொல்லுக்கு பெரும்பாலும் இப்படிப் பொருள்சொல்வது தமிழில் இல்லை. தமிழில் "இருளில் ஒளி" என்று சொல்லலாம் ,. இருள் ஒளி என்றோ ஒளி இருள் என்றோ சொன்னால் தெளிவில்லை.

தமிழில் கூரிய ஒளி என்பதற்குக் கூர்மை "கூ"விலேயே தொடங்குகிறது.  இந்தக் கூ என்னும் சொல், பிற மொழிகளில் கோ, கௌ என்று திரியக்கூடும்.

ஒளிக்கு  அடுத்துள்ள சொல்   "தம"  ,   " இருள்"    என்று   இதற்குப் பொருள் உரைப்பதினும் தமிழ் வினைச்சொல்லாகிய தமக்குதல் என்பதன் "தம" எனக்  கொண்டு ,  " நிரப்புதல்" என்று பொருள்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். கூரிய தம் ஒளியை ‍,  அறிவை, -    நிறைத்தல், நிரப்புதல்   (அதாவது எங்கும் பரப்புதல் )   என்று  கொள்ளலாம்.
கௌதம என்பதற்குப் பொருள்கூறிய புத்திமான்கள் தமிழைக் கவனிக்காமல் கூறிவிட்டுப் போய்விட்டார்கள். "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்" அல்லவா?

கௌதம என்பதற்கு முற்றிலும்  தமிழில் பொருள் சொல்ல வேண்டுமானல்,

கோ = ‍ அரசன்; தமன் = ‍ நம்மவன் என்று பொருள் சொல்லலாம்.  ஆக  கோதமன் ஆகும். அரசன் நம்மவன் என்று பெருமைப்படச் சொல்வதானால் அவன் அறிவாளியாக இருந்தால்தான் சொல்வோம்.  அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவரைத் தானே   "நம்ம வீட்டுப் பிள்ளை " என்கிறார்கள்.   முட்டாளை யாரும் உயர்த்துவதில்லை.  ஆகவே கோ எனின் அறிவாளி என்பது  ,   பெறப்படும் பொருள்   derived meaning   ஆகிறது.


கௌதம என்பது முன் குடும்பப் பெயராய் இருந்தது என்று வரலாற்று
நிபுணர்கள் கருதுவர்.  கோ+ தமர்,  எனவே. "நாம் நம் அரசரின் பிள்ளைகள்" என்ற இயல்பான குறிப்பிடுகையில் இருந்தே இது
தோன்றியிருக்கவேண்டும்.  மிகப் பெரிய கூரிய சீரிய ஒளி என்பதெல்லாம் புலவர் நடைக்கு ஒத்தது.  பிறகு பிறகு உணரப்படுவது. குடும்பப் பெயராய்த் தோன்றுவதற்கு "  நாம் நம் அரசரின் குடி" என்று சொல்லிக்கொள்வதே  பொருத்தம் ஆகும்.  குடியினர்க்கு வேற்று அரசின் ஒளி வந்து சேர்ந்து அதை அவர்கள்  உணர்வது ஓர் அரிய நிகழ்வாகும்.  அது குடிப்பெயராகவும் வாராது.

இதிலிருந்து  கௌதம்  கௌதமன் ,  கௌதமர் ,  கௌதமி , கோதமன்  என்ற பல்வேறு வடிவங்களும் எத்தன்மை உடையவை என்பது சற்று தெளிவாகி இருக்கும்.

edit feature not available.  cursor misbehaved.  Will edit later





வியாழன், 8 டிசம்பர், 2016

காற்றுப்பை, வெறுத்துவெடித் தாலுமென்ன?



இருள்கவிந்த அறையினுள்ளே
பொருளகங்கள் மெதுநடனம்;
எரிமலைகள் தெரிகின்றன‌
வெளிப்புறத்தில் தொடர்வனவாம்.
யாதுநடந்  தாலுமென்ன?
எமதுறக்கம் கலைந்திடுமோ?
பருத்ததொரு காற்றுப்பை,
வெறுத்துவெடித் தாலுமென்ன?

காற்றுப்பை, வெறுத்துவெடித் தாலுமென்ன?

இருள்கவிந்த அறையினுள்ளே
பொருளகங்கள் மெதுநடனம்;
எரிமலைகள் தெரிகின்றன‌
வெளிப்புறத்தில் தொடர்வனவாம்.
யாதுநடந்  தாலுமென்ன?
எமதுறக்கம் கலைந்திடுமோ?
பருத்ததொரு காற்றுப்பை,
வெறுத்துவெடித் தாலுமென்ன?

புதன், 7 டிசம்பர், 2016

அத்தியாயம்

அத்தியாயம் என்ற சொல்லை முன் விவரித்ததுண்டு,

அற்று =  அத்து.
இயையம் =  இயாயம்

முடிந்து சென்று சேர்ந்து நூலுடன் இயைவது.

ஒரு பகுதி முடிந்து (  அத்து)  பின்பு நூலுடன் இயைகிறது.

அத்து + இயாயம் ‍=  அத்தியாயம்

இப்படி ஒரு சொல்லை அமைத்த அல்லது புழங்கிய பாணினி  ஒரு பாணன். இன்று அவன் பறையருள் அடங்குபவன் .  வால்மிகி  முனிவனும் தலித்து  என்பவனே.  பாணினி  சிவத்தைப் போற்றியவன் ;

மேலும் அறிக:

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_3362.html

நேத்திரம் - கண்

நேத்திரம் என்ற சொல் கண்னைக் குறிப்பது.

ஓர் ஒலி புறப்பட்ட இடத்திலிருந்து செவிகளை வந்து எட்டி விடுகிறது.
பின்னிருந்தும் பக்கத்திலிருந்தும் முன்னிருந்தும் வரலாம்,

ஒளி என்பது நேராக வந்து கண்ணை அடைகின்றது,  அது கோணலாக‌
வர முடியுமானால் பின்னிருப்பதை நாம் காண இயலுமே.  அப்படி
இயல்வதில்லை.

அதனால் கண்கள் நேராகவே காணும் திறம் உடையவை.

இத்தகைய ஒரு வரம்பு செவி மூக்கு இவற்றுக்கு ஏற்படவில்லை.

நேர்த் திறம் உடையது நேத்திரம் ஆயிற்று,

இங்கு சில சொற்களில்போல் ரகர ஒற்று மறைந்தது.



சோ மறைவு துயர்

எழுத்தாளர் பத்திரிகைப் பண்பர் நடிகர்
வழக்கறிஞர் வாய்மொழி வல்லார் == அழுத்தமுற‌
எண்ணிய  பின்னிடா ஏற்ற கருத்தாண்மை
மன்னிய சோமறைவு மாதுயர் ‍=== விண்ணடைந்த‌
இந்நாள் அவரான்மா எய்துக நல்லமைதி
முன்நாள்  இனிவருமோ  முன் . 

will edit


செவ்வாய், 6 டிசம்பர், 2016

சேமித்தல் நேமித்தல்

சேர்த்தல் என்ற சொல்லினின்று தோன்றியதே சேமித்தல் என்பது.
சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று மறைந்தது,  எனவே சேமித்தல் ஆயிற்று.  சேமி >  சேமிப்பு,

இதுபோன்றே நேர்மித்தல் என்பதும் நேமித்தல் ஆனாது.
நேர்மித்தலாவது ஒன்றை முறைப்படி  அமைத்தல். நியமித்தல் என்பது ஒன்றை நிற்கச்செய்தல்.  நில் >  நி  >  நி அ > நிய  (அங்கு நிலைபெறச் செய்தல்.) வேறு அடியினின்று தோன்றியது.

இதை விளக்கியிருந்த இடுகைகள் இங்கு இலவாயின, இவை 2007 ஆண்டில் வெளியிட்டவை என்று நினைக்கிறேன்,

திங்கள், 5 டிசம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதா - இரங்கல்

கவலைக் குரித்திடம் கடந்துவந்து
கனிவாக முன்போலே கையசைத்து
நவிலும் நற்சொற்கள் தாமுதிர்த்து
நாட்டினை ஆள்கவே தலைவிஜெயா.

கவலைக் குரித்திடம்  = கவலைக்கு உரியவிடம்
நவிலும் = சொல்லும்  (எப்போதும் சொல்லும் )


-------------

அம்மாவை இழந்து வாடும்  தமிழக மக்கட்கு எமது  ஆழ்ந்த இரங்கல்  உரித்தாகுக 

Some third party had hacked this post and
made some changes. It has been reedited to
the original text.  7.3.2017

மாஜி என்ற சொல்

நாம் சில தாளிகைகளில் அவ்வப்போது காணும்    ஓர் உயிரோட்டமுள்ள சொல் என்னவென்றால் அதுதான்  மாஜி என்ற சொல்.  அதற்கு இணையான அல்லது மேலான நல்ல தமிழ் : "முன்னாள்" என்பது,   இதை நீங்களும் பிறருக்குச் சொல்வதுண்டன்றோ?

 இறைவன் என்ற சொல்லில் சில மாற்றங்கள் செய்து ஈஸ்வர், ஈஸ்வரன், ஈஷ்வர் என்ற சொற்களையெல்லாம் படைத்து வெற்றி கண்ட நாம்,  றகரம் முதலிய வல்லெழுத்துக்களை வடவொலிகள் என்று சொல்லப்பெறும் ஒலிகள் மூலம் ஈடுசெய்து  வெற்றிகண்டது போலவே, மாஜி  என்ற சொல்லிலும் இன்னும் பலவற்றிலும் செய்துள்ளோம்,  இறைவன் >  இஷ்வர் >  ஈஷ்வர் > ஈஸ்வரன் என்பவை முன்னர் விளக்கப்பட்டவைதாம்.

ஒருவன் ஒரு வேலையிலிருந்து மாறிச்சென்று விட்டால் இப்போது அவன் அந்த வேலைக்கு மாஜி ஆகிவிடுகிறான்.  மாறிச்சென்ற எழுத்தன் (குமாஸ்தா)  இப்போது மாஜி  குமாஸ்தா அல்லது எழுத்தன்
எனப்படுவது வழக்கு. முன்னே கவிஞன் இன்று மாஜிக்கவிஞன்!!

இந்த மாஜியில் எந்த மந்திரமும் இல்லை;

மாறி என்பது மாஜி ஆயிற்று.

றி என்ற வல்லெழுத்து ஜி ஆனது மகிழ்ச்சிதான். மதுரை மஜிரா
ஆனதும் மகிழ்ச்சிக்குரியதே.

will edit. Read ஜீ  as   ஜி .  cannot effect changes or amendments presently.

குமாஸ்தா  gumashta   Urdu



ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பங்களோ

பங்களா என்ற ஆங்கிலச் சொல், வெள்ளையர்கள் இந்தியா வந்தபின்
அமைத்துக்கொண்ட அல்லது உருவான சொல் என்பர். இது ஆங்கில‌
சொல் நூலாரின் முடிபு.

இதற்கு மூலமாக அமைந்தது பங்களாவு என்ற மலையாளச் சொல்.
காழ்ச்சை பங்களாவு என்ற மலையாளச் சொல்லமைப்பு,  கண்காட்சி
சாலையைக் குறிக்கும். காழ்ச்சா ‍=  காட்சி.

பல பங்குகளாக ஆனால் இணைத்து உருவாக்கப்பட்டு,  ஒரு விரிந்த‌
பரப்பை அளாவி நிற்பதால்  பங்கு+ அளாவு  ஆயிற்று.  இது
வங்காளத்தில் இருந்த மலையாளிகள் வாயிலாகப் பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.  பல அறைகள் அல்லது பங்குகள்  இணைந்து அளாவி நிற்பது.  பங்களாவில் பல அறைகள் இருத்தலும்  அது பெரிதாக (அளாவி ) நிற்றலுமே
மக்கள் கருத்தைக் கவர்கிறது.

பங்களோ என்பதில் பங்காள் முதலாயின் ஓ என்பது பொருள்பெற்றதாய் இல்லை.

இசு > இச்சை

மனம் இழுக்கப்படுவதே இச்சை. உண்மையில் மனம் என ஒன்று உள்ளதா என்பதைப் பலர் ஆய்ந்து இல்லை என்பர். இல்லைதான்,
ஆயின் அப்படிக் கொள்வது மொழிமரபும் மக்கள் பண்பாடும் ஆகும்.
இருதயம்  (ஈர்+து+ அ+(ய) + அம் )  என்பது அரத்தம் அல்லது குருதியை ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் ஓர் உறுப்பு.  ஈர் = இங்கு
இழுத்துக்கொள்வது;  அ = அங்கு செலுத்துவது.  இப்படி இச்சொல்லை அமைத்துள்ளனர் இவ் அறிவாளிகள்.

இழு என்பது இசு என்று திரியும்.  இசு + வு = இசிவு.  உகரம் கெட்டு ஓர் இகரம் தோன்றிற்று. வகர ஒற்று உடம்படு மெய். இசிவு ‍ இழுத்தல்.

பசு > பச்சை.  சகர இரட்டிப்பு,
இசு > இச்சை.  இதுவும் அங்ஙனம் கட்டமைந்த சொல்.  இறுதி ஐ ஒரு விகுதி.    கொலை என்பதில் கூட ஐ இருக்கிறது. கொல்+ஐ
கொலை.

இது முன் எழுதப்பட்டு அழிபட்டதால், உங்களிடம் இருந்தால்
அனுப்பிவைக்கவும். நன்றி

ஆசை மனம் அசைவு

ஆசை என்ற சொல்லை முன் விளக்கி யிருப்பினும், அது  திருடர்களால் அழிக்கப்பட்டது.   பின் எழுதியது இன்னும் உள்ளது.

மனம் ஒன்றை நோக்கி அசைவதே  ஆசையாகும்.   அசை > ஆசை. முதனிலை திரிந்த தொழிற்பெயர். முதல் எழுத்து நீண்ட சொல்.
சுடு > சூடு என்பதுபோல.

மன அசைவு  பொன்னைப் பற்றியோ பொருளைப் பற்றியோ  இருக்கலாம். அல்லது பூமி பற்றியதாக இருக்கலாம். மனம் "ஆடாமல் அசையாமல் " இருப்பதானால், ஆசை இல்லை என்று பொருள்.

ஆசை ‍ அகரச் சுட்டடிச் சொல்.

சனி, 3 டிசம்பர், 2016

கம்பு கொம்பு. கொடும்பு

பெம்மான் என்ற பதத்தைப் பாருங்கள். இதில் பெம் என்பதென்ன? பெரும் எம்ற முன் துண்டுதான் பெம் என்று திரிந்துள்ளது. "பிறவா வரம் தாரும், பெம்மானே, தப்பிப் பிறந்திடினும் உனை மறவா வரம் தாரும்" என்று பத்திமான் (பற்றுமகன் > பற்றிமான் > பத்திமான் > பக்திமான்) பாடி இன்புறுத்துவான். மகிழ்ச்சிதான் அன்றோ?

இதில் யாம் சொல்ல விழைந்தது அதுவன்று. பெரும் என்பதில் ருகரம் தொகுந்து பெம் ஆயிற்று என்பதுதான்.

அம்மணி என்ற சொல், அருமணி என்பதன் ருகரம் ஒழிந்த சொல்.
அருமணி என்றே இருந்திருந்தால், செந்தமிழ் அழகாகவே இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அம்மணி என்பதும் அழகுதான். பச்சைப் பாலும் காய்ச்சின பாலும் எல்லாம் இனிமைதான். எதை உண்டு பழகியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது அதுவாகும்

அம்மை (அம்மா) + மணி  =  அம்மணி ஆனது என்று நினைக்கலாம்.

கருமம் என்பதும் கம்மம் என்றாகும். ருகரம் ஒழியும்.

கம்முதல் என்பது ஒளி குறைதல். அதாவது ஒளி குறைதல். அதாவது வானம் ஒளி குறைதல். கருப்பு ஆதல். கருமுதல் > கம்முதல் என்பது தெளிவு. கம்மி > ஒளி குறைவு, குறைவு.
ஆகாயம் கம்மிக்கொண்டு இருக்கிறதென்பது கேட்டிருக்கலாம்.

இடையில் ரு ஒழிவதுபோலவே, டுகரம் கூட ஒழியும். கடும் > கம் > கம்பு. கடினமான தானியம். இதுபோலும் பிற இடைக்குறைகளைப் பின்கவனிப்போம்.

கொடு  +  பு  =  கொடும்பு  >  கொம்பு.    கொம்பு  என்பது வளைவு  குறிக்கும் சொல். கொடும்பு  பலபொருட் சொல்.  அது கன்னத்தின் உட்புறமும் குறிக்கும் .
"குடித்த பால் கொடும்பில் இருக்கிறது "  என்பது பழமொழி .

கொடும்பு  >  கொம்பு. இங்கு டு  ஒழிந்து  சொல்  பொருள் மாறிற்று .

டகரம் பிறமொழிகட்குச் செல்கையில் குறையும் அல்லது ஷ என்று
மாறும். பீடு > பீடுமன்> பீஷ்மன். (பெருமிதத்திற்குரிய மன்னன்).
பீடுமன் > பீமன் என்று டுகரம் மறையும். பின்னர் அது வீமன் என்றுமாகும்.



வெள்ளி, 2 டிசம்பர், 2016

சொ ல் : கம்பீரம்

கம்பு முதலிய தானியங்களை அவற்றை ஈரமாக்கியே பின் குத்திச் சமைக்கவேண்டும். ஆகவே கம்பீரமென்பது  பயன்பாடு உள்ள நிலைமையைக் குறிக்கிறது,  அது தயார் நிலை என்று சுருங்கச் சொல்லலாம். காய்ந்த கம்புபோல் இருப்பதானது பயன்படுத்தத் தயார் நிலையில் இல்லாமையைக் குறிக்கும்.

இந்தச் சமையற் கட்டுச் சொல்  பின் பிற நிலைமைகளையும் தழுவி.
நின்றதுடன், அயல் மொழிகளிலும் பரவிற்று. கம்பு என்பது தமிழகத்தில்
நீண்ட காலமாகப் பயன்கண்டு வரும் ஒரு தானியமாகும்.  தோற்றம் சாயல்  முதலியவற்றையும்  இச்சொல் பின்னர் உள்ளடக்கிற்று, .

தானியமாவது, தான் உணவாக்கிக் கொள்வதற்காகச் சேர்த்து வைத்துள்ள தாவரப் பொருள். இது கூலமெனவும் படும். ஆங்கிலத்தில் தன் உடைமை என்று பொருள்படும் பெர்ச்னால்டி அல்லது பெர்சனல் சாட்டல்ஸ்  personalty and personal chattels  போலும்  ஒரு சொல்லாகும்.
தான் இயங்கத் தேவையான விளை  உண்பொருள் தானியமாயிற்று என்க.
இது காரண இடுகுறி.

கம்பு +  ஈரம்  =  கம்பீரம்

ஈர்ப்பு உடைய  கம்பு  எனினும்  ஏற்கலாம் .

கம்பு  என்பது திண்மைக்கு  எடுத்துக் காட்டு.   கம்பன் என்ற பெயரும்  திண்ணவன்  என்று பொருள் தருவதே . நொய்  நொய்ம்மை என்பன  திண்மை இன்மைக்கு  அறிகுறி ஆவன .

பெரிதும் மழைச்சார்பு இல்லா இடங்களிலும் வளர்வது கம்பின் திண்மை ஆகும்/


வியாழன், 1 டிசம்பர், 2016

புலவர்களும் குலங்களும்

புகழ்ப்பெற்ற பெரும்புலவர்களும் அவர்களின் குலங்களும்.

தொல்காப்பியன்    பிராமணன் (தொல்காப்பியம்)
வேத வியாசன்  ‍   மீனவன்   (மகாபாரதம்)
வான்மீக முனி     தலித்து.   (இராமாயணம்)
சாணக்கியன்       சாணான்   (அர்த்தசாத்திரம்)
பாணினி           பாணன்    (வடமொழி இலக்கணம்)
கம்பன்             உவச்சன்   (கம்ப இராமாயணம்)
ஒட்டக்கூத்தன்     செங்குந்தன் ( தக்கயாகப் பரணி)
இளங்கோ அடிகள்  அரசகுலம்  (சிலப்பதிகாரம் )
சாத்தனார்          வணிககுலம் ( மணிமேகலை.)
திருத்தக்கர்           சமண தேவர்   (சீவக சிந்தாமணி )
மாமூலர்           இடையர்   ( திருமந்திரம் )  சிவயோகி
பதஞ்சலி  1         நாகர் (நாக தீபம் )           ( யோகசூத்திரம்)  சிவயோகி

1 .பாத + அஞ்சலி =   பதஞ்சலி   நாக தீபம் - இலங்கை      .பதம் = பாதம்
It appears many other unknown authors also used this name to publish their works..    

Any further information pl forward.
Some wish to know these details.

முரு > முறு அடிச்சொற்கள்

முரு > முறு  அடிச்சொற்களிலிருந்து,  

முரு  >  முரடு > முரண்டு > முரண்டுதல்.

 முரண்டுதல் என்பது எதற்கும் இசைந்து செல்லாமையைக் குறிக்கிறது. பெரும்பாலும் இது செய்வோர் குணத்தில் முரடாக இருப்பவர்கள். இசையாமையை முரண்டுதல், முரண்டு பிடித்தல் என்ற வழக்குகள்
காட்டுகின்றன,

முரி <>  முறி.

இது முரித்தல் என்றும் முறித்தல் என்றும் வேறுபாடின்றி எழுதப்படலாம்,  ஒடித்தல் என்பது இதன் பொருள்

அகத்து முரி  என்ற வழக்கில்  முரி  பாலைவனமாகும்.

மருந்து அல்லது உணவில்  ஒன்று இன்னொன்றுக்கு "முரிவு " கொடுக்கும் என்பது  கேள்விப் பட்டிருக்கலாம் .

முருடன்  =  முரடன் .

முறுக்குதல் என்பதும் ஓடித்தல் , மாறுபடுதல் என்று  பொருள் தரும்.

இந்த அடிச்சொற்கள் (முரு. முறு  என்பவை )  வலிமை என்ற  மூலப்  பொருளைக் கொண்டவை என்பது இதன் மூலம் தெரிகிறது.

புதன், 30 நவம்பர், 2016

Love words in Tamil

மோகம் என்ற சொல்லின் அடி.  மோத்தல் அல்லது மோந்து பார்த்தல்
என்பதில் அடங்கியுள்ளதென்பது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இங்கும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டது. இப்  பொருட் காரணம் என்னவென்றால், இயற்கையில் விலங்குகள் மோந்துபார்த்தே இணைசேர்கின்றன என்பதுதான்.  மனிதன் நாகரிகம் அடைந்து, மோப்பத்தினால் தன் துணையை அடையும்  இயற்கை நிலையிலிருந்து வெகுதூரம் வந்திருக்கலாம்.  இருப்பினும் அவன் மொழியில் உள்ள‌ சொற்கள் அவனைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன,

இது உண்மையா என்று நீங்கள் ஐயுறலாம்.  பழங்காலத்தில் மனிதன்
மரப்பட்டையை இடுப்பில் அணிந்து மானத்தைக் காத்துக்கொண்டான்,
அது சீரை எனப்பட்டது.  பின் துணி நெய்யக் கற்றுக்கொண்டு ஆடைகள்
அணிந்த காலத்தில் சீரை என்ற சொல் சீலை, சேலை என்றெல்ல்லாம்  மாறிவிட்டாலும் அவன் மொழி அவன் முன் நிலையைக் காட்டிவிடுகிறது. ரகர லகரப் பரிமாற்றமுடைய சொல் திரிபுகள்.

காமம் காதல் என்பன காத்தல் அல்லது காவல் வழங்குதலை முன் காலத்தில் குறித்தன.  ஒருவன் தன்னையும் தன் குடும்ப உறுப்பினரையும் காக்கும் கடமையையே மேற்கொண்டான். இதற்கு மாறாக அவன் பிற குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதப் பிறவியைக் காக்க‌ முனைவது   பெரும்பாலும்  அவன் காதல் வயப்படும்போதுதான். தான் விரும்பிய ஒரு பெண்ணை   (அல்லது ஆணை )ப்  பிறனுக்கு விட்டுக்கொடுக்காமல் காவல் செய்கின்றான்( ள் )..
மொழியில் காதல் காமம் என்பனவெல்லாம் காவல் குறிக்கும் கா என்பதிலேயே அமைகின்றன. இச்சொற்களில் காவல் பொருள் மறைந்து பிற்காலத்தில் உடல் உணர்ச்சி, மன உணர்ச்சி பற்றிய "பொருள் நிறங்கள்"  ஏற்பட்டன.  ஆனால் காப்பது காதலியை என்ற காவற்பொருளை முழுவதும் மறைத்துவிட முடிவதில்லை.

பிரேமை என்ற சொல்லோ நேரடியாகவே இதைத் தெரிவிக்கிறது.
பிற = இன்னொரு குடும்பத்தின் பிற பெண்ணை அல்லது ஆணை , ஏமை =  காத்து மேற்கொள்வது என்பது தெளிவாம். ஏம், ஏமம் : காத்தல்.  பிற என்பது ற > ர என்றானது.   பிரேமை ஆனது.


செவ்வாய், 29 நவம்பர், 2016

நிஷ்டை

நிட்டை என்ற சொல்லின் அமைப்பைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

நீள் என்ற சொல் நீளுதல் என்று வினைவடிவம் கொள்ளும்.
நீள் > நீடு என்றும் மாறி நீடுதல், என்று தன்வினையாகவும்
நீட்டுதல், நீட்டித்தல் என்று பிறவினையாகவும் வரும்,

ஞானும் நீயுமாக ~  ஞானியாக ~  இறையும் தானுமாக நெடு
நேரம் அமர்ந்து மனம் நிலைநாட்டி இருப்போன் தானிருக்கும்
நேரத்தை நீட்டிக் கொள்கிறான். அவன் நினைப்பது என்ன
என்பது அவன்மட்டும் அறிந்தது.  அவனைப் பார்ப்பவர்கள்
அறிவது ஒரு புற்றுக்குப் பக்கத்தில் ஆடாது அசையாது
கண்மூடி அமர்ந்திருப்பது.  இவற்றிலும் அவன் இருக்கும்
நெடு நேரமே கவனிப்போர் அறிந்துகொள்வது.  ஆகவே
அவன் நிட்டையில் இருக்கிறான் என்றனர்.

நீடு > நீடை > நிட்டை அல்லது நீடு > நிடு >
நிட்டை ஆகும்.  நீ என்ற‌ முதலெழுத்து நி என்று
குறுகியது.@   நீட்டு > நீட்டை > நிட்டை  எனினுமாம்
தன்வினையில் தோன்றியதாகக் காட்டினும்  பிறவினையில்
தோன்றியதாகக் காட்டினும் மூலம்  ஒன்றே.  கால் கைகளை
ஒடுக்கினாலும்  நேரத்தை நீட்டிக்கொண்டு  அமர்ந்திருப்பது.   
மக்கள் கவனத்தை ஈர்த்தது    அதுவே. நேரச் செலவு .

இங்கு இங்ஙனம் குறுகல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது,
சாவு >  சாவம் > சவம் என்று குறுகினாற் போல.
முன் இடுகைகள் காண்க.

கடு அம் கட்டம் கஷ்டமானது போல நிட்டை நிஷ்டை
ஆகி இந்தோ ஐரோப்பிய ஒப்பனை அழகு பெற்றது
உணர்க,

=================================================

@கூடு  :>   குடி    ( கூடி  வாழும் மக்கள் )  (  குறுக்கம் )
@கூடு   >   குடு  >  குடும்பு  >  குடும்பம் ,
குடும்பி   இதுவும்  குறுக்கம் .

will edit

ல் > று இரண்டு எடுத்துக்காட்டுகள்

தொடர்ந்து லகர மெய்யீறு கொண்டு முடியும் சொற்கள், றுகரத்தில்
முடிவதை மேலெடுத்துச் செல்வோம். முன் இடுகையில் இரண்டு
உதாரணங்கள் தரப்பட்டிருந்தன.

http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_44.html

அல் என்பது அன்மை அல்லது அல்லாமை குறிக்கும். இந்த அடியிலிருந்து, அன்று, அல்ல, அல்லது, அல்லன், அல்லை, அல்லள் , அல்லாய், அல்லோம், அல்லோன் என்றெல்லாம் பல‌ வடிவங்கள் தோன்றி மிளிர்கின்றன. இவைகளில் ஒவ்வொன்றையும் ஒரு சொல்லாகக் கருதி தமிழ்மொழி முழுவதுமுள்ள சொற்களை அப்படியே எண்ணினால் சொற்களின் தொகை பெருத்துவிடும். அதனால் என்ன?

அல் என்பது அறு என்று வரும். இது நல் > நறு போலவேதான். முன் இடுகையின் விளக்கம் காண்க.

அல்லாதது  அற்றது என்பவை சொல்லாக்கத்தில் ஒன்றுக்கொன்று
கருத்திலும் சொற்றிரிபிலும் உறவுகொண்டவை. அற்றது அல்லாதது
ஆகும்.  அல்+து =  அற்று.   அல் > அறு >அறுதல்.   அல்லாதது
ஆதல். வெட்டி வீசப்படுவது அல்லாதது,  அறுபட்டது. மறுக்கப்பட்டது.

இல் என்று லகர மெய்யீற்றில் முடிந்த சொல், இறு என்றும் திரியும். இறு ‍~  முடி;  இறுதல் ~ முடிதல்.  மெய்யீற்றில் முடிந்த என்னாமல் மெய்யீற்றில் இற்ற என்றும் சொல்லலாம். தூர் இற்றுப் போய்விட்டது
என்று கேள்விப்பட்டதுண்டா?  இறு >  இற்று என்று எச்சமாதல் அறிக.

இந்த வடிவங்கள் வாக்கியங்களில் கையாளப்படுத்லைக் கண்டு
பல்வேறு பொருட் பரிமாணங்களையும் உணர்க. பரிதல்: புறப்படுதல்;
மாணுதல் ‍ சிறத்தல்.  பரி+ மாண் + அம் ‍:  வெளிப்பாடு சிறத்தல்
என்று பொருள்.

தலைப்பு :    ல்  > று   இரண்டு  எடுத்துக்காட்டுகள் 

திங்கள், 28 நவம்பர், 2016

லகர மெய்யீறு றுகர மாகும்

பல தமிழ்ச் சொற்கள் லகர மெய்யில் முடிகின்றன.  மிக்க எளிதான‌
எடுத்துக்காட்டு:  நல் ~ நறு என்பதாகும்.  நல் (  நல்மணம் ‍~ நறுமணம்.

நல்மணம்  :   நறுமணம்.
மணம் =   மணம் (இருசொற்களிலும்),
ஆகையால்  நல் =  நறு.

இனி இன்னொரு சொல்:

பல் : பறு

நறு என்று ஒரு சொல் இருப்பதுபோல், பறு என்ற சொல் இல்லை.
ஆனால் இருந்திருக்க வேண்டும்.

பறு >  பற்று.  றகர இரட்டிப்பு.
பறு > பறி. இகர விகுதி பெற்று ஒரு சொல்லாய் அமைந்தது.
பறு > பாறு > பாறை. பற்றி இறுகியது.
பாறு :  பாறுபடுதல்.

இப்போது  பல் என்பதன் பொருள் விளங்குகிறது;

ஈறுகளைப் பற்றிக்கொண்டிருப்பது பல்.
அதுமட்டுமன்று, ப என்று தொடங்கும் சொற்கள் பல, பட்டையாகவும்
உள்ளதைக் குறிக்கும்.

பல்லி : சுவரைப் பற்றிக்கொண்டிருப்பது. சுவர் பட்டையானது.

புல் > புல்லுதல் : பொருந்துதல்.

புல் > பல். புல் என்பது மூலம்

will edit

.



 






ரூபாய்மாற்றிப்பின்

(உ )ரூபாய்மாற்    றிப்பின்     (உ )ருசியும் உணவுமென‌
ஆபாயும் வேகத்தில் ஆட்களும் ====  நேர்பாய
நாடெங்கும் பேரமளி நாடாளு மன்றிலுமே
பாடென்று பாடேன் கிளி.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

தள் தாள் தளபதி. தாளம் இராவணன்

தாள் என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு. எனவே வாக்கியத்தில் அது
எப்படிப் பயன்பாடு காண்கிறது என்பதை யறிந்து என்ன பொருள் என்று
தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.  "தாள் பணிந்தேன்" என்று பாடலில்
வந்தால், கடுதாசியைப் பணிந்தேன் என்ற பொருள் கொள்ள வாய்ப்பு இல்லை.


பூண்டுத் தோலையும் கூடத் தாள் என்னலாம். வளரும்போதே ஒன்றிலிருந்து தனியாக வெளிப்பட்டு நீண்டு  அதை மூடிக்கொண்டிருப்பது தாள் என்றும் சொல்லப்படும். சோளத்திலும் தாள் மூடிக்கொண்டிருக்கும். வாழைக்குலையிலிருந்து தனியாகி அதை மூடிக்கொண்டிருப்பது தாள் ஆகும்.

சொல் : தள்ளுதல் .
தள் (அடிச்சொல்).   > தள்ளு.  (உகரச் சாரியை).
தள்ளுதல் ‍ :  தள் என்பதினின்று தோன்றிய வினைச்சொல்.   தல்: விகுதி.
தள் > தள்ளல்.  ( அல் விகுதி).

தள் > தாள். ( ஓர் இடத்தினின்றும்  தள்ளப்படுவது.  என்றால் வெளிப்பட்டு நீண்டு வளர்ந்தது என்று பொருள் ).

தொடையினின்று நீண்டு சென்று இறுதியில் வெளித்தள்ளியது  தாள்.
தள்> தாள்.  கணுக்காலுக்குக் கீழுள்ள உறுப்பு,

தள் > தள்ளை:  தாய்.  வளர்ச்சி பெற்ற கருவை வெளித்தள்ளும் தாய்.
வெளித்தள்ளுதலே இதில் மூலக்கருத்து.

தள் > தாள் > தாளம்.

உடலில் ஏற்பட்டு உணரப்படும்  இசையசைவு, கால் (தாள்) மூலமோ. கைகள் மூலமோ வெளித்தள்ளப்படுகின்றது.  அளவசைவுக்கு ஏற்ப கையோ காலோ மற்றொரு பொருளில் மோதித்  தாளம் உண்டாகிறது.  மோதுதல் here means coming in contact. Not necessarily a violent contact or collision. Please note to understand.
தாள்கள் தரையில் மோதுவதும் விரல்கள் மதங்கத்தின்மேல்  (மிருதங்கம்) மோதுவதும் தாளம் என்ப்படுகிறது.

மோதுதலே தட்டுதல்.

தள் + து = தட்டு > தட்டுதல்.  இது தள் என்பதில் தோன்றிய இன்னொரு வினைச்சொல். தள் என்பது வினையும் பெயரும் ஆகும். ஆனால் கால நீட்டத்தினால் (தொன்மையினால்)  அது இன்று தன்
வினைச் செய்கையையும் பெயர்ச் செய்கையையும் (functions ) வெளிப்படுத்தவில்லை.

யாப்பியலில் வரும் தளை என்பதும் தள் என்பதன் விரிவுப்பொருளே. இதைப் பின் காண்போம் .

யாம் சொல்ல விழைந்தது தளம் என்ற சொல்.

தள் > தளம்.  (அம் விகுதி).
தள் > தாள் > தாள்+ அம் = தளம். ( தா  என்ற முதல் எழுத்து  "த "  என்று குறிலானது .)

இரு வழிகளிலும் இதை விளக்கலாம். தள் என்ற அடிச்சொல்லுக்கே சென்று அம் விகுதி சேர்த்துத் தளம் என்பதை அறியலாம். சாவு+அம் = சவம் என்று குறுகியதுபோல், தாள்> தள்  = தள் + அம் > தளம் என்றும்
காணலாம். பல சொற்கள், அதிலும் அடிச்சொற்கள், தேவைக்கேற்ப‌
குறுகுதலும் நீளலும் இயல்பு ஆகும்.

ஒரு பெரும்படை தளம் அமைத்துக்கொள்கிறது. பல தளங்களையும்
அமைத்துக்கொள்கிறது. இது / இவை, படை அமைப்பின் வெளித்தள்ளுதல்கள், அல்லது வெளிப்பாடுகள். படையின் வளர்ச்சி காலில் வெளிப்பட்ட தாள் போன்ற வெளிப்பாடு.   மிக்கப் பொருத்தமான சொல். இதைவிடப் பொருத்தமான ஒன்றை இப்போது நீங்கள் அமைத்துப் பார்த்து வெற்றிகண்டால், அது சரியில்லை என்று சொல்லும் தகுதி உங்களுக்கு உண்டாகிவிடலாம்.  தாள் என்பது  base (பேஸ்) என்பதால், தளம் பேஸ் ஆகிவிடுவது கன பொருத்தம் .பேஸ்   base =  அடியாகும்.

தளத்தில் பதிந்துகொண்டு, பொதிந்துகொண்டு, உள்ளிருந்துகொண்டு,
நடவடிக்கைகளைச் செலுத்துபவன் தளபதி.  அவன் செலுத்திய அதிகாரச் செயல்களின் தாக்கத்தால், பதி என்பதற்கு அதிகாரப் பொருளடைவு உண்டாயிற்று என்று அறிக.

ஒரு படைத்தளம் ஒரு பெருங் கட்டிடக்  கோவை  (building complex location) யாகவும் இருக்கலாம் .  கூடாரங்களாகவும் இருக்கலாம்;  திறந்த வெளியாகவும் இருக்கலாம்.  படை மறவர் அங்கிருப்பது கொண்டே அது தளம் ஆகிறது.

பத்துத் தளங்கள் கொண்ட படைப்  பெரியோன் இராவணன்.  தளம்  தலம்  ஆகி தலம்  தலையாகி  கற்பனைவாதி  அதைப்  பத்துத்தலை இராவணன்  ஆக்கிவிட்டான்.

இராவணன் பற்றுதல் -  பெண் பற்றுதல் உடைய தலை (மண்டை) உடையவன் பற்று > பத்து.   பத்துத் தலை  என்று  இரு பொருள்..

பற்றுதல் > பற்றுதலை > பத்துதலை (பேச்சுவழக்கு) > பத்துத்தலை (திரிபு)> பத்துத்  தலை (பிறழ்பிரிப்பு).

அதாவது பற்றுதலை என்பது பத்துத் தலை ஆகிவிட்டது.

பற்றுதலை என்பது   விடுதலை என்பதுபோன்ற சொல்.  இறுதி தலை என்பது தல் + ஐ.  இரண்டும் விகுதிகள்.  தலை என்ற உறுப்பு அன்று.


தளபதி > தள்பதி > தள்பத்  (பின்னவை வெளித்திரிபுகள் )

LAST EDITED ON 9 OCT 2017.









சனி, 26 நவம்பர், 2016

வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான்

வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான்
மடியில் விலைப்பொருள் சுமைவிலக்கி
உழைப்பினில் கைவரு பொன்னணிகள்
ஒன்றையும் உடன்கொடு நடைத‌விர்ப்பாய்
விழிப்புடன் ஜொகுர்நகர் க‌டந்துசெல்வாய்
இழப்புகள் இலாத பிழைப்புறுவாய்
அழைப்புடன் நிற்பவன் எவனவனோ
அவன்நாம் கலங்கிடும் கள்வனல்லோ 


தொழில்தனைச் செய்பெறும் ஊதியத்தில்
தோல்வியில் லாதொரு தூய்மையிலே
எழில்பெற இப்புவி வாழ்கவெனும்
ஏற்புறு கொள்கையும் வீழ்படுமோ
விழிதரும் ஒளியினி ஒழிவுறுமோ
வீண்மகார் பல்கிடும் உலகிதிலே
கழிநிலைச் செய்கையர் பொழுதிதுவோ
கண்கெடு நடபடி விழுதிடுமோ

வெள்ளி, 25 நவம்பர், 2016

நடு ( நடுதல் ) நட ( நடத்தல்)

 நடு ( நடுதல் )  நட ( நடத்தல்).

மரம் நடுதல், செடி நடுதல், நாற்று நடுதல். இச் சொல்வழக்குகளிலெல்லாம் நடுதல் என்பது மண்ணில் ஊன்றுதல் என்று
பொருள் தருகிறது. நட்டபின் செடி முதலியவை அங்கிருந்து அசைவதில்லை. அப்படியே வளர்கின்றன அல்லது வளராது அழிகின்றன.

மனிதன் மற்றும் விலங்குகள் காலைத் தரையில் ஊன்றி நிற்பதும் நடுதல்
போன்றதே.  வேறுபாடு யாதென்றால், காலை மண்ணில் புதைப்பதில்லை.  நட்டு இருக்கும் இடத்திலிருந்து மனிதன், விலங்குகள் அசைகின்றன.
இப்படி அசைகின்ற நிலைக்கு நடு என்ற சொல் போதவில்லை, அல்லது
அசைவுக் கருத்தைத் தெளிவாகக் காட்டவில்லை.


ஆகவே நட்ட ( நின்ற) இடத்திலிருந்து அப்பால் அசைவைக் குறிக்க‌
நட என்ற சொல் பிறந்தது.   இது நடு_+ அ, காலை நடு, நட்டு அங்கு
போ. ஆகவே நட ஆயிற்று.

நடு என்ற சொல்லினின்று நட என்பதைப் பிறப்பிக்க, அ என்ற சுட்டு
சென்று இணைந்து பயன்பட்டது காணலாம். இயங்கு என்பதில் இ (இங்கு) +  அ (அங்கு)  + கு (வினையாக விகுதி).= இயங்கு ,இதுபோலவே   நடு + அ (அங்கு) >  நட ஆனது.


எனினும் நடிப்பவன் ஓரிடத்திலிருந்து நடிக்கும்போது இன்னொரு திசை
நோக்கிச் செல்லாமல், குறிப்பிட்ட இடத்தினுள்ளேயே அவன் வேலையைச் செய்கிறான். அவனைப் பார்ப்பவர்கள் (இரசிப்போர்) எங்கு
இருந்து அவனைக் காண்கிறார்களோ, அவன் அங்கேயே தன் அசைவுகளைக் காட்டவேண்டுமே. தெருவில் நடித்துக்கொண்டிருந்தால்
வயலுக்கு ஓடிவிட முடியுமா என்ன? அவன் நிலை ஒரு கட்டுறுத்திய‌
நிலை.  எனவே, நடு ( காலூன்றிய நிலையில் )  + இ (இங்கேயே) = நடி (செய்வது செய்) என்று சொல் அமைந்தது காண்க.  இ என்பது ஒரு
சுட்டுச் சொல் தான்.(பொருள் ஏற்படும்போது ஓர் எழுத்தும் சொல்லாகிவிடும்.)

இதன்மூலம் நடி என்பது நடு + இ என்று இணைப்பில் பிறந்த சொல் என்பதை நன்குணரலாம்.

சந்திப்போம் .



வியாழன், 24 நவம்பர், 2016

வாண்டாய் இருக்கையில்

வாண்டாய்  இருக்கையில் வண்டிச் செலவாசை
தூண்டா  நிலையிலும் துள்ளிக் குதித்தோடி
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே
மாண்டாட் கிரங்கு மனம் .

(இது  மகிழுந்தில் பயணிக்கும் ஆசையினால் முன்பின் அறியாதவன்
 அழைக்க அவனுடன் சென்று  ;அவனால் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் துன்பக்கதை. உலகம் பொல்லாதது.  இப்படி எத்தனை நிகழ்வுகளோ)

வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே:

ஒவ்வொரு சீரிலும் நெடிலில் தொடங்கும்படி தொடுத்ததனால் இது நெடில் வண்ணம். தொல்காப்பியர் காலத்தில் வண்ணங்கள் இருபது. "வண்ணம்  தானே நாலைந்தென்ப "  என்பார்   அவர். பிற்காலத்தில் இவை பெருகின.


நாடறிந்த யமனிவனை.....

பொசுக்கென்று போனதுயிர் என்று சொல்வாய்;
போனதற்கோர் காரணமும் கண்டு சொல்வாய்;
கொசுக்கடியோ கேட்டறியத்  தப்பொன் றில்லை;
கூடிவரும் இமைகளுக்குக்  கேடே  செய்ய
விசுக்கென்று பறந்துவந்து விங்ஙீ   என்று
விரைந்தொலியோ டகல்கின்ற கூர்த்த பல்லன்
நசுக்கடியாய் இயலாதே கொல்வ தற்கும்
நாடறிந்த யமனிவனைக் கட்டுள் வையே.

புதன், 23 நவம்பர், 2016

நல்லறி வுடையோர் வறுமை

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் 
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;  
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

புறநானூறு 197, கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்  பாடியது து:(   சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை), : பாடாண்திணை, : பரிசில் கடாநிலைத்துறை

பாடலின் பொருளைப் புரிந்துகொள்வோம்.

இவுளியொடு  ~ குதிரைகளுடன்;
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல்  - வீசும் கற்றினைப் போல் விரைந்து வழிச் செல்லுகின்ற;
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ    ~    கொடிகள்  மேலே ஆடிப் பறக்கும்  தேருடைய அரசர்கள்  என்றாலும்;
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு  கடலைப் போன்ற தோற்றம் தருகின்ற ஒளி வீசும் படைக்கருவிகளையுடைய்  படையுடன்;
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ -   மலையை எதிர்க்கும் மலைபோன்ற  யானைகளை உடையோர் என்றாலும்; 
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு        ` யாரும் அஞ்சுகின்ற இடிபோலும் போரிடும் பேரொலியைக் கிளப்புகின்ற  முரசுகளுடன்;  (உரும் ~ எண்ணத் தோன்றுகிற )
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ  ~  படைத்திறன் காட்டும் வெற்றியுடையார்   என்றாலும்; 
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே  ~     மண்ணாள்கின்ற படையுடைய அணிகள் பூட்டிய முடியரசரர்களின் வெண்கொற்றக் குடை காட்டும் செல்வச் செழிப்பினைக் கண்ணுற்று மலைத்து நிற்றலோ அது நம்மிடம் இல்லையே!
எம்மால் வியக்கப் படூஉ மோரே  -  அப்படியானால் யாங்கள் யாரைக் கண்டுதான் அசந்துபோவோம் என்று கேட்கிறீர்களா?   அது: 
 எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே  ~  எங்கள் வாழ்வின் உறுபவைகளை அறிந்து ஏற்றபடி எங்களைப் போற்றிக்கொள்ளும்  பெற்றியுடையாரையே யாங்கள் கண்டு மலைத்துப் போற்றி உயர்த்தி எண்ணி நிற்போம்;    அவர்கள்: -
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்று அடகு  ~ முள் அகற்றாது விடப்பட்ட  பின் தோட்டத்தில் செம்மறி ஆடு மேய்ந்து  மிஞ்சிக் கிடக்கும் வளமான  பறித்த இலைகள் ;
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்  - புன்செய் நிலத்து வரகு  உணவோடு  கிட்டுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும்  -  ஒரு சிற்றூரின் ஆட்சியாளர் ஆனாலும்;
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்  -  எத்துணை துன்பம் வந்தாலும் எம் பால் பற்றுணர்ச்சி இல்லாதவரின் பொருளை எண்ணிப்போகமாட்டோம்

நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!  ~  இதனை, பெரும யாம்  நல்லறிவு உடையோர் நல்குரவு நனி பெரிதே! உவந்து உள்ளுதும் ,என்று மாற்றிக்கொள்க.


பரிசில் = மன்னன் புலவர்க்கு அளிக்கும் கொடை.  அது கிட்டாத நிலையைப் பாடியதனால் பரிசில் கடாநிலை. கொடை மன்னனைக் கடந்து புலவர் கைக்கு வரவேண்டும்.  அது அங்ஙனம் கடந்து வாராத நிலையே  பரிசில் கடாநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்..
blocked by error ,messages.  will return after repair.

A stanza from Puram on pulavar vaRumai.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்வறுமை 
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

புறநானூறு 197,  கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்  பாடியது.
திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை

 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப்  பாடியது

 

இவுளியொடு  ~ குதிரைகளுடன்;
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல்  - வீசும் கற்றினைப் போல் விரைந்து வழிச் செல்லுகின்ற;
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ    ~    கொடிகள்  மேலே ஆடிப் பறக்கும்  தேருடைய அரசர்கள்  என்றாலும்;
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு  கடலைப் போன்ற தோற்றம் தருகின்ற ஒளி வீசும் படைக்கருவிகளையுடைய் படையுடன்;
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ -   மலையை எதிர்க்கும் மலைபோன்ற  யானைகளை உடையோர் என்றாலும்; 
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு        ` யாரும் அஞ்சுகின்ற இடிபோலும் போரிடும் பேரொலியைக் கிளப்புகின்ற  முரசுகளுடன்;  (உரும் ~ எண்ணத் தோன்றுகிற )
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ  ~  படைத்திறன் காட்டும் வெற்றியுடையார்   என்றாலும்; 
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே  ~     மண்ணாள்கின்ற படையுடைய அணிகள் பூட்டிய முடியரசரர்களின் வெண்கொற்றக் குடை காட்டும் செல்வச் செழிப்பினைக் கண்ணுற்று மலைத்து நிற்றலோ அது நம்மிடம் இல்லையே!
எம்மால் வியக்கப் படூஉ மோரே  -  அப்படியானால் யாங்கள் யாரைக் கண்டுதான் அசந்துபோவோம் என்று கேட்கிறீர்களா?   அது: 
 எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே  ~  எங்கள் வாழ்வின் உறுபவைகளை அறிந்து ஏற்றபடி எங்களைப் போற்றிக்கொள்ளும்  பெற்றியுடையாரையே யாங்கள் கண்டு மலைத்துப் போற்றி உயர்த்தி எண்ணி நிற்போம்;    அவர்கள்: -
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்று அடகு  ~ முள் அகற்றாது விடப்பட்ட  பின் தோட்டத்தில் செம்மறி ஆடு மேய்ந்து  மிஞ்சிக் கிடக்கும் வளமான  பறித்த இலைகள் ;
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்  - புன்செய் நிலத்து வரகு  உணவோடு  கிட்டுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும்  -  ஒரு சிற்றூரின் ஆட்சியாளர் ஆனாலும்;
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்  -  எத்துணை துன்பம் வந்தாலும் எம் பால் பற்றுணர்ச்சி இல்லாதவரின் பொருளை எண்ணிப்போகமாட்டோம்.
blocked by error ,messages.  will return after repair.