வெள்ளி, 30 ஜூன், 2017

வந்தஎல்லாம் எழுதவேண்டும்

வந்தஎல்லாம் எழுதவேண்டும் என்னும் உள்ளம்.
வாய்ப்பில்லை  வழிவிட்டால் தானே வெல்ல?
செந்தமிழைக் கணினியிலே சீராய்ச் செய்யும்
செவ்வெழுதி ஒவ்வாமைப் போரில் தொய்யும்!
இந்தநிலை எய்தியதால்  ஏய்ந்த எல்லாம்
ஏற்றுதலோ கூற்றுவன்வாய்ப் பட்ட வல்லோ!
மந்தநிலை வந்திடாமல் மாற்றி ஆக்கம்
மலர்விக்கும் எம்முயற்சி புலரு மாமோ!


பொருளுரை:

வந்த எல்லாம் --- மனத்தில் எண்ணிய எல்லாம்;
என்னும் உள்ளம் ---  என்று மனம் சொல்லும்;
வழி விட்டால்தானே---   (கணினி) ஒத்துழைத்தால் தானே;
வெல்ல ==  வெற்றி அடைய (முடியும் ).
செவ் வெழுதி === நல்ல எழுதி (  எடிட்டர்)
ஒவ்வாமை --- ஒத்துழைக்காமல் போதல்.
போரில் --   போராட்டத்தினால்;இழுபறியால் .
தொய்யும்----இயக்கத்தில் சிறப்பு கேடு அடையும்;
ஏய்ந்த ===  வந்து சேர்ந்த;
ஏற்றுதலோ --   வலைத்தளத்தில் வெளியிடுதலோ;
கூற்றுவன் வாய்ப்பட்ட  -  அழிவிற் பட்டன;
அல்லோ - அல்லவோ;
மந்த நிலை -- இயக்கம் கெடுதல்:
புலருமோ --  ஒளியில் மேல்வருமோ.

தோய்த்திரம் > தோத்திரம்

தோத்திரம் செய்வோம் நம்  ஆண்டவருக்கு!

இனித் தோத்திரம் என்ற சொல்லின் வந்தவழி அறிவோம்.

மிகவும் மதித்து வணங்குதல்/ தோத்திரம் ஆகும்.

தோய்தல் - மூழ்கிவிட்டதுபோன்ற ஓர் ஈடுபாடு.

திரம் என்பது விகுதி. இது திறம் என்பதிலிருந்து பெறப்பட்டது.

தோய்தல் -   ஆழ்ந்து ஈடுபடுதல்.

தோய்+ திரம் = தோய்த்திரம் > தோத்திரம்.

யகர ஒற்று மறைந்தது பெருவாரிச் சொற்களில் என்பதறிக.

வியாழன், 29 ஜூன், 2017

தோது என்ற சொல்லை ...........

இன்று தோது என்ற சொல்லை அணுகுவோம்.

" இன்றைக்கு எப்படி?அவரைப் பார்த்துப் பேச முடியுமா? அவருக்கு எப்படித் தோது என்று தெரியவில்லையே!"

இப்படிப்  பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

தோது எனற்பாலது ஒரு தொடர்புக்கான வசதியைக் குறிக்கிறது.  தோதில்லை என்றால், அத் தொடர்பில்
ஈடுபடத் தருணமில்லை என்று பொருள்படும்.

தோது என்பது தோய் என்ற  வினையுடன், து என்னும் விகுதி சேர்ந்தது.  விகுதி சேர. யகர ஒற்று மறைகிறது.

தோய் >  தோய்து >  தோது.

இது பெருவரவினது அன்றோ?

இப்போது யகர ஒற்று மறைந்த சில சொற்களை நினைவு
கூர்வோம்.

தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.

எல்லாம் பட்டியலிட நேரமில்லை. படிக்க உங்களுக்கும்
நேரம் கிட்டுவது கடினம்.

புதன், 28 ஜூன், 2017

ரீதி.

இன்று ரீதி என்ற சொல்லைப் பார்க்கலாம்.

ரீதி என்ற சொல் உள்ள நிலைமை என்று பொருள்படும்.  "குடியுரிமை பெற்றவர்தாம் சங்கத்துக்குத் தலைவர் ஆகலாமென்ற  ரீதியில் பேசுவது தவறு. காரணம் நம்
சட்ட திட்டங்களில் அப்படி இல்லை"  என்ற வாக்கியத்தில்
ரீதி என்பது என்ன பொருளில் பயன்பாடு கண்டிருக்கிறது
என்று கவனியுங்கள்.

இருக்கும் நிலை என்பதே ரீதி ஆகும்.

இது இருதி என்ற சொல்லின் திரிபு.  இறுதி என்பது வேறு.

இருதி என்பது தன் தலையை இழந்ததுடன், ரு என்பது
ரீ என்று திரிந்துவிட்டது.

இருதி > ருதி > ரூதி > ரீதி.

இரு என்பது மலையாளத்தில் இரி என்று திரியும். ஆகவே
இரு > இரி > ரீதி எனினும் பொருத்தமே.  இங்கு தி என்பது விகுதி.

இரு + ஈ + தி =  இரீதி   எனின்,  இருப்பனவாகிய தன்மைகள் ஈயும் (கொடுக்கும்)  போக்கு என்று வரும். இதுவும் ஏற்புடைத்தே.  இது ஒரு பல்பிறப்பி ஆகும்.

இதைமேலும் விளக்கலாம்  எனினும் இதுவே போதுமானது.

செவ்வாய், 27 ஜூன், 2017

சொப்பனம்

சொப்பனம் என்ற சொல்லுக்கு  யாமெழுதிய
 ஆய்வுரை இப்போது கிட்டவில்லை.

மனிதன் உறங்கும்போது, கனவு கண்டு, சில
சொற்களைப் பன்னுவதுண்டு.  இது நன்றாக
ஒலிப்பதற்கும் உளறுவதற்கும் இடைப்பட்ட
 ஒரு நிலையாகும்.   பன்னுதலாவது
பல முறை ஒன்றைத் தடுமாற்றத்துடன் ஒலிப்பது.

சொல்லைப் பன்னுதல் >  சொற் பன்னம் .  சொப்பனம்
என்று இது வந்தது.

இது பேச்சு வழக்கு. பின் திரிந்து பொருளும் சற்று மாறி,
"கனவு" என்ற பொதுப்பொருளில் வழங்கி வருகிறது.
இச்சொல்லுக்குச்   சிவஞானபோதம் முதலிய நூல்கள்
வேறு பொருளை உரைப்பதுண்டு. ஆனால் அது தத்துவப்
பொருளாகும்.

சொப்பனம் என்பது  சொற்பனம் என்றும் எழுதப்படும்.
 சொற்பனம் என்பதே முந்துவடிவம் ஆகும்.
ஸொப்பனம்,  ஸ்வப்பனம், ஸொப்னம், ஸ்வப்னம்
என்று பலவாறு உருக்கொள்ளும் சொல் இதுவாகும்.


------------------------------------------------------------------------

Notes:

1.
சொப்பனம் என்பது ஆன்மா கழுத்தில் நின்று புலனுணர்ச்சிகள்
(   acts of   sense organs   ) ஒடுங்கி எண்ணங்கள் (   mind  )   ஓடும் நிலை
 ( சிவஞானபோதம் விளக்கம் )
More at:
https://sivamaalaa.blogspot.sg/2015/12/4.html.






அதிபர் டிரம்ப் President Trump

விருந்தாளி மோடியையே  விரிந்த  அன்பில்
மிகுந்தகை குலுக்கலுடன் புரிந்து  கொண்டார்;
திருந்தாத தீவிரத்தால் தெண்மை இல்லாத்
திரிபுள்ளம் கொண்டோரை இறுகக் கட்டும்
பெருந்தோதில் ஈடுபாடு பகிர்ந்து கொண்டார்;
அருந்துவதில் அவர்வேறு இவரோ வேறே
இருந்தாலும் குறையாதும் பொருந்தி டாமல்;
இவரிந்தப்  பார்ப்பணியை   ஏற்பச் செய்வார்.




ஞாயிறு, 25 ஜூன், 2017

குள் என்பதிலிருந்தே அமைந்த இன்னொரு கருத்து


குள் என்னும் அடிச்சொல்லிருந்து குண்டலம் ஈறாகப் பலசொற்கள் அமைந்திருத்தலை முன் இரு இடுகைகளில் கண்டோம்.  இப்போது குள் என்பதிலிருந்தே அமைந்த இன்னொரு கருத்து அளாவிய
சில சொற்களைக் காண்போம்.

குள் என்பது நீட்டக் குறைவையும் குறிக்கும்.

குள் >  குள்+து  =  குட்டு.

குட்டு என்பது இரகசியம் என்று பொருள்படும். அகத்துள் இருந்து வெளிப்படாததே இரகசியம். (இரு+ அக(ம்) + சி+ அம்).  இதில் சி, அம் என்பன விகுதிகள். இனிக் குட்டு என்பதென்ன எனில், நீளக் குறைவினால்  வெளிவராது உள்ளடங்கி  இருக்கும் விடயம் ஆகும்.  இது மிகவும்
எளிமையானதும் சற்று நகைச்சுவையானதுமாகும் ஆகும்.நீட்டமானால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்.  நீட்டக்  குறைவினால் வெளிவராது உள்ளிருப்பது என்று பொருள்.  இது புலவன் புனைவு அன்று. சிற்றூரான் சொல்லும் கருத்து.

குள் > குட்டு + அம் = குட்டம்.

நோயின் காரணமாக, விரல்கள் கை கால்கள் குட்டை ஆகி விடுகின்ற ஒரு நோய்.  இது பின்பு வேறு மொழிகளில் "குஷ்டம்" என்று மலர்ச்சி அடைந்தது.

குள் > குள்+து = குட்டு+ ஐ  = குட்டை

இங்கு து,  ஐ என்ற இரு விகுதிகள் சேர்ந்தன.  குறுஞ்சொற்கள் பின் ஒட்டிச் சொல் மிகுவதே விகுதி.   மிகுதி > விகுதி. ( விகுருதி அன்று)   ம-வ போலி.

குள் > குட்டு > குட்டி  (குட்டு+ இ ).

இளம் விலங்குகள் உயரமும் நீளமும் குறைந்தவை.

குள் > குள்+து+ ஐ = குட்டை.    (நீட்டக் குறைவு).

சனி, 24 ஜூன், 2017

குண்டலம் 2

குண்டலம் II

குள் என்ற அடிச்சொல் இன்னொரு பொருளையும்
தெரிவிப்பதும்  ஆகும். அது திரட்சிக் கருத்து.
உருண்டையாகத் திரண்டதும் குண்டு எனப்படும்.
இப்போது வெடிக்கும் எல்லாக் குண்டுகளும்
உருண்டு திரண்டனவாய் இருப்பதில்லை. சில
 நீட்டுருளையாகவும் கூர்முனையுடையனவாயும் 
உள்ளன.. என்றாலும் வெடிக்கும் தன்மை உடையன
 யாவுமே குண்டு என்றோ வெடிகுண்டு  என்றோ
குறிக்கப்பெறுகின்றன. இது ஒரு  பொருள்விரிவாக்கம் 
என்க.

பயங்கரவாதம், படையினர் மோதல் முதலிய பற்றிய
நாளிதழ்ச் செய்திகளில் சொல்லின் அடிப்படைக் 
கருத்தாகிய திரட்சி கருத்து மனத்தினின்று அகன்று 
வெடிப்பு என்பதே முன்னிலை பெறுவதால். இப்பொருள்
விரிவாக்கம் ஏற்படுகின்றதென்பது வெள்ளிடைமலை.

இனிச் சொல்லமைதல் எப்படியென்று காண்போம்.

குள் அடிச்சொல். திரட்சிக் கருத்தில்.

குள் + து = குண்டு. (திரட்சி.)

"தடி"யாக உள்ள பெண்ணை (தடிச்சி ) " குண்டுப்பாப்பா"
என்றும் குண்டாக இருக்கிறாள் என்றும் பேச்சு
வழக்கில் வருதல் காண்க.

குண்டு என்பது பெயர்முன் அடைமொழியாகவும் 
பயன்பெறும். -டு: "குண்டு மாரி"

வெடிமருந்து உள்ளடங்கு திரட்சியாகச் 
செய்யப்பட்டிருப்பதால்  வெடித்திரளை "குண்டு"
என்றனர்.

குண்டுவீச்சு = bombing

யப்பானியர் குண்டுவீச்சு என்பது வழக்கு.

இப்போது குண்டலம் என்ற சொல்லுக்குச் செல்வோம்.

காதணி, தோடு, குழை,  கடுக்கன், மஞ்சிகை என்று
பல்வேறு பெயர்களாலும் குறிக்கப்பெறுவது குண்டலம்.,

குண்டு + அல் + அம் = குண்டலம்.

இங்கு இரு விகுதிகள் உள.

அல் என்பதை இடைநிலையாகவும் அல்லது 
இடைநிலை விகுதியாகவும் அம் என்பதை 
இறுதிநிலையாகவும் விளக்கலாம். இருவிகுதிகள் 
பெற்ற சொற்கள் பல.எம் முன் இடுகைகள் காண்க.

இங்கு குறித்த நகைகள் யாவும் திரட்சியாக்கங்கள்
திரண்டு குண்டுபோலுமிருத்தலால் குண்டலம் 
ஆயின. இது  பொருத்தமான சொற்புனைவு ஆகும்.

வான், அல்லது காயமும் (ஆகாயமும்) புவியைச் 
சுற்றித் திரண்டிருத்தல்போல் தென்படுதலால்
இது ஆகாயத்துக்கும் பெயரானது. நிலவு, பகலோன் 
முதலியவை காயுமிடமே காயம் (ஆகாயம்
எனப்படுவது.


குள் என்னும் அடிப்பிறந்த சொற்கள் இன்னும் உள
இவற்றைப் பின்பு கண்டு இன்புறுவோம்.

வெள்ளி, 23 ஜூன், 2017

குண்டலம் I - ( குளம் முதல் குண்டலம் வரை )

குண்டலம் என்ற சொல் நாடோறும் வழங்கும் சொல் அன்று என்றாலும் சில பழங்கதைகளில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. இது எங்ஙனம் அமைந்தது என்பதைக் காணுமுன் இதன் அடிச்சொல்லான "குண்டு" என்பதை நடுவணாக வைத்து நாம் நம் ஆய்வினை மேற்கொள்வது எளிதாகவிருக்கும் என்று எண்ணுகிறோம்.

குண்டு என்பது பல்பொருளொரு சொல். இதன் பொருளாவன: ஆண், ஆண்குதிரை, ஆழம், சிறு நிலம், தாழ்செயல், நிறைகல், குழி, குளம், விதை, முட்டை வடிவமாய்க் கனக்கும் பொருள் -- என்பன.


குண்டு என்னும் சொற்கு குளம் என்னும் பொருளும் இருப்பதை மேலே காணலாம். இது எப்படி
ஏற்படுகிறது என்று காண்போம்.

குள் என்பது அடிச்சொல்.

குள் + அம் (விகுதி) = குளம்.
குள் + து = குண்டு. ஒப்பு நோக்குக: கொள் + து= கொண்டு. (எச்ச வினை).
குள் + து + = குட்டை. "குளம் குட்டை".(இணைத் தொடர்).
குள் > குழி.
குழிதல், குழித்தல்.

குளத்தைக் குறிக்கும் குண்டு என்பதும் குள் என்ற அடியினின்றே தோன்றியதென்பது இதன் மூலமாக விளங்கும்.

குழிவான நீர் தங்குகின்ற இடத்தையே இதுகாறும் விளக்கினோம். இன்னும் இதன் வேறு பரிமாணங்களையும் காணவேண்டும். அவற்றை அடுத்துக் காண்போம்


தொடரும்.

வியாழன், 22 ஜூன், 2017

பூடுவான் என்ற சொல்லை..............

பூடுவான் என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்வோம்.

பூடு என்பது பூண்டு என்பதன் இடைக்குறை என்றுதான் இலக்கண
நூல்கள் விளம்புகின்றன. பூண்டு > பூடு. இடை நின்ற ணகர
ஒற்று அல்லது மெய்யெழுத்து மறைந்தது. வான் என்பது
விண்ணைக் குறிப்பது. ஆனால் நாமெடுத்துகொண்ட 
சொல் இதைப் பற்றியதன்று.

இது பேச்சில் வரும் "பூடுவான்" என்ற சொல். ஓடிப்போய்விடுவான்
என்பது ஓடிப் பூடுவான் என்று வருகின்றது. இந்தப் பாணியில்
வேறு சொற்கள் அமைந்துள்ளனவா என்று இன்னும் தேடவில்லை.
இல்லை என்றுதான்  தோன்றுகிறது. போய்விடு என்பது பூடு என்று
 மாறுவதுபோல்  வேறு சொற்கள் இல்லை என்று தோன்றுகிறது.

இப்படிப் பல திரிபுகளைக் கொண்டது தமிழ். திரிபுகள் எவ்வளவு கட்டு
மீறி  இருந்திருந்தால் தமிழிலிருந்து பல மொழிகள் தோறியிருக்கும்
 என்று நினைக்கிறீர்கள்?

போய்வி >    பூ .

புதன், 21 ஜூன், 2017

பிரம்மை -ஆய்வு


பிரம்மை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

ஒரு வித அறிவு மயக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு, திடீரென்று அருகில் இன்னொரு மெய் அல்லது உடல் தோன்றி நிற்கிறது. அந்த மயக்குத் தெளிந்தவுடன் அம்மெய் மறைந்து போகிறது. இந்தப் பிற மெய்தான் பிற + மெய் = பிறமெய் ஆனது. இந்தப் பேச்சு வழக்குச் சொல்லை எடுத்து "பிறம்மெய்" > பிரம்மெய் என்ற சொல் உருவாக்கி மக்கள் மன்றத்திலே உலவு றுத்தப்பட்டது என்பது உணர்க.

ஒரு விடயத்தில் ( a thing)  சில உள்ளுறுப்புகள்  (factors)  இருக்கும். அந்த உறுப்புகள் அந்த விடயத்துக்கே உரியவையாய் இருக்கும். பெரும்பாலும் இத்தகைய நிகழ்வால் ஓர்  இடரும் தோன்றுவதில்லை. பிற பொருளின் உள்ளுறுப்பு  (external factor ) ஒன்று இவ்விடயத்தில் வந்து கலந்துவிட்டால் "பிற சினை" வந்துவிட்டது என்கிறோம். அதற்கு இனமல்லாத வேற்று உறுப்பு புகுந்து விட்டது. இதனால் "பிறச் சினை" ஏற்படுகிறது. அதுவே பிரச்சினை ஆகிறது. அதாவது பிற உறுப்பு வந்து இடர் விளைக்கிறது என்று பொருள். இதைப் பிரச்சினை என்பதை விட "பிறச்சினை" என்பதே உண்மை நிலை காட்டுவதாகும். இங்கும் அப்படியே வேறு இடுகையில் எழுதியுள்ளோம். இதில் இலக்கணப் புலவர் ஒரு மறுப்புத் தெரிவிக்கலாம். நடுவில் ஒரு சகர ஒற்றுத் தோன்றாது என்பதே மறுப்பு ஆகும். இது புதுச் சொல்லமைப்பு ஆதலின் இயல்பான புணர்ச்சி இலக்கணங்கள் இதற்கு ஏலாதவை என்று இம்மறுப்பைக் களைந்து விடுக.

இதைப் போலவே பிற மெய் எனற்பாலது பிரம்மை என மகர ஒற்றும் மிக்கு வந்து ஒரு புதிய சொல் அமைந்தது என்பது கண்டுகொள்க. இவை பேச்சு வழக்குச் சொல்லிலிருந்து கல்லி எடுக்கப்பட்டவையாதலின், மறுப்புகள் எழா.

பொய்ம்மெய் என்பதிலும் மெய் என்பது மை என்று திரிந்து பொம்மை ஆனதை மொழிநூலார் சுட்டியுள்ளனர்.

பெரு + மெய்  என்பதே  பிரம்மை என்றானது என்று  சிலர்  நினைப்பர் . பெரிய மெய் (உடல் ) முன் தோன்றுதல் -  எனினும் தமிழே    மூலம் .  



Tamil text editor could not render the author's  feed in   properly.

திங்கள், 19 ஜூன், 2017

stopping urinating in public results in murder!!

இழுத்தோடும் வண்டிக்  காரன்
இவன்பக்கல் வந்தான் "தம்பீ
கழிக்காதே நீரை யாரும்
காணப்பல் லோர்முன் என்றான்;
ஒழித்தேன்நான் உன்னை என்றே
ஓய்ந்தேனும் நோக்கான் ஆகி
அழித்தான்தபின் நில்லான் அந்தோ!
அகிலமும் செல்வ தெங்கே


Murders take place all over the world for many reasons.  A Rickshawala stopped someone
from urinating in public. That person turned round and killed the poor rickshawala for
saying it to him.

http://www.straitstimes.com/asia/south-asia/modi-demands-swift-punishment-for-murderers-of-rickshaw-driver-who-tried-to-stop?utm_source=Outbrain&utm_medium=CPC&utm_campaign=Test&xtor=SEC-23



ஞாயிறு, 18 ஜூன், 2017

Go to heaven now? சொர்க்கத்தைத் தாக்கிச் சில அறிவாளிகள்

எங்கே சொர்க்கம் என்று எல்லோரும்
 தேடிகொண்டிருப்பதாகச் சில சிந்தனையாளர்கள்
கிண்டலடிப்பதுண்டு.  எனக்குத் தெரிந்த வரை யாரும்
இப்படித் தேடிக்கொண்டு சாமி கும்பிடுவதாகத்
தெரியவில்லை.    ஓர்  அம்மையாரைக் கேட்டால்
அவர் மகன் நன்றாகப் படித்துத் தேர்வில்
வெற்றிபெற வேண்டும் என்று சாமிக்கு விளக்குப்
 போடுவதாகச் சொல்கிறார்.  சொர்க்கத்துக்குப் போவதற்காகச்
 சாமி கும்பிடுகிறேன் என்று சொல்வதில்லை.
இன்னொரு பெண்மணி என்ன வேண்டிக்கொள்கிறார்
என்றால் தம் கணவர் தம்மிடம் அன்பாக இருக்கவேண்டு
மென்பதற்காகச் சாமி கும்பிடுவதாகச் சொல்கிறார்.
புதிதாக ரொட்டிக்கடை வைத்தவர் கடை
நட்டமில்லாமல் ஓடவேண்டும் என்று
 வேண்டிக்கொள்கிறார்.   எல்லா விண்ணப்பங்களும்
இவ்வுலகில் தங்களுக்கு நிறைவேற வேன்டியவை
பற்றியனவாகவே உள்ளன. " நான் சொர்க்கம் செல்ல
 வேண்டும் "   என்று யாரும் கும்பிட வில்லை.

"சொர்க்கம்"   எப்போது வந்து "சாமி  கும்பிடுவ"   துடன்
இணைகிறது என்றால் யாராவது வீட்டில் இறந்துவிட்டால்
 அதற்கான சடங்குகளைச் செய்யும்போது
இறந்தவர் சொர்க்கம் செல்லக் கும்பிடுங்கள் என்று
 கும்பிடும் நிலையில்தான்.
 தமக்குச் சொர்க்கத்தில்   நம்பிக்கை
இல்லாதவரும் இத்தகைய சடங்குகளின்போது
கையெடுத்துக் கும்பிடுவதுண்டு.  ஆனால்
அப்போது சொர்க்கத்தைப் பற்றிய தீவிரச்  சிந்தை
 ஏதும் தோன்றுவதில்லை. சொர் க்கம் இருக்கிறதா
 இல்லையா என்பது  வேறு வேலையில்லாத
பகுத்தறிவுவாதிக்கு ஒரு பிறச்சினையே தவிர
சாமி கும்பிடுகிறவர்களுக்கு இல்லை.
சடங்குகள் செய்யும் பூசாரிகூட இதைப்பற்றிக்
கவலைப் படுவதில்லை.

பூசாரிக்கு அது வேலை.  சடங்குகளை முடித்துவிட்டுச்
சம்பள த்தை வாங்கி க்கொண்டு போய்விடுவார்.
இறந்தவர் வீட்டில்  இறந்தவருக்கு அந்தச் சடங்குகளைச்
செய்து முடித்துவிட வேண்டும் என்ற நிலை.  யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அலட்டிக்கொண்டு இருப்பவன் பகுத்தறிவுவாதிதான். இவன் பேசுவது ஒரு நேரம்
போக்கும் வேலையாகி விடுகிறது.  இப்  பேச்சு  இவனுக்கே பெரும் கவலையைத் தருகிறது.

இருப்பவர் எவரும்  தனக்குச் சொர்க்கம் வேண்டும் என்று
 கும்பிடுவதில்லை. இறந்தவர்க்கு ஏதேனும் செய்ய
முற்படுகையில்தான் சொர்க்கம் பற்றிய கொள்கை
தலைப்படுகிறது.  இறப்புக்குப்பின் ஒரு வாழ்நிலை
 உண்டா என்கிற ஆய்வு ஆன்மீகச் சிந்தனையாளனின்
கருத்திற்கு உட்பட்டது.  அது மக்களை ஆட்படுத்தும்
அல்லது ஆளும் கருத்தன்று. அது ஒரு பின்புலக்
கருத்துத்தான். அதனால் பகுத்தறிவுவாதி அதன்பால்
தொடுக்கும்  தாக்குதல், ஒரு குமுகப் பிறச்சினையை
அல்லது புரட்சியை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.


சொர்க்கம் இருக்கிறதா இல்லையா என்ற
 வாதம் எழுமானால் இருந்தாலும் இருக்கலாம்
 என்பதே பலரின் நிலை  ஆகும். உண்மையில்
 இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சொல்ல
முடிவதில்லை என்பதுபோலவே இல்லை
என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.
அது இறந்தபின் உள்ள நிலையாதலால்  இருப்பவரைப்
பாதிப்பதில்ல்லை.  சொர்க்கம் என்பது
ஒரு நம்பிக்கைப் பொருள்.


இப்படி வாதத்தில் நழுவு பொருளாக உள்ள சொர்க்கம்
இந்து மதத்தில் முற்றிலும் நழுவி நிற்கிறது.  இதற்குக்
காரணம், மனிதன் இறந்தபின் இந்து மதத்தில் மறுபிறவி
கொள்கிறான்.  பிறப்பறுத்தபின் தான் முற்றிலும் இறையுடன்
இணைகிறான்.  ஆகவே சொர்க்கத்தைத் தாக்கிச் சில
அறிவாளிகள் புனைந்த கருத்துக்கோவைகள்  புள்ளி இழந்த   கருத்துக்களாகிவிட்டன.

You may like:

https://sivamaalaa.blogspot.sg/2015/01/blog-post_15.html


Your preview failed to load

Please close this window and try again.

சனி, 17 ஜூன், 2017

We shall return soon.

Our browsers did not function properly yesterday and today.
Please be patient.
We shall return soon.

வெள்ளி, 16 ஜூன், 2017

பண்டை ச் சொல்லமைப்புகள்


----------------------------------------
ஆதிகாலத்தில் சொற்களை அமைத்தவர்கள் மிக்க
எளிமையாகச் சிந்தித்து மிக்க எளிமையாகவே சொற்களை
 அமைத்துக்கொண்டனர்.   சொற்கள் நீண்டுவிடாதபடி
 பார்த்துக்கொண்டனர்.   அதிக முன்னொட்டு
பின்னொட்டுக்களைக்    கொண்டுசேர்த்தல் 1  புதிய பதங்களில்
 புதுமையைப் பதிந்துகொள்ள ஓர் உத்தி 2  என்றாலும் அதுவே
 முன்மை உத்தியாகி நீட்சி மிக்குவந்தால், மொழி கடினமாகிவிடுமென்பதையும் மண்டையில்
இருத்திக்கொள்வது நலமாகும்.


இதனைக் காத்தல் என்ற சொல்லை ஆய்வதன்மூலம்
நாமறிந்து கொள்வோம். ஒரு வேடன் வேட்டையில்
கிடைத்த இறைச்சியை  குகைக்குள் கொண்டுபோய்ப்
பத்திரமாக வைக்கிறான்.  அவன் அதை அடுத்த
குகைவாழ்நனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாதவன்.
 வேட்டைக்கு ச்   சென்று அதை அடைய அடுத்த
குகைக்காரன் எந்த ஒத்துழைப்பையும் நல்காகாமையின்
அவனுடன் பகிர்ந்துகொள்ளுதலைத் தவிர்த்துவிடுகிறான்.
இதிலிருந்து பொருளைக் காத்துக்கொள்ளுதல்
என்னும் செயல்பாடு தொடங்குகிறது. காத்தலினின்று
பெறப்படுவதே தனியடைமை என்னும் தத்துவம் ஆகும். (The
concept of private ownership of property ).
அவனைக் கேட்காமல் அடுத்த குகைமாந்தன் அதை
எடுத்துகொண்டால் திருட்டு என்பது தோன்றுகிறது.
 இறைச்சியை வேட்டையாடிக் கொண்டுவந்தவனே
உழைத்தவன்.   மற்றவன் அதற்காக ஒன்றும்
செய்யவில்லை ஆதலால் உனக்கு ஏன் பங்கு
கொடுக்கவேண்டும் என்ற கேள்வி தோன்றிவிடுகிறது.
தன்பொருளினின்றும் பிறனை விலக்கிவைத்தலே
காத்தல் ஆகும்.


காத்துவைத்த பொருள் விருப்பத்துக் குரியது.  விரும்பாததை
எவனும் காத்துவைப்பதில்லை. இப்படிக் காக்கப்பட்ட
பொருள் என்பதை உணர்த்த கா என்ற சொல்லினின்று
காம் என்ற சொல் படைக்கப்பட்டது.  இது புலவன்
படைப்பு அன்று.  குகை மாந்தன் அமைத்த மிகப்
 பழைய சொல்.  அதனால் அதில்
 நாம் வெளிப்படையாக அறியத் தக்க முன்னொட்டு
 பின்னொட்டு என்ற இணைப்பு உறுப்புகள் ஏதும் இல்லை.
மகர ஒற்று என்ற மகர மெய்யெழுத்து மட்டுமே உள்ளது.
இது எளிமையான சொல்லமைப்பு.  வடிவம் என்பது
மறுக்கொண்ணாதது ஆகும். காத்தல் என்பதினின்று
காம் முற்றிலும் விலகாமல் ஒட்டிகொண்டிருந்த
 நிலையை   மாற்றி காம்  என்பதனோடு அம் என்ற
விகுதி சேர்த்து காமம் என்ற சொல்லை உருவாக்கினான்.
 இது புலவன் தந்த சொல்  நீட்சியாகும்.  
 கா > காம் என்பதே தொல்வடிவம்.
காமம் என்பதில் மகர ஒற்று நீங்கிய காம என்ற
வடிவம் ஒரு பெறப்பட்ட வடிவமைப்பு ஆகும்.
அது பிறமொழிகட்கு ஏற்ற ஒலியுடன் அமைகிறது.
காம் என்பதே கா என்பதிலிருந்து அமைந்த முந்து
வடிவமாகும். காக்கப்பட்டது விருப்புக்குரித்தாயிற்று
என்பதை அது காட்டப் போதுமானது. நாளேற நாளேற
அது பொருள் தேய்ந்து நின்றதனால் அதனைச் சரிசெய்யக்
காம் உறுதல் என்பது அமைந்தது.  காம் என்பது காத்தற்குரிய
எழுநிலையைக் குறிக்கின்றது. காக்கப்பட்ட பொருள்
அவ்வினையை அடைவதுதவிர வேறொன்றும்
செய்வதில்லை.  ஆகவே காம்  என்பது
சொற்பொருண்மையில் தன்வினை ஆகும். காத்தல்
என்பதே பிறவினைச் சொல் என்பதை அறியவேண்டும்.
 ஆயினும் காத்தல் எனற்பாலது பிறரை
விலக்குதலாகித் தான் வைத்திருத்தலாகிய
செய்கையையும் காமம் என்பதும் காம்
என்பதும் தன்வினையாகிய மனவுணர்வினையும்
அதாவது விருப்பத்தையும் குறிக்கின்றன.


இதே போன்ற அமைப்பைக் கொண்டதே சாமி
என்பதும்.  சாய்ந்து அல்லது  விழுந்து கும்பிடப்படுவதே
சாமி ஆகும். சாய்  > சாய்ம் >சாம் > சாமி
ஆனது. யகர ஒற்று மறைவது பெரும்பாலான சொற்களில்
உள்ளது. இவற்றைப் பலுக்காமல் மக்கள் சிக்கனம் செய்ததே
நிகழ்வு ஆகும். இதற்கும் காமம் என்பதற்கும் உள்ள வேறுபாடு
 இந்த யகர ஒற்றுத்தான். சாய்  என்ற சொல்லிலிருந்து
 வழக்கில் வந்து உலவும் திரிபுகள் சாஞ்சு  சாஞ்சான் .
போன்ற வழக்குகள்.   யகரம் வேறு எழுத்துக்களாக
 மாறுதல் தெளிவு. பொய்ம்மெய் என்பது பொம்மை
என்று மாறுதலும் யகர மெய் இழத்தலும் காண்க.

இனி வேறு சொற்களுடன் வந்து உரையாடுவோம்;

Earlier posts  or copies today  went missing;  this is a rewritten post.
Later the post coupons were subjected to frequent error message.
 An error occurred while trying to save or publish your post. Please try again

Footnotes:

1         Prefixes and Suffixes

2.    (உய்த்தி) (யகர ஒற்றுக்கள் வீழும் என்பதை
முன்பே கூறியுள்ளோம், மறவாதீர் )   - உத்தி

பண்டை ச் சொல்லமைப்புகள் 

புதன், 14 ஜூன், 2017

வயிற்றுடன் வாழ்தல் அரிது..... உதரம் என்பது

வயிற்றுடன் வாழ்தல் அரிது.....


இப்படி நம் மூதாட்டி ஒளவையார் கருதினார்.
வயிற்றை இடும்பைகூர் என்வயிறே என்கிறார்.
மனித வரலாற்றின் எல்லா நடவடிக்கைகளிலும்
வயிறன்றோ முன் நிற்கிறது? வயிறு இல்லா
விட்டால் உழைக்கவும் வேண்டாம்! பொருள்தேடவும்
வேண்டாம்!  எந்த நாட்டுடனும் எதற்கும் போரிடவும் வேண்டாம்....

பொருளியல் வரலாற்றை ஆராய்ந்தால் பல
போர்களுக்கும் பொருளே காரணமாய் இருந்
திருக்கிறது. குடிமக்கள் தொழிலுக்கே அனுமதி;
("குடிசைத் தொழில்" )  ;
வெளிநாட்டுப் பொருள்களை உள்ளே விடமாட்டோம்
என்ற கொள்கையைப் பின்பற்றியதால், சீனாவுக்கும்
இந்தியாவுக்கும் போர் வெடித்தது.  உலகின் பல
 நாடுகளையும் தம் வசமாய் வைத்துக்கொண்டு
 பிற நாடுகளுக்கு வாய்ப்பு வழங்காமல் பிரிட்டன்
செயல் பட்டதனால்   (  well, the sun does not set in the
British Empire :  " Winston Churchill )   இந்த வளையத்தை உடைக்க
 ஓர்  உலகப் போர்  யப்பானுக்கும் செருமனிக்கும் தேவையாகிவிட்டது.....எல்லாவற்றுக்கும்
சோறும் ரொட்டியுமே முக்கியக் காரணங்கள் ஆயின.
ஆற்று நீரை வழங்கி வளம் தந்திருந்தால்  சோழன்
கரிகாலன் ஏன் போரிடவேண்டும்....சோறுதான்
மூலமென்று எண்ணிக்கொண்டு இனி
வரலாற்றைப் படியுங்கள்.

வயிறு என்பதற்கு இன்னொரு சொல் உதரம்
என்பது. உது: என்றால் முன் நிற்பது.  எல்லாவற்றிலும்
 வயிறே முன் என்று நாம் உரையாடினோம்.
வயிற்றுடன் வாழ்தல் அரிது.  ஆகவே  அரு என்ற‌
சொல்லுடன் அம் சேர்த்து, அரம் என்றாக்கி,
உது+ அரம் என்று இணைத்தால் உதரம் வருகிறது.
மனிதனுக்கு முன் நிற்கும்  அரிய பொருள் உதரம்.
 உது;  அரு + அம். அரு என்பதில் உகரம் கெட்டது.

செவ்வாய், 13 ஜூன், 2017

விள் ~( விடு என்ற ) அடிச்சொற்களை........

விள் ~(  விடு என்ற )  அடிச்சொற்களை ஆராய்வோம்.

விள்‍   >(9  விள்ளல்,  விள்ளுதல்  ( பொருள் :  சொல்லுதல்.  வெளியிடுதல் ).
விள் >  விளம்பு.  (விள்+பு:  இங்கு அம் என்பது சொல்லமைப்புச்
சாரியை).
விள்> விளம்பு > விளம்பரம்.  ( இங்கு அர்,  ஒலி என்பது பொருள். அம் என்பது விகுதி. அர்> அரற்று என்பதில் அரற்றுதல் ஒலித்தல் குறித்தல்
காண்க ). ஒலியால் வெளியிடுதல். பொதுவாக ஒன்றை வெளியிடுதல்).

விள்> விளை > விளைத்தல்.

விள் > விளி > விளித்தல்.

விள் >  வள்  ( இகரத்துக்கு அகரம் வரும் திரிபு).

விள்ளு >  > வள்ளு > வள்ளுவன்.

வெளியிடுவோன்:  அறிவிப்பு, குறிசொல்லுதல் முதலியன.

விள் > வள் > வள்ளி:   அன்பை வெளியிடுவோள்.

இருப்பவன் தான் வெளியிடமுடியும். ஆகவே வள் என்பது
பொருளிருத்தல், வளர்ச்சிகான திறமிருத்தல் இன்ன பிற தொடர்புக்
கருத்துகளையும் தழுவிற்று.

இன்னும் பல உள்ளபடியால் பின்னொருகால் தொடரலாம்.

நீங்கள் வாழக்கூடாதா?


உலகப் பெண்களே
பெண்களுக்குள் யாதோ  துன்பம்?
துன்பத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு
வைத்த கண்களை மூடாமல்
மூட உணர்வு நீங்கி

நீங்கள் வாழக்கூடாதா?


https://www.facebook.com/TheIndependentSG/


The Independent Singapore

2 hrs
A woman fell from the 19th floor of the Interlace Condominium at Depot Road yesterday evening. It is believed that she is a Myanmar national who was working as a foreign domestic helper in Singapore.





திங்கள், 12 ஜூன், 2017

கல்லெறி கலகரை

கல்லெறி  கலகரைக் கட்டிப் போடுதல்
காலம் காணாத குற்றமோ?
கல்லடி பட்டவர் பற்பலர் வீழ்வதைச்
சொல்லிப் புகழ்வதும் திட்டமோ?
சொல்லெறி வாளர்கள் நல்லதைக் கண்டிடச்
சொல்படைத் தலைவரைத் திட்டுமோ?
வல்லடி செய்தவர் தம்மை அடக்குதல்
மன்பதை நேயமாய்ப் பட்டதே.

ஞாயிறு, 11 ஜூன், 2017

"கர்ப்பிணி"

கருப்பிணி ‍~  கர்ப்பிணி.

நல்ல தமிழில் பேச ‍ எழுத வேண்டுமானால், கருப்பிணி என்றுதான்
சொல்லவேண்டும்.

பிணித்தல் என்பதன்  பொருள் பலவாகும்.  இங்கு  (கருப்பிணி ) அது "கட்டுதல்" என்ற பொருளில் வருகிறது.  கருவானது, உள்ளிருந்தும்
வெளியிலிருந்தும் கலந்து பெண்ணைக் "கட்டும்"  ஒன்றாகும் .  ஆகவே
பெண் கருவால் பிணிக்கப்படுகிறாள் (பற்றிக்கொள்ளப்படுகிறாள் ) என்பது
மிக்கப்  பொருத்தமே.

பிணி என்பதற்கு நோய் என்றும் பொருள் ஆனால் இங்கு அப்பொருள்
இல்லை.

மூலச்சொல்: பிண் என்பது. அதைப்     பின்னொருகால் கவனிப்போம்.

கருவினால் பிணிக்கப்பட்டவள் கருப்பிணி ஆகிறால். இது திரிந்து
"கர்ப்பிணி" ஆகிறது. இது பேச்சு வழக்குத் திரிபு. இதைப் பிறமொழிகள் மேற்கொண்டன.

பிணி என்பது முதனிலைத் தொழிற்பெயர்,  ஆகுபெயராய் பிணிக்கப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது. வேறுவழிகளில் விளக்குதலும் கூடும். எங்ஙனமாயினும் இறுதி வேறுபடாது. 

வெள்ளி, 9 ஜூன், 2017

சந்தர்ப்பம்

சந்தர்ப்பம் என்ற சொல்லை ஐந்தாண்டுகட்குமுன் இவண் பதித்திருந்தேன்.  அதற்கான விளக்கத்தில் பாதிக்குமேல் அழித்துவிட்டனர்.

போகட்டும்,  இப்போது அதனைச் சுருக்கமாகப் பதிவுறுத்துவோம்.

இதன் பழ வடிவம்: சமை தருப்பம் என்பது,

சமைந்த தருணம், அமைந்த வேளை என்றும் பொருள் கூறலாம்.

தருணம் என்பதும் தருப்பம் என்பதும் ஒன்றுதான், இவை  தருதல் என்பதை அடிப்படையாகக் கொண்டவை .

சூழ்நிலையோ இறைவனோ தந்த நேரம் அல்லது வேளையே தருணம்.

அதுவே தருப்பமும்  ஆகும்.

தரு+உண்+அம் = தருணம். உண் துணைவினை.
ஓர் உகரம் கெட்டது,

தரு+பு+அம் = தருப்பம்.

ஓர் "கிப்டட்"டைம்    gifted time என்க.

தருப்பம் என்பது வழக்கிறந்தது.

சமை+ தருப்பம் = சம்தருப்பம் = சந்தர்ப்பம் என்றானது.

இச்சொல்லை அணுகி நோக்க, அதன் பழம்பிறப்பு தெளிவாகிறது.

நல்ல அழகினை மறைத்தல் கைகூடுவதோ?

If not clear,please  register your comments for more explanation.

வியாழன், 8 ஜூன், 2017

மறையும் ஒலிகள் ‍ எழுத்துக்கள் --- வாத்து

சொல்லமைப்பில், சொல்லின் பகுதியில் உள்ள, அல்லது அமைத்தபின்
அச்சொல்லில் வருகின்ற ய‌கர ஒற்றுக்கள் இயற்கையாகவே மறைந்துவிடுகின்றன. இத்தகு மறைவு மக்கள் பேச்சில் ஏற்பட்டவை.
பெரும்பாலும்  மக்கள் நாவே , அந் நாவின் முயற்சிக் குறுக்கமே இதற்குக் காரணம். நன்கு சிந்திப்போமானால், ய‌கர ஒற்றுக்கள் இருந்து
அவற்றால் ஆகப்போவதும் ஏதுமில்லை. எனவே மக்களே சிறந்த
ஆசிரியர்கள் ஆகின்றனர். புலவர்கள் அவர்களிடமிருந்து இந்தகைய‌
சிக்கனத்தைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.


வாய் > வாய்+து+ அம் = வாய்தம் > வாதம்.: இங்கு ய் ஒழிந்தது.
 வாயினால் ஏற்படுவதே வாதம். அதிகம் பேசுவோனை "பெரிய‌
வாய்" என்பது வழக்கு. வாயாடி என்ற சொல்லும் இக்கருத்தையே
வலியுறுத்துவது. எடுத்துக்காட்டுகள் பல உள.

வாய்+தி =  வாய்த்தி > வாத்தி>  வாத்தியார் ( மரியாதைப் பன்மை).
வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்று பொருள். மொழிகளில்
எழுத்துக்கள் ஏற்படுமுன், வாயினாலே மொழியறிவு புகட்டப்பட்டது.

உப+ அத்தியாயி = உபாத்தியாயி என்பது வேறுசொல். இதை ஏன் வாத்தியோடு போட்டுக் குழப்பவேண்டும்?

வாய் + து = வாய்த்து > வாத்து.  வாயினால் குவாக் குவாக் என்று
கத்திக்கொண்டிருக்கும்---- சில வீடுகளில் வளர்க்கப்படும் பறவை. காட்டு
வாத்துகளுமுள.

சாய்த்தல்:  சாய்+து+இ+அம் = சாய்த்தியம் = சாத்தியம்.
இது மரம் சாய்த்தல் திறமுடையார் கண்ட வெற்றியினின்று விளைந்த‌
சொல்லாகும்.  து, இ, அம் என்பன விகுதிகள். "சாய்த்துவிட்டீரோ" என்பான் தமிழன்.  அப்படியென்றால் வெல்ல முடிந்ததோ என்று
வினாவுவதாகும்.

சாய்+தி =  சாய்தி > சாதி > சாதித்தல்.
சாய்+து+அன்+ஐ = சாய்தனை > சாதனை. சாய் தவிரப் பிற விகுதிகளாம்.

வேய்+து+ அம் =  வேய்தம் = வேதம். (வேயப்பட்டது). யகர ஒற்று
மறைந்தது.


வாய்ந்தி  வாந்தி

வாய்+இன் +தி :  வாய்ந்தி >  வாயின் வழித் திரும்புதல்,  அதாவது
தின்ற உணவு.  இன் என்பதில் இ தொலையும். இன் என்பதில் ஒற்று
மட்டும் நிற்கும்.  தி:  விகுதியும் திரும்புதல் குறிப்பும் ஆகும்.
திறமையாக அமைக்கப்பட்ட சொல். தெரியாதான் இதைத் தமிழன்று
என்பான். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத,பிற்காலப் புனைவு.

பேச்சுத் தமிழ்த் திரிபுகள் மட்டும் உலகில் பல மொழிகளைப் படைக்கப்
போதுமானவை. இற்றை ஆய்வாளர்கள் இதனை முழுமையாய் இன்னும்
உணரவில்லை என்பதே உண்மை.

வேகமும் தீவிரமும்

உத்வேகம் என்ற சொல்லைப் பாருங்கள்; .

இதில் வேகம் என்பது தமிழ். உ என்பது சுட்டடி மூலச்சொல். உது: உந்து.   முன் செல்லும் வேகம்,  அதை உலகுக்கு அளித்ததும் தமிழே.

எதுவும் வெந்து சாம்பலாவதால் விரைவில் அழிந்துவிடும், எனவே
வேகுவித்தல் விரைவு குறித்தது. வேகு + அம் =  வேகம் ஆயிற்று.

நாளடைவில் இச்சொல் வேவிப்பதனால் மட்டுமின்றி எவ்வழியில் விரைவு நேரினும் அதைக் குறிக்கும் சொல்லாய் மாறியது.

தீயே விரைவுக்கு வழி என்பதைத் தீவிரம் என்ற சொல்லும் காட்ட‌
வல்லது.  இதன் முன் நிற்கும் சொல் தீ.  எந்த வாதமாக இருப்பினும்
பைய மெள்ள அணுகாமல் சுட்டுப் பொசுக்கும் வேகத்தில் செல்வதே
தீவிரம் ஆகிறது.விர் > விரை;  விர் >  விரம், விர்ரென்று போகிறான்
என்ற வருணனை விர் : விரைவு குறிப்பதே, விரைவு என்பதென்ன>
ஒரு மணிக்கூறினுள் முடிக்கத்தக்கதை ஒரு நிமிடத்தில் முடித்தால்
அதுவே விரைவுக்கு உதாரணம்,  எல்லா விரைவுகளும் காலச்சுருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை,

ஆங்கிலத்தில் உள்ள எக்ஸ்டீரிமிஸம் என்ற சொல் நுனிக்குச் செல்லுதல் என்று பொருள்படுவது, ஒற்றை ப் பிறனுக்குத் தெளிவுறுத்துவதில் முழு இட அளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆனால் மற்ற இடங்களினூடு செல்லாமல் நுனிக்குச்
சென்றுவிடுகின்றனர் அல்லது இறுதி நிலைக்கு ஏகிவிடுகின்றனர்
என்பது இதன் விளக்கம்,

எல்லாத் தீவிரவாதிகளும் எடுத்துக்கொண்டதை விளக்க ஒன்று காலத்தைச் சுருக்கிவிடுகிறான்; அல்லது இடத்தைச் சுருக்கிவிடுகிறான். அவன் சொல்வது சரியென்று ஏற்கும் வரை அவன் காத்திருப்பதில்லை.. அவனுக்கு அவன் கொள்கை உடனே ஏற்கப்பட‌
வேண்டும்.  இதையே இடச்சுருக்கமும் காலச்சுருக்கமும் காட்டும்
இச்சொற்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் வேக‌ம் மற்றும் தீவிரம் என்ர சொற்ள் விளக்கப்பட்டன, 

புதன், 7 ஜூன், 2017

உந்தி விளைப்பது தீவிர வாதமோ!

பழம்பெரு மைபல பயின்றொளிர் நாடுகள்
பல்கிய மண்ணே வல்கலை நண்ணிலம்;

சட்ட மெனபதைக் கட்டி எழுப்பி
அசத்திய நாடு மெசோபோட் டேமியம்.

அம்மு ராபி அமைத்திட் டருளிய‌
குற்றச் சட்டங்கள் எற்றெனக் கேள்நலம்.

இந்த நாடுகள் இற்றை நிலையில்
உந்தி விளைப்பது தீவிர வாதமோ.

உண்மை உணரா வண்க ணாளர்கள்
உளுத்துப் பெருகினர் உலகின் மீதில்.

ஈரான் மன்றிலும் தீவெடி கூட்டினர்;
ஆராத் துயரே அகலுள் அனைத்திலும்

பாரத எல்லையில் பதட்டம்; ஆங்கு
ஊரினர் யார்க்கும் கூருகுண் டச்சம்,

அன்பின் வழியது உயிர்நிலை மறந்தார்
துன்பில் துவண்டார் உலகும் இருண்டது;

இனி இவ் வுலகம் மீளுமோ
கனிதொலைத் தவர்க்குக் காயே உளதே.

செவ்வாய், 6 ஜூன், 2017

வாயு. வாய் என்ற‌ தமிழ்ச்சொல்

வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

பேச்சு வழக்கில் வாயு (காற்று) என்ற சொல் வருவதில்லை
என்றாலும் "வாயுபகவான்" என்று குறிக்கும்போது, வாயு 
என்ற சொல் வருகிறதுவாயு என்பது காற்று.   வாயிலிருந்து
வெளிவரும் காற்றையே தொடக்கத்தில் தமிழர் வாயு 
என்றது தெரிகிறது. இது பின் காற்று என்ற‌ பொதுப்பொருளில்
 வழங்கிற்று. எனினும் செந்தமிழாகக் கருதப்படவில்லை.

நிலவியலார் இப்போது காற்று ஓர் இடத்திலிருந்து கிளம்புவது என்று
சொல்வர். எனவே இடத்திற் பிறப்பது வாயு. வாய் என்ற‌
தமிழ்ச்சொல் இடம் என்றும் பொருள்படுவதால், வாயு என்பது 
"இடத்தில் தோன்றுவது" என்று பொருள்விரிக்க வசதிதருகிற 
சொல் ஆகும்

தமிழ் ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் வழங்கிய மொழி என்பர் சில ஆய்வறிஞர். வாயு போலும் சொற்கள் எங்கும் வழங்குதல் காண்கையில் இஃது உண்மை என்றே அறிக. பிறமொழிகளிலும் இச்சொல் வழங்குவது தமிழின் பெருமைக்கு ஒரு சான்றாகும்.

Preview and edit not available.  We are just posting it. Read and enoy. Any errors will be
rectified later.  Sorry about this.

சனி, 3 ஜூன், 2017

சத்திரம்.

சத்திரம் என்ற சொல்லைச் சில ஆண்டுகளின் முன் யாம் விளக்கியிருப்பினும், அது இப்போது கிட்டிற்றிலது.  அதனால்
ஈண்டு மறுபார்வை செய்தல் நலமே.

நெடும்பயணம் செல்வோர் வீட்டில் தாம் பயன்படுத்தும் பெட்டி படுக்கை எல்லாவற்றையும் மூட்டைகட்டிக் கொண்டுசெலல் இயலாததே. பயணத்தை இடைநிறுத்தி.எங்காவது தங்கித்தான் செல்லுதல் ஒக்கும். யார் வீட்டிலாவது தங்கிச் செல்ல அனுமதி கிட்டுதல் அரிது, தங்கியிருந்து பொருள்களைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டால் என்செய்வோம் என்னும்
கவலையில் யாரும் நுழையவிடார். வீட்டில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய இடைஞ்சல் ஆகிவிடுமாதலால் என்ன செய்யலாம் என்னும் வினாவுக்கு விடையாகக் கிடைத்ததே சத்திரம். பெரும்பாலும் ஓர் இரவு தங்கிச் செல்வதற்குச் சத்திரமே தக்கது. இப்போது அழகிய மற்றும் வசதிகள் பலவுள்ள விடுதிகள் உள்ளன.

சற்று இருந்து போவதே சத்திரம்.  சற்று ‍~  சத்து ஆனது.  இரு+ அம்
என இரண்டும் இணைந்து இரம் ஆயின. இங்கு அம் என்பது விகுதி.
சத்து +  இரு + அம் = சத்திரம் என்று அழகிய ஒருசொல் ஆயிற்று.

அறிந்து மகிழுங்கள்.

வெள்ளி, 2 ஜூன், 2017

வீதம் HOW FORMED

இன்று வீதம் என்ற சொல்லை நுணுக்கமாக நாடுவோம்.

இச்சொல்லுக்கு எதுகையாய் ஒலிக்கும் மீதம் என்ற சொல்லைப்
பாருங்கள். இதில் வரும் மீ என்ற முதல்மிகு என்பதன் நீட்சித்
திரிபு ஆகும். பகுதியில் பகு பா என்று நீண்டு பாதி ஆனதுபோல்
மிகு என்பது மீ ஆனது. மிகு > மிகுதிமீதி > மீதி + அம் = மீதம்.
இங்கு மீதி என்பதன் இறுதி இகரம் கெட்டு இன்னொரு விகுதியைப்
பெற்றதுமிகு > மிகுதுமீது > மீதம்  என்று விளக்கினும்
இழுக்காது. காரணம் து என்பது ஓர் இடைநிலை விகுதியாக  அல்லது
சொல்லாக்க இடைநிலையாகப் பல சொற்களில் வந்துள்ளதை
இவண் முன் இடுகைகளைப் படிப்பார் உணரலாம்,

ஆனால் வீதம் என்பதில் உள்ள வீ ஏன்னும் நெடில் விகு என்பதன்
திரிபு அன்று. அது விழு என்பதன் திரிபு. அல்லது வீழ் என்பதன்
கடைக்குறைஎனினும் இதில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.
தொழுதி = தொகுதி என்பதால் ழுவும் குவும் பரிமாற்றத்திற்குரியவை.
வழு (வழுத்து ) என்பதும் வாழ் (வாழ்த்து) என்பதும் கண்டு தெளிக;
எனவே விழு என்பது வீழ், வீ என்று மாறும்.

இந்த வீ என்பது விழுக்காடு என்பதில் உள்ள விழு என்பதன் திரிபே.
எனவே வீ + து + அம்வீதம் ஆனது. இந்நிலையினின்று அது
விகிதம் என்று உருமாறியதுவிழுவிழு+ இது + அம் =விழுதம் >
விகிதம் ஆனது. இங்கு வீதம் என்பது மெருகூட்டப்பட்டது.

மறுபார்வை செய்த தேதி:  30.9.2017



வியாழன், 1 ஜூன், 2017

கோயில் பூசைகளும் மக்கள் சாமிகும்பிடுவதும்,



இது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான்.
இதைப்பற்றி என்ன‌ உரையாட இருக்கிறது என்று
எண்ணலாம். ஒருவரே போய் ஓர் அர்ச்சனைச் சீட்டைக்
கட்டணம் செலுத்தி வாங்கிப் பூசாரியிடம் கொடுத்து சாமி
கும்பிட்டுவிட்டு வந்தால் இடர்ப்பாடு எதுவும் ஏற்படாது.
பழ அர்ச்சனை என்றால் அதற்குள்ள கட்டணத்துக்குச்
சீட்டு வாங்கிக்கொள்வோம். தேங்காய் அர்ச்சனை என்றால்
அதற்கான கட்டணத்தைச் செலுத்திச் சீட்டுவாங்கிக்கொண்டு
பூசாரியைப் பார்ப்போம். ஆனால் விளக்குப்பூசை. சுமங்கலிப்
பூசை என்றெல்லாம் வரும்போது கோவிலார் பெரிய
கட்டணங்களை விதிக்கிறார்கள். உதாரணமாக ஒரு 
சுமங்கலிப் பூசை செய்யவேண்டுமென்றால் பத்தாயிரம்
வெள்ளிகள் (டாலர்கள் ) வரைகூட கோயில் பட்டியல்
போட்டுக் கட்டணமாக‌ வாங்கிக்கொள்கிறது.இவையன்றி
உபயதாரிகளும் பூ மாலை அலங்காரம் வாழைமரம்
தோரணங்கள்,   பங்கு கொண்டோருக்கு நினைவுப்
பரிசுகள்   என்று தனிச்செலவும் செய்கிறார்களாம் ;
பூசை முடிந்தபிறகு கோயில் சிப்பந்திகளுக்கும் வேட்டி
துண்டு கையில் ஒரு தொகை என்று கணக்கில் 
வராத செலவுகளும் செய்யப்படுதல் காணலாம்.. இந்தச் சிப்பந்திகளுக்கெல்லாம் கோயிலார் சம்பளம்
கொடுத்தாலும் தட்சிணை என்னும் தக்க இணையான
செலவுகளைச் செய்யாவிட்டால் அடுத்தமுறை
எதிலாவது காலைவாரி விட்டுவிடுவார்களோ
என்ற அச்சம் வேறு இருக்கிறதாம்.

அப்புறம் சாமிகளுக்குச் சாத்திய புடவை வேட்டி
துண்டுகளெல்லாம் எங்கே போய்விடுகின்றன என்பது
ஆய்வுக்குரிய விடயமாமவும் உள்ளதுஇப்படிப் பலர்
சேர்ந்து ஓர் உபயம் நடத்தி, அந்தச் செலவுகளைப்
பகிர்ந்துகொண்டூ கோயில் கட்டணமும் செலுத்தி,
கோயிலார் செய்யாமல் விட்ட காரியங்களுக்கும்
ஆன எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கொள்கிறார்கள்.

இவ் விரிந்த பூசைகளில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.
அவர்களுக்குப் பூசையில் பங்கு பெறுவதும் அன்னதானமும் (
அவர்களுக்குக் )  கட்டணமின்றிக் கிடைக்கிறது.  

ஒரு சாப்பாட்டுக்கு எட்டரை அல்லது ஒன்பது வெள்ளி
வீதம் உபயம் செய்கிறவர்கள் கோயிலுக்குக் கட்டிவிடுகிறார்கள்.
அதனாலே  பொதுமக்கட்குக் செலவில்லாமல் போகிறது .  இதிலும் குழப்படிகள் உண்டு. 300 பேருக்குக் காசு கட்டி 200 பேருக்கே
உணவு கிடைத்த‌ நிகழ்வுகளும் உள்ளனவாக‌த்  தெரிகிறது.


பூசையின்போது சாமிக்குச் சிலர் தாலிச்சங்கிலி, தாலி,
 காதணிகள், காப்பு என விலையுள்ள பலவற்றைத்
தானமாக வழங்குவதுமுண்டு, பெரும்பாலும் இவர்கள்
உபயதாரர்கள். இது கோயிலின் காசாளரிடம்
செலுத்தப்படாமல் பூசையின்போது அணிவிக்கப்படுவதால்,
அவற்றுக்குப் பெற்றுக்கொண்டதற்கான சீட்டுகள் யாதும்
சில கோயில்களில் வழங்கப்படுவதில்லை. எங்கள் பொக்கிடப்
பெட்டியில் வைத்திருப்போம் என்கிறார்கள்.  சிலகாலத்தின்
பின் இவற்றின் நிலை யாருமறியார்.

கோயிலாரே இத்தகைய உபயங்களை எடுத்துச் செய்யலாம்
கட்டணங்களை நேரடியாகப் பெற்று வருமானத்தைப்
பெருக்கிக்கொள்ளலாம் என்றாலும் தனியார்போல்
கூட்டத்தைச் சேர்க்கக் கோயில்களால் முடியாமற்
போகலாம். ----பகிர்ந்து செய்யும் பூசைகளில் பலரையும்
இணைக்கும் பாலமாக தன்னார்வமுடைய ஒருவரோ
இருவரோ இருப்பர். மற்றவர்கள் இவர்களின்
செல்வாக்குக்காகவோ நட்புக்காகவோ உறவுக்காகவோ
இறைப்பற்று பலன் கொடுத்து உயர்ந்து நிற்பதுபோல்
காணப்படுவதாலோ இன்ன பிற உணரப்பட்ட
நன்மைகளாலோ பங்குபற்றிப் பகிர்ந்து கொள்வோராவர்.
இந்தத் தன்னார்வப் பற்றரின் இடத்தை கோயில்களால்
நிறைவு செய்தல் இயலாது.

ஐயப்ப தெரிசனத்துக்குப் பல தனிக்குழுக்கள் செலவுகளைப்
பகிர்ந்துகொண்டு சபரிமலை வரை செல்கிறார்கள். பற்றர்கள்
வரும்போது செலுத்தும் காணிக்கைக்குப் பெற்றுக்கொள்ளப்
படும் கட்டணத்தைத் தவிரமற்ற எல்லா வரவு செலவுகளையும்
கோயில் உடையவர்கள் நிறுவாகம் செய்வது
இயலாத வேலை ஆகும்.

ஒரு பற்றன் அல்லது ஒரு குழுவினர் கோயிலுக்குச்
சென்று கட்டணம் செலுத்திச் சாமி கும்பிடுவது,
சட்டப்படி ஒப்பந்த அடிப்படையிலானது  ஆகும்.
பற்றனோ பற்றர்களோ விலை கொடுத்துச் சேவையைப் பெறுகிறார்கள்.அவ்வளவுதான்.

கோயில் பூசைகளும் மக்கள் சாமிகும்பிடுவதும்,

Will edit
message receoved"  An error occurred while trying to save or publish your post. Please try again